For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிபி சக்கரவர்த்தி நீ மொதல்ல கல்யாணத்த பண்ணு...அப்புறம் படம் பண்ணு என்று அட்வைஸ் செய்த பிரபலம் யார் ?

  |

  சென்னை: தமிழ்த்திரையுலகில் தற்போது டிரெண்டிங் ஆன பாடலை எழுதுபவர் சிவகார்த்திகேயன் தான் என்று டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

  Recommended Video

  Cibi Chakaravarthi Exclusive Interview | Don movie |Filmibeat Tamil

  படப்பிடிப்பின்போது ஒரு சில நேரங்களில மட்டும் கோபம் அடைந்ததாகவும், ப்ரியங்கா மோகனிடம் நடிகை என்ற பந்தா இல்லை என்றும் தெரிவித்தார்.

  முடியாததை முடிக்கிறவன் தான் டான், நான் முடித்து காட்டுகிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறும் வசனம் சிறப்பாக வந்துள்ளதாக கூறிய சிபி சக்ரவர்த்தி, நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  தளபதி 66 ல் விஜய் என்ன லுக்கில் இருக்கார்ன்னு பார்த்தீங்களா...தீயாய் பரவும் போட்டோ தளபதி 66 ல் விஜய் என்ன லுக்கில் இருக்கார்ன்னு பார்த்தீங்களா...தீயாய் பரவும் போட்டோ

  பருத்திவீரன் கனவு நிறைவேறியது

  பருத்திவீரன் கனவு நிறைவேறியது

  கேள்வி: உங்களுடைய சினிமா பயணம் குறித்து ....

  பதில்: கோயம்புத்தூரிலிருந்து வந்து சினிமாவில் சாதித்த ரகுவரன், சுந்தர்ராஜன், பாக்கியராஜ் ஆகியோர் போன்று நாமும் சாதிக்க வேண்டும். பருத்திவீரன் கார்த்திக் கூறுவது போல் பஸ் ஏறி சென்னைக்கு வந்து பேட்டி, டிவியில் வருவது போன்றவையெல்லாம் எனது கனவு. அது தற்போது நிறைவேறி உள்ளது.

  நான் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அப்போது நான் என்னுடைய ஊருக்கு செல்லும்போது, விஜய் சார் போனில் பேசுவாரா என்று கேட்பார்கள். விஜய் சார் போனில் பேசுவார், ஆனால் என்கிட்ட பேச மாட்டார் என்று கிராமத்து பாணியில் பதில் கூறுவேன் என்றார் ஜாலியாக சொல்லி உள்ளார்.

  என்னுடைய முதல்படமான "டான்" படம் உருவாவதற்கு முழு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான். நான் அவரிடம் கதை கூறும்பொழுது, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. இவருக்கு கதை பிடித்தால் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது எனது கருத்து. படம் இந்தளவுக்கு வந்திருக்கிறது என்றால் சிவகார்த்திகேயன் தான் காரணம். அவர் இல்லையென்றால் இது சாத்தியமில்லை என்றார்.

   பெரும்பாலானோருக்கு பிடிக்கும்

  பெரும்பாலானோருக்கு பிடிக்கும்

  கேள்வி: டான் படம் எதை மையமாக வைத்து எடுத்துள்ளீர்கள்?

  பதில்: படத்தின் கதையானது காலேஜ் ஸ்டூடண்ட், குடும்பம் சம்பந்தபட்ட கதையாகும். சிவாகார்த்திகேயன் என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ப்ரைவேட் பார்ட்டி என்ற பாடலை வைத்தேன். அதில் அனிமல்ஸ் பொருட்காட்சிக்கு ஹீரோ, ஹீரோயின் வருவது போன்ற ஒரு காட்சியை குழந்தைகளுக்காக வைத்துள்ளேன் என்றார்.

  என்னை பொறுத்தவரை படமானது, ரசிகர்களை Disappointment ஆக்கி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் எடுத்துள்ளேன். இந்த படத்தை பொறுத்தவரை பெரும்பாலானோருக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு கொஞ்சமாக பிடிக்கும்.

  டிரெண்டிங் பாடல் எழுதுபவர் சிவகார்த்திகேயன்

  டிரெண்டிங் பாடல் எழுதுபவர் சிவகார்த்திகேயன்

  கேள்வி: படத்தின் பாடல்கள் குறித்தும், இசையமைப்பாளர் அனிருத் குறித்தும் நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: படப்பிடிப்பு முழுவதையும் கோயம்புத்தூர் மற்றும் அந்தியூர் கே.பி.ஆர். கல்லூரியில் நடத்தினோம். கே.பி.ஆர். கல்லூரியின் முன்னாள் மாணவர் என்று கருதி, எனக்கு அனைத்து ஒத்துழைப்பையும், கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவர்களும் செய்து கொடுத்தனர். படப்பிடிப்பின்போது, நான் நினைப்பது அங்கே நடக்கவில்லை என்றால் தான் கோபம் வரும். ஏனெனில் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. மற்றபடி போஸ்ட் புரோடக்ஷனில் எந்த வித டென்ஷனும் இல்லாமல் படம் முடிந்தது என்றார்.

