»   »  'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி? - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive

'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி? - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துடன் விசுவாசம் படத்தில் போஸ் வெங்கட் - பேட்டி

சென்னை : 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். அதன்பிறகு, பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'ஈரநிலம்' படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் போஸ் வெங்கட், சமீபத்தில் நடித்திருந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் போலீஸ் கேரக்டர் மூலம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் போஸ் வெங்கட். இது தொடர்பாக அவரிடம் ஒரு பேட்டி...

விசுவாசம் படத்தில்

விசுவாசம் படத்தில்

"அஜித் சார் கூட இதுதான் ஃபர்ஸ்ட் டைம். வீரம் படத்துல அதுல் குல்கர்னிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் ஆஷிஷ் வித்யார்த்திக்கும் நான் தான் டப்பிங் ஆர்டிஸ்டா வொர்க் பண்ணினேன். 'வீரம்' படம் பண்ணும்போது, டைரக்டர் சிவாகிட்ட அஜித் சாரை மீட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். அவர் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார். அஜித் சார்கிட்ட போய் பேசினதும் என்னோட வாய்ஸ் கேட்டுட்டு என்ன வாய்ஸ் உங்களுதுனு பாராட்டினார்."

வாய்ப்பு கிடைச்சது

வாய்ப்பு கிடைச்சது

"அப்புறம், ரொம்ப சகஜமா கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, அஜித் சார் சிவாகிட்ட சொன்னார். "சிவா, போஸை இன்னும் நம்ம படத்துல நடிக்க வைக்காம இருக்கோமே" அப்படின்னார். அந்த வாய்ப்பு இப்போதான் கிடைச்சிருக்கு. அதற்கிடையில் 'விவேகம்' படம் பண்ணிட்டார். அதில் என்னைக் கூப்பிடலை. இப்போ அஜித் சார் கூட 'விசுவாசம்' படத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்திடுச்சு."

ஷூட்டிங் எப்போ

ஷூட்டிங் எப்போ

" 'வீரம்' படத்துக்குப் பிறகு அஜித் சாரை மீட் பண்ணலை. இதுக்கு அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்ல தான் அவரை மீட் பண்ணனும். மே மாசம் எனக்கு டேட் சொல்லிருந்தாங்க. இப்போ ஸ்ட்ரைக் இன்னும் போய்க்கிட்டு இருக்கிறதால் டேட் எப்போ இருக்கும்னு தெரியலை. அஜித் சார் கூட நடிக்கிறதுக்கு காத்துக்கிட்டு இருக்கேன். நல்ல கேரக்டரா அமையும்னு நம்பிக்கை இருக்கு."

அடுத்து நடிக்கும் படங்கள்

அடுத்து நடிக்கும் படங்கள்

" 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துல கார்த்தி சார் கூட நல்ல ரோல் பண்ணினதுக்கு அப்புறம், சுசீந்திரன் இயக்குற 'ஏஞ்சலினா' படத்தில் பண்ணியிருக்கேன். அதுல ஒரு முக்கியமான கேரக்டர் பண்றேன். அதுல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. ஆனா, அதை இப்போ சொல்லக்கூடாது. வெங்கட்பிரபு சார் அசிஸ்டென்ட் பிச்சுமணி டைரக்ட் பண்ற, 'ஜருகண்டி' படத்துல முக்கியமான நெகட்டிவ் கேரக்டர் நான்தான் பண்றேன். பிரபு சாலமன் சார் டைரக்ட் பண்ற 'கும்கி 2' படத்திலும் நடிக்கிறேன்.

 சீரியலில் இனிமேல் நடிக்க வாய்ப்பு இருக்கா

சீரியலில் இனிமேல் நடிக்க வாய்ப்பு இருக்கா

"சீரியல்ல நடிக்கிறதை விட்டு கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. இனிமே பண்றமாதிரி ஐடியாவும் இல்லை. சீரியலை பொறுத்தவரைக்கும் இனிமே, மத்தவங்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறது நம்ம வேலை. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறோம். சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கத்துல பொறுப்பில் இருக்கிறதால் அதோட வளர்ச்சிக்கு உழைக்கவேண்டிய கடமை இருக்கு." எனக் கூறினார் போஸ் வெங்கட்.

English summary
Actor Bose venkat enters cinema after silverscreen. He acts in leading actors films. Recently, 'Theeran adhigaram ondru' gives good response. Bose venkat to act with Ajith in 'Viswasam'. An interview with bose venkat is here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X