twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விளையாட்டுத்தனமாக எல்லாம் இனி நடிக்க முடியாது! - அர்ஜுன்

    By Shankar
    |

    ஜெய்ஹிந்த் - 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருந்தார் அர்ஜுன்.

    ஒரே முகம், மூன்று விதமான டென்ஷன் அவருக்கு காரணம் ஜெய்ஹிந்த் - 2 தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    அவருடன் ஒரு சந்திப்பு...

    ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியான படம்?

    ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியான படம்?

    இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் - 2 கல்வியைப் பற்றிப் பேசப் போகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை என்பதுதான் என் கருத்து. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை கோயில் என்பது பள்ளிகள்தான்.

    இன்று கல்வி வியாபாரமாகி விட்டது. இன்று விலையுயர்ந்த வியாபாரமே கல்விதானே. அதை தவறு என்று சுட்டி காட்டுகிறோம்.

    ஜெய்ஹிந்த் – 2 படத்தில் உங்களது ட்ரேட் மார்க்கான ஆக்ஷன் இருக்குமா ?

    ஜெய்ஹிந்த் – 2 படத்தில் உங்களது ட்ரேட் மார்க்கான ஆக்ஷன் இருக்குமா ?

    அதிரடியான ஆக்ஷன் இருக்கும். நல்ல கதையும் இருக்கும். இது ஒரு மாநிலத்துக்கான கதை இல்லை. இன்று இந்தியா முழுக்க உள்ள அடிப்படை பிரச்சனையான கல்வியைப் பற்றியது.

    அரசாங்கத்திடம் உங்கள் உரிமையை கேட்டுப் பெறும் நீங்கள், உங்களின் கடமையை சரியாகச் செய்கிறீர்களா ? என்ற கேள்வி இங்கே எழுப்பப் படுகிறது.

    படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள் போலிருக்கே?

    படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள் போலிருக்கே?

    குறைத்துக் கொள்ளவில்லை. இன்று கூட எல்லா மொழிகளிலும் நடிக்க கேட்கிறார்கள். எனக்கேற்ற கதைகள் தேவை. விளையாட்டுத் தனமாக எல்லாம் இனி நடிக்க முடியாது.

    இன்று விஞ்ஞானம் வேறு மாதிரியான வழியை திறந்து விட்டிருக்கிறது. ரசிகர்கள் எல்லாம் விமர்சகர்களாக மாறி விட்டார்கள்.

    படம் பார்க்கும் போதே பேஸ்புக், ட்விட்டர் , வாட்ஸ்அப் போன்ற ஆயுதங்களால் உடனே தங்களது கருத்துகளை பதிகிறார்கள். அதனால் ரொம்ப நிதானமாக யோசிக்க வேண்டி இருக்கிறது.

    உங்களது சினிமா பயணத்தின் அனுபவம் சுகமானதா ? சுமையானதா ?

    உங்களது சினிமா பயணத்தின் அனுபவம் சுகமானதா ? சுமையானதா ?

    என்னை உலகளவில் பிரபலபடுத்தியது சினிமாதானே ! அதை எப்படி சுமையாக நினைக்க முடியும்... எல்லா துறைகளிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நாம் நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சுகம்தான். நான் நடிக்க வந்து முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. என் வாரிசு ஐஸ்வர்யாவும் நடிக்க வந்துவிட்டார்.

    என்னை முழுமையாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்கிறேன். இது போதும். நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக எல்லாமே என்ன பொறுத்தவரை சுகமானதுதான்.

    அடுத்து உங்கள் திட்டம் என்ன ?

    அடுத்து உங்கள் திட்டம் என்ன ?

    பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறேன். என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து வித்தியாசமான ஒரு படத்தை இயக்க உள்ளேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும்.

    இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் பற்றி....

    இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் பற்றி....

    எல்லோருமே ஒரு விதத்தில் திறமைசாலிகள்தான். அத்துடன் படித்த அறிவாளிகளாகவும் உள்ளார்கள். வெற்றியையும், தோல்வியையும் சகஜமாக பாவிக்கிற மனப் பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லோரும் ஜெயிக்க என் வாழ்த்துக்கள்!

    English summary
    Actor Arjun says that he would direct movies with popular stars in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X