  கல்யாணம் செய்து விடு

  கல்யாணம் செய்து விடு

  கேள்வி: நடிகர் சமுத்திரக்கனி உங்களுக்கு அறிவுரை கூறினாரா?

  பதில்: நடிகர் சமுத்திரக்கனி படப்பிடிப்பின்போது எனக்கு அறிவுரை எதுவும் கூறவில்லை. தனிப்பட்ட முறையில் இந்த படத்தை முடித்தவுடன், கல்யாணம் செய்து விடு என்றார். இரண்டு, மூன்று படங்கள் முடித்தவுடன் செய்வதாக உறுதியளித்துள்ளேன்.

  எப்போது கோபம் வரும்

  எப்போது கோபம் வரும்

  கேள்வி: படப்பிடிப்பின்போது எப்போது நீங்கள் கோபப்படுவீர்கள்?

  பதில்: படப்பிடிப்பு முழுவதையும் கோயம்புத்தூர் மற்றும் அந்தியூர் கே.பி.ஆர். கல்லூரியில் நடத்தினோம். கே.பி.ஆர். கல்லூரியின் முன்னாள் மாணவர் என்று கருதி, எனக்கு அனைத்து ஒத்துழைப்பையும், கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவர்களும் செய்து கொடுத்தனர். படப்பிடிப்பின்போது, நான் நினைப்பது அங்கே நடக்கவில்லை என்றால் தான் கோபம் வரும். ஏனெனில் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. மற்றபடி போஸ்ட் புரோடக்ஷனில் எந்த வித டென்ஷனும் இல்லாமல் படம் முடிந்தது என்றார்.

  தேதி முக்கியமில்லை

  தேதி முக்கியமில்லை

  கேள்வி: தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: படப்பிடிப்பின்போது அப்படி எடுக்கணும், இப்படி எடுக்கணும் என்று சிவகார்த்திகேயன் எதுவும் கூறுவதில்லை. ஷூட்டிங் வந்தால் தான், ஹீரோவாக நடந்து கொள்வார். முடியாததை முடிக்கிறவன் தான் டான், நான் முடித்து காட்டுகிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறும் வசனம் மிக அருமையாக வந்துள்ளது .

  டான் திரைப்படத்தை வருகின்ற 13ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுகிறோம். 13 என்றாலே எல்லோருக்கும் பேய் படம் தான் ஞாபகத்திற்கு வரும். அதை மாற்ற வேண்டும் என்று நோக்கில் தான், படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயனும், லைக்கா புரோக்டஷனும் தான் முடிவு செய்தனர். என்னை பொறுத்தவரை தேதி முக்கியமில்லை. படம் ரிலீசானால் எனக்கு அதுவே சந்தோஷம்.

  நடிகையிடம் பந்தா இல்லை

  நடிகையிடம் பந்தா இல்லை

  கேள்வி: எஸ்.ஜே. சூர்யா, ப்ரியங்கா மோகன் நடிப்பு எப்படியிருந்தது?

  பதில்: இயக்குனரும், நடிகருமாகிய ஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும், அவருடைய வசன உச்சரிப்பும் படத்தில் அருமையாக இருக்கும். ஒரு காட்சியில், I am Boominathan, Welcome to Best Enginnering College என்று கூறுவார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். நடிகை ப்ரியங்கா மோகன் சின்சியர் ஆர்டிஸ்ட். எப்படி வேணும் என்று கேட்டு திரும்ப, திரும்ப நடித்து கொடுப்பவர். நடிகை என்ற பந்தா கிடையாது. அவருடைய ஸ்கூல் போர்ஷன் சூப்பரா வந்திருக்கு. அவருடைய காஸ்ட்யூமை நித்யா, அனு ஆகியோர் செய்திருக்கின்றனர்.

  ஓட விடுவார்

  ஓட விடுவார்

  கேள்வி: இயக்குனர் அட்லி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்:எனக்கு இன்ஸ்பிரேஷன் அட்லி தான். ஏனென்றால் அவருடைய சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். பகல் முழுவதும் ஷூட்டிங். இரவு 12 மணி வரை எடிட்டிங் பார்ப்பார். மறுநாள் காலை திரும்பவும் ஷூட்டிங். இதற்கிடையே இரவு சென்று ரகுமான் சாரிடம் பாடல் டிராக் வாங்குவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து விடுவார். அவர் எந்த படத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதற்காக எங்க டீமை ஓட விடுவார். நாங்கள் யோசிப்போம் இது எப்படி நடக்கும் என்று நாங்கள் யோசிப்போம். ஆனால் அவர் அதை நடத்தி காட்டுவார்.

  அடுத்த படத்தின் கதை.. இது தான்...

  கேள்வி:டான் படம் யாருடைய ஸ்டைலில் செய்திருக்கிறீர்கள்? அடுத்த படத்தின் கதை தயாராக உள்ளதா?

  பதில்: டான் படம் தொடங்கும்பொழுது, படத்தின் கலர் Pleasant ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுபோல் தான் போஸ்டர், புரோமோ போன்றவற்றை அப்படியே அமைத்துள்ளோம்.

  எனக்கு என்ன வருமோ, அதை தான் டான் படத்துல பண்ணியிருக்கிறேன். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், என் ஸ்டைலில் படம் பண்ணியிருக்கிறேன், மