twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமிற்கே டஃப் கொடுத்த பாபி சிம்ஹா … ‘மகான்’ சுவாரசியத் தகவல்!

    |

    சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான்.

    லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா என ஒவ்வொரு கதாபாத்திரம் மெச்சும்படி இருக்கும். குறிப்பாக சத்யவானாக நடித்த பாபி சிம்ஹா , விக்ரமிற்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    என்ன இவ்ளோ மாடர்னா மாறிட்டாங்க... காதல் மொழியும் பேசியிருக்காங்க! என்ன இவ்ளோ மாடர்னா மாறிட்டாங்க... காதல் மொழியும் பேசியிருக்காங்க!

    பாபி சிம்ஹா

    பாபி சிம்ஹா

    ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாபி சிம்ஹா, மகான் திரைப்படத்தின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. முதலில் நான் ராக்கி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தது. சத்யவான் கேரக்டரில் யாரை நடிக்கவைப்பது என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கார்த்திக் சுப்புராஜ் நீயே அந்த கதாபாத்திரத்தில் நடி என்று கூறிவிட்டார். நானும் ஒத்துக்கொண்டேன்.

    மொட்டை அடித்தேன்

    மொட்டை அடித்தேன்

    சத்யவான் கேரக்டரின் ஆரம்பமே 40 வயதிலிருந்து என்பதால் படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டேன். கிட்டத்தட்ட 8 மாதமும் மொட்டத்தலையுடனே இருந்தேன். என்றுடைய அடுத்தடுத்த பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பேசி படங்களை தள்ளி வைத்தேன். ஆனால், சத்யவான் கதாபாத்திரத்திற்கு பிளஸாக இருந்தே அந்த வழுக்கைத்தலை தான்.

    தனக்கு பிடித்த வாழ்க்கை

    தனக்கு பிடித்த வாழ்க்கை

    மகான் திரைப்படத்தை பொறுத்தவரை, தனக்கு பிடித்த வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்துவிடமாட்டோமா என ஆசைப்படும் ஒரு சராசரி மனிதன், ஒரு மதுபான சாம்ராஜ்ஜியத்தேயே காட்டி ஆள்கிறார். சூழ்நிலையும், காலமும் அவரை அப்படி மாற்றிவிடுகிறது. அதே காலம் அவனை கடைசியில் எப்படி மாற்றுகிறது என்பது தான் கதை.

    Recommended Video

    Mahaan படத்தில் என் Scenes Deleted!காரணம்? Vani Bhojan First Exclusive Clarification
    சவாலான கதாபாத்திரம்

    சவாலான கதாபாத்திரம்

    இப்படி மகான் திரைப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இருக்கும். இதில் சலிப்புத்தன்மை வருமா என்று கேட்டால் நிச்சயம் வராது. சத்யவான் போல இன்னொரு கதாப்பாத்திரம் மீண்டும் எனக்கு கிடைக்குமா என்றால் தெரியாது. இதுபோல, சவாலானதாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். படத்தைப் பார்த்து பலர் பாராட்டும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி.

    English summary
    Actor bobby simha interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X