நடுரோட்டில் நான் பட்ட வேதனை.. யாருக்கும் அந்த கஷ்டம் வரக்கூடாது.. காளிவெங்கட் பேட்டி!

சென்னை: ஒரு சில நடிகர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்து விடுகிறார்கள் அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் நடிகர் காளி வெங்கட். பல திரைப்படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்த காளி வெங்கட், சினிமாவில் வருவதற்கு முன் தான் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த காளி வெங்கட்டிற்கு சினிமா மீது இருந்த ஆசையால், சென்னைக்கு வந்து 2008 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல கம்பேனி கம்பேனியாக அலைந்துள்ளார். பல போராட்டத்திற்கு பின் இவருக்கு 2010ஆம் ஆண்டு அகம்புறம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த காளி வெங்கட், தெகிடி மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகர் என பெயர் எடுத்ததார்.

Kaali Venkat interview
Photo Credit:

நடிகர் காளி வெங்கட்: அந்த திரைப்படத்திற்கு பிறகு மௌனகுரு, தடையற தாக்க, கலகலப்பு, உதயம் என்எச்40, மத யானை கூட்டம், வாயை மூடி பேசவும், இறுதி சுற்று, மிருதன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் ராட்சசன் திரைப்படத்தில் விஷ்ணுவிஷாலின் நண்பராக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கார்கி திரைப்படத்தில், வழக்கறிஞராக திக்குவாய் ரோலில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரின் பாராட்டினார்கள். தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் காளிவெங்கட் நடிப்பில் அண்மையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வெளியானது.

மனத்திற்கு நெருக்கமான படம்: காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் குழந்தைகளை வளர்க்க பாடுபடும் பாசக்கார அப்பாவாக நடித்து இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் அள்ளியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய காளிவெங்கட், அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார். இந்தக் கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள். இந்த கதையை கேட்டதும் எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது விட்டது என்றார்.

அந்த கஷ்டம் யாருக்கு வரக்கூடாது: தொடர்ந்து பேசிய காளிவெங்கட், எப்போதும் நான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்று நினைப்பவன் நான். சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் காய் கறி வியாபாரம் தான் செய்து கொண்டு இருந்தேன். ஒரு தடவை தள்ளு வண்டியில் வெங்காயத்தை ஏற்றி வியாபாரம் செய்வதற்காக போனேன். மெயின் ரோட்டில் இறத்தத்தில் வண்டி இறங்கும்போது தள்ளுபடி கவர்ந்து வெங்காயம் எல்லாம் கீழே கொட்டி விட்டது. அதை ரோட்டில் இருந்து பொறுக்கி, மறுபடியும் வண்டியை நிமித்தி, வெங்காயத்தை அந்த வண்டியில் ஏற்றியதை இன்னமும் என்னால் மறக்கவே முடியவில்லை. ஏன் என்றால் என்றைக்கு எனக்கு சோறுபோட்டது அது தான், அந்த வெங்காயம் வீணா போய்விடுமோ என்ற வேதனையில் நடுரோட்டில் ஓடி ஓடி பொறுக்கினேன். அதை அப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது. அப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று நான் எப்போதும் நினைப்பேன் என காளி வெங்கட் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X