Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சித்ராவுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல.. நடிகர்களுக்கு கவுன்சிலிங் அவசியம்.. அமித் பார்கவ் பேட்டி!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், நடிகர்களுக்கு கவுன்சிலிங் மிகவும் அவசியம் என நடிகர் அமித் பார்கவ் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.
கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ்.
மிருதன், என்னை அறிந்தால், குற்றம் 23 என ஏகப்பட்ட படங்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடல் எது? ரசிகர்களை தாளம் போட வைத்த டாப் 7 பாடல்கள் இதோ!

மன அழுத்தம் கூடாது
சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் மன அழுத்தம் தான். ஏகப்பட்ட வொர்க் பிரஷர் காரணமாக சில நேரங்களில் இதிலிருந்து தப்பித்தால் போதும் என உடைந்து போவதால் தான் தற்கொலை போன்ற எண்ணங்களில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர் என்றார்.

சித்ரா தற்கொலை
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் அமித் பார்கவ், நடிகர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வது 5 சதவீதம் மட்டும் தான். பல லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள சித்ராவுக்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் மட்டுமே வராது. நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வரும் என்றார்.

நடிகர்களுக்கு கவுன்சிலிங் தேவை
பாசிட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ளவும் நெகட்டிவிட்டியை ஒதுக்கித் தள்ளவும் நடிகர்களுக்கு நிச்சயம் கவுன்சிலிங் தேவை. கவுன்சிலைங்கை ஒரு டபுவாக பார்க்கக் கூடாது. நமக்கு என்ன பைத்தியமா பிடிச்சிடுச்சுன்னு நினைக்காமல், நம் மனதை ரெஃப்ரஷ் பண்ணிக் கொள்ள அதற்காகவும் நேரத்தை கட்டாயம் செலவழிக்க வேண்டும்.

ட்ரோல் பண்ணாதீங்க
ரசிகர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டுமே விடுக்கிறேன். பிரபலங்கள் என்றதும் அவர்கள் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல, அவர்களும் சாதாரண மனிதர்கள் தான். இஷ்டத்துக்கு ஒருவரை ட்ரோல் பண்ணுவதும், மீம் போட்டு மனம் புண்படும் படி கலாய்ப்பதையும் தவிர்த்து விடுங்கள். பிரபலங்கள் ஜாலியா இருக்காங்களே என எண்ண வேண்டாம். அவங்களுக்கும் சராசரி நபருக்கு இருக்கும் பிரச்சனைகளை போலவே பல மடங்கு பிரச்சனைகள் இருக்கும் என்றார்.
ஏன்னு தெரியல
துரு துருவென இருக்கும் சித்ரா ஏன் இப்படி திடீர்னு தற்கொலை பண்ணிக் கொண்டார் என தெரியவில்லை. அந்த அளவுக்கு என்ன விஷயம் அவருக்கு மன அழுத்தம் கொடுத்தது என தெரியவில்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ இருந்த ஒரு பெண் இப்படி செய்வாங்கன்னு நினைக்கல் என தற்கொலை குறித்தும், கவுன்சிலிங் குறித்தும் நடிகர் பார்கவ் பேசிய உணர்வு பூர்வமான பேட்டியை மிஸ் பண்ணாதீங்க!