எல்லா புகழும் அஜித் சாருக்கே!.. வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன் பேட்டி
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
கலையரசன், சந்தோஷ், ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
மூவரும் படம் சார்ந்து பல்வேறு விஷயங்களை ஃபில்மி பீட் தமிழ் - க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில்
இயக்குனர் பா. ரஞ்சித் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் விரும்பி எழுதுவார், படப்பிடிப்பின் போதும் கூட தங்கள் பெயரை பயன்படுத்தாமல் தங்களுடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே தங்களை அழைப்பார் என கலையரசன் பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரே கெட்டப்
தொடர்ந்து பேசிய சந்தோஷ் தங்கள் மூவருக்கும் படத்தில் ஒரே கெட்டப் தான், ஆனால் ஆர்யாவிற்கு அப்படி இல்லை. இரண்டு விதமாக அவர் நடித்தது சவாலான விஷயம் என குறிப்பிட்டுள்ளார். முதலில் படத்தின் இரண்டாம் பாதியை எடுத்தோம், பின்னர் முதல் பாதியை எடுத்தோம் என சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.

வீரம் படப்பிடிப்பு
அதை தொடர்ந்து பேசிய ஜான் கோக்கன் வீரம் படத்தின் படபிடிப்பின் போது தல அஜித் கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தார். அன்று அவர் கொடுத்த அட்வைஸை தான் பின்பற்றி வருகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வந்துள்ள எல்லா புகழும் தன்னை ஊக்கவித்த அஜித் சாருக்கே சேரும் என பேட்டியளித்துள்ளார் ஜான் கோக்கன்.
நிறைய கதை
இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் வர வாய்புள்ளதா என்ற கேள்விக்கு, இது முக்கியமான இரண்டு பரம்பரையை பற்றியது, வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு 90, 95 வரை நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதனை பார்ட் 3, பார்ட் 4 என எடுக்கும் அளவிற்கு கதை உள்ளது என ரஞ்சித் சார் சொல்லுவார், பார்ட் 2 வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என கலையரசன் பேட்டியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











