»   »  'அபி'யும், திரிஷாவும்!'

'அபி'யும், திரிஷாவும்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil


பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பெயர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'அபியும் நானும்' படம் தனது கனவுப் படம் என்று திரிஷா கூறியுள்ளார்.

Click here for more images

தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்காக புக்கெட் தீவுக்குப் போய் விட்டுத் திரும்பியுள்ளார் திரிஷா. இதுதவிர மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் கடந்த 2 வாரங்ளாக ரவிதேஜாவுடன் ஆட்டம் பாட்டமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

புக்கெட் தீவிலிருந்து புத்துணர்வுடன் சென்னைக்குத் திரும்பியுள்ள திரிஷா, வந்த சூட்டோடு, பிரகாஷ் ராஜின் அபியும் நானும் படப்பிடிப்பில் பிசியாகி விட்டார்.

இப்படத்தில் திரிஷாவின் அப்பா வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். திரிஷாவுக்கு அம்மாவாக நடிப்பது (முதலில் குஷ்புவைக் கேட்டார்கள், முடியாது என்று கூறி விட்டார்) மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி.

படப்பிடிப்பு தற்போது மூணாறில் தொடங்கியுள்ளது. திரிஷாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் இப்படத்தில் இருக்கிறார். திரிஷாவை மையப்படுத்தியுள்ள கதை என்பதால் ரொம்பவே ஈடுபாட்டோடு நடிக்கப் போகிறாராம் திரிஷா.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் குறித்து திரிஷா கூறுகையில், படத்தில் எனக்கு ஜோடி யார் என்பது முக்கியமல்ல. கதைதான் முக்கியம். அதைச் சொல்லித்தான் இந்தக் கதைக்கு என்னிடம் ஓ.கே. வாங்கினார் இயக்குநர் ராதாமோகன்.

இப்படத்தில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது எனது கனவுப் படம். இப்படி ஒரு கதையில்தான் நடிக்க வேண்டும் என ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். அப்படி ஒரு கதை இது. தமிழ் சினிமாவில் இப்படம் புதிய உயரத்தை எட்டும் என்றார் நம்பிக்கையுடன்.

பெஸ்ட் ஆப் லக் திரிஷா!

Read more about: thrisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil