Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கிருஷ்ணா குரூப் செய்த சாதனை...ஆதியின் வருங்கால மனைவி நிக்கி கல்ராணி பாராட்டு
சென்னை: கிளாப் படப்பிடிப்பில் தனது உடல் எடை 17 கிலோ குறைந்ததாக நடிகை கிருஷ்ணா குரூப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மேலும் அவர் கூறுகையில், இந்த படம் குழந்தைகளின் கனவு படம் என்றும், தன்னை எல்லோரும் பாப்பா என்று அழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆதி, கிருஷ்ணா குரூப் நடிப்பில் சமீபத்தில் ஒடிடியில் வெளிவந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் படம் கிளாப். இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கிருஷ்ணா குரூப், பிலிம் பீட் வினோத்திடம் அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம் .

வாழ்க்கையிலிருந்து மாறுபடும் கதாபாத்திரம்
கேள்வி: கிருஷ்ணா குரூப் தேர்வு செய்யும் கதாபாத்திரம் அனைத்தும் வெவ்வேறாக உள்ளது. எப்படி?
பதில்: நான் கதாபாத்திரத்தையும், கதையையும் பார்க்கும்பொழுது என்னை கவரக்கூடியதாகவும், அந்த கதாபாத்திரம் நம்முடைய வாழ்வில் எவ்வாறு தொடர்புடையதாக அமையும் என்பதை பொறுத்தும் தேர்வு செய்கிறேன். மேலும் எனது வாழ்விலிருந்து சிறிது மாறுபட்டு இருக்கும் கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்கிறேன். குட்டி, குட்டி ரோல் என்றாலும் கதையை பொறுத்து தேர்வு செய்கிறேன்.

சிறந்த விமர்சனம் பெற்ற படம்
கேள்வி: கோலிசோடா படம் குறித்து சில வார்த்தைகள்...
பதில்: கோலிசோடா படத்தில் நடித்த கதாபாத்திரமும் எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் எனக்கு அமைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. "பொண்டாட்டி நீ" பாடல் இன்றளவும் ரசிக்கும்படி அமைந்தது. இப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் குறித்து பல ஊடகங்கள் சிறந்த விமர்சனத்தை தந்தது எனக்கு பெருமை.

தங்களது வாழ்க்கையில் பொருந்தும்
கேள்வி: அழகு குட்டி செல்லம் தொடரில் நடித்தது குறித்து...
பதில்: விஜய்டிவியில் வெளிவந்த இந்த தொடரில் நடித்தது மிக சிறந்த அனுபவம். இந்த கதாபாத்திரமும் அனைத்து இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றது. நான் எங்காவது சென்றால் என்னை பார்ப்பவர்கள் கூறும்பொழுது, அழகு குட்டி செல்லத்தில் உங்களது கதாபாத்திரம் ரொம்ப பிடித்திருக்கிறது என்று பலரும் கூறினர். தங்களது வாழ்க்கையில் இந்த கதாபாத்திரம் பொருந்துவதாகவும் தெரிவித்தனர்.

கிளாப்- குழந்தைகளின் கனவுப் படம்
கேள்வி: விளையாட்டை மையமாக வைத்து நீங்களும், ஆதியும் நடித்து வெளிவந்துள்ள கிளாப் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது.
பதில்: என்னை பொறுத்தவரை இந்த படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக கருதுகிறேன். ஸ்கிரிப்ட் படிக்கும்பொழுது ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. படத்தை முழுமையாக ஸ்கீரினில் பார்க்கும்பொழுது முழுமையான திருப்தி ஏற்படுகிறது. இதற்காக கடுமையாக உழைத்த படக்குழுவுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் ஈடாகாது. இந்த படத்துக்கு ரிகர்சல் அந்தளவுக்கு கிடையாது. ஆனால் 2 மாதங்கள் டிரெயினிங் கொடுத்திருந்தார்கள். இந்த நேரத்தில் எனது கோச் மெல்வினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சியின்போது இருந்த கஷ்டம் ஷூட்டிங்கின்போது இல்லை. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்கவேண்டும் என்பது குறித்து தெளிவு படக்குழுவிடம் இருந்தது. இந்த படம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் கனவு படம். இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய கனவு. அதை நிறைவேற்று விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

இரண்டு மாதம் பயிற்சி
கேள்வி: நீங்கள் அத்லெட்டிக் வீரரா?
பதில்: நான் அத்லெட்டிக் வீரர் கிடையாது. எனக்கு அத்தெலட்டிற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. ஆனால் கிளாப் படத்தில் அத்லெட்டிக் வீரரின் பயிற்சியில் 0.1 டிரெய்னிங் எடுத்துள்ளேன் என்பது சந்தோஷம். இந்த படத்தில் நான் முதன்முறையாக மைதானத்தில் 100 மீட்டர் கூட ஓடவில்லை. ஆனால் நடிகை ஆதி போல் 400 மீட்டர் ஓட வேண்டும். இதற்காக இரண்டு மாதம் பயிற்சி எடுத்தேன். நல்ல ரிசல்ட் வந்தது. பயிற்சியின் காரணமாக 17 கிலோ உடல் எடையை குறைத்தேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படக்குழுவினர் என் உயிரை எடுத்து விட்டனர் என்றே கூறலாம் என்று சொல்லி சிரித்தார் . இன்று படத்தை பார்க்கும்பொழுது மனது மிகவும் திருப்தியாக உள்ளது என்று கூறினார் .
எனது பேவரைட் படம்
கேள்வி: உங்களுக்கு விளையாட்டு தொடர்பாக எந்த படம் பிடிக்கும்.
பதில்: தமிழ் மற்றும் இந்தியில் பல படங்கள் விளையாட்டு தொடர்பாக வந்துள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை விளையாட்டு மட்டுமல்லாது பொதுவாக "பாக் மில்கா பாக் " என்கிற ஹிந்தி படம் ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரம் எனக்கு அமைந்தால் கண்டிப்பாக அதை தவற விட மாட்டேன். கிளாப் என்கிற இந்த ஸ்போர்ட்ஸ் படத்தை பார்த்த நிக்கி கல்ராணி ,நடிகர் ஆதியின் வருங்கால மனைவி என்னை மிகவும் பாராட்டினார்.
கேள்வி: நீங்கள் எப்படி தமிழ் இவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்?
பதில் : நான் பிறந்தது பம்பாய். எனது பூர்விகம் கேரளா. ஆனால் தமிழ் இவ்வளவு அழகாக பேசுவதற்கு காரணம் நான் பணிபுரிந்த படக்குழு தான். அழகு குட்டி செல்லத்தில் நடிக்கும்பொழுது எனக்கு தமிழ் பேச தெரியாது. ஆனால் படக்குழுவில் ஒரு தாத்தா என்னிடம் கூறும்பொழுது, தப்பா பேசினாலும் பரவாயில்லை. ஆனால் பேசு பாப்பா என்று ஊக்கப்படுத்தினார். அதன் வெளிப்பாடே நான் தமிழ் அழகாக பேசுகிறேன்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/QvcGnEKvy1I இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் கிருஷ்ணா குரூப் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.