ஜன நாயகன் வேறலெவல் எதிர்பார்ப்பு.. அரசியலில் மாஸ் பண்றாரு விஜய்.. ’ரைட்’ ஹீரோ நட்டி நட்ராஜ் பேட்டி!

நடிகர் நட்டி தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "விஜய் சார் அரசியலில் பிரமாதம் பண்ணுறாரு.. ஜன நாயகன் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது" என்று கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. சினிமா உலகில் இருந்து அரசியல் களத்தில் விஜய் களமிறங்கியது குறித்து நட்டியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

சினிமா சேட் வித் ரஞ்சித் நிகழ்ச்சியில் நடிகர் நட்டி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ரைட் திரைப்படம் குறித்தும், சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறந்து பேசினார்.

Actor Natty Vijay Is Doing Great In Politics

தொடர்ந்து காவல்துறை கதாபாத்திரங்களில் நடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, "நான் பண்ண எல்லா போலீசுமே வேற வேற போலீஸ் சார்" என்று பதிலளித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக அணுகுவதே தனது விருப்பம் என்றார்.

நடிகர் அருண் பாண்டியன் குறித்து பேசிய நட்டி, அவர் ஒரு சினிமா காதலர் என்றும், புதிய முயற்சிகளை எடுக்க தயங்காதவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர் தனது இளம் வயது சினிமா அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் பூனாவில் நடந்த ஒரு நிகழ்வில், நிஜ போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அனுபவத்தை நட்டி விவரித்தார். "யூ ஆர் தட் வரதராஜன் ரைட் ப்ரம் மகாராஜா?" என்று கேட்ட அந்த அதிகாரி, நட்டியின் நடிப்பை பாராட்டியதாக கூறினார்.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களை நினைவு கூர்ந்த நட்டி, அப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் குறித்து புகழ்ந்து பேசினார். "இந்தியா கொண்டாடும் இயக்குநர் லிஸ்ட்ல அவரும் இருப்பாரு" என்று அப்போதே கணித்ததாக கூறினார்.

Actor Natty Vijay Is Doing Great In Politics
Photo Credit:

விஜய் குறித்து நட்டி கூறுகையில், "அவர் நம்ம 100 வார்த்தை பேசினா அவரு ஒரு வார்த்தைதான் பேசுவாரு இல்ல ரெண்டு வார்த்தை பேசுவாரு. ஆனா இப்படி மேடையில ஏறி துண்ட தூக்கி போட்டு கர்ஜனை செய்றதெல்லாம் பிரமாதமா இருக்கு" என்று வியந்து கூறினார். விஜய்யின் அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.

மேலும், ஜன நாயகன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றார். சூர்யாவின் கருப்பு படமும் சூப்பராக வந்திருப்பதாகவும் அந்த படம் வெளியானால் நிச்சயம் சூர்யா ரசிகர்கள் சந்தோஷமடைவார்கள் என்றார்.

நட்டி நட்ராஜ் நடித்துள்ள ’ரைட்’ படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக அவர் நடித்து ராஜநாதன் இயக்கியுள்ள ’கம்பி கட்ன கதை’ படமும் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X