KPY Bala: எல்லா பக்கமும் ரவுண்டு கட்டுறாங்க.. போன் கால் ரெக்கார்டு மட்டும் வந்துச்சு.. ஆதவன் பளிச்!

சென்னை: நடிகர் KPY பாலா விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அவருக்கு எதிரான ஆதாரங்கள், அவருக்கு எதிரான பிரபலங்களின் குரல்கள் என்பது பல திசைகளில் இருந்தும் குவிந்து வருகிறது. அந்த வகையில் தொகுப்பாளரும், பலகுரல் கலைஞரும் நடிகருமான ஆதவன் அண்மையில் அளித்துள்ள பேட்டி என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

அதாவது அவர் அளித்த பேட்டியில், " தம்பி பாலாவுக்கு உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என்பது இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முதலில் பத்திரிகையாளர் உமாபதி இதைப் பேசும்போது நான் நம்பவில்லை. ஆனால் அவர் ஆதாரங்கள் என்று ஒரு சில விசயங்களை வெளியிடுகிறார். அதைப் பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. அதன் பின்னர் பாலா வழங்கிய ஆம்புலன்ஸ் நம்பரை செக் செய்து பார்த்தால் அது 30 ஆண்டுகளுக்கு முந்தைய வண்டி என்று தெரிந்தது.

Actor Aadhavan Interview He Delivers Dissopointment Thinks About KPY Bala Goes Trending

சுமார் 15 ஆயிரம் ஆம்புலன்ஸ்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அவர் யாருக்கு ஆம்புலன்ஸ் கொடுக்கிறார். இதன் மூலம் அவர் யாரைக் குறை சொல்ல வருகிறார் என்று உமாபதி கேள்வி எழுப்புகிறார். இவரது இந்த கேள்வி நியாயமானதாக பட்டது. மேலும் அவர் வழங்கிய எல்லாம் ஆம்புலன்ஸ்களும் இதே நிலைதான். மேலும் பெயிண்ட் செய்யும் போது தவறாக எழுதி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அதை எப்படி அவ்வளவு சாதாரணமாக பாலா சொல்லுகிறார் என்பதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

நல்ல ஆம்புலன்ஸ்: பாலா ஆம்புலன்ஸ் கொடுக்க நினைக்கிறார் என்றால் அதை நல்ல முறையில் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் அவர் ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உதவுகிற எண்ணம் கொண்ட பாலாவை வேறு யாரோ கார்ப்ரேட்டுகள் அவருக்குத் தெரிந்து பயன்படுத்துகிறார்களா? இல்லை பாலாவுக்கு இன்னும் தெரியவில்லையா என்று தெரியவில்லை. உமாபதி இன்னும் போன் கால் ரெக்கார்டுகள் எல்லாம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் முழுவதுமான ஆதாரங்களை வெளியிட்டால் நான் இன்னும் பேசுவேன். அதுவரை எனக்கு உள்ள சந்தேகங்களை மட்டுமே கேள்வி எழுப்புகிறேன்.

தானம்: தமிழில் பொதுவாகவே ஒன்று உள்ளது. அதாவது தனக்குப் பின்னர் தான் தானமும் தர்மமும். அப்படிப் பார்த்தால் பாலா தான் சம்பாதித்த அனைத்தையும் தானம் செய்துவிட்டு அதில் மிச்சம் மீதி இருப்பதை தனக்கு வைத்துக் கொள்கிறார். இது பல இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூட அவர் இப்படிச் செய்யலாம். ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது தான் மேலும் சந்தேகம் வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு பாலா தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Actor Aadhavan Interview He Delivers Dissopointment Thinks About KPY Bala Goes Trending

விளம்பரத்துக்காக: அதில் ஒரு டூ வீலர் வாங்கிய இளைஞரும், ஒரு ஆம்புலன்ஸ் குறித்தும் இரண்டு வீடியோக்கள் உள்ளது. ஆனால் பாலவும் இந்த விஷயத்தில் மிகவும் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போதுதான் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வரும்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேட்டியை பார்த்த பலரும், KPY பாலா விளம்பரத்துக்காக தான் இவ்வாறு செய்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பலர் அறம் நாடு யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் உமாபதி அளித்த பேட்டியையும் இணையத்தில் பகிர்ந்து பாலாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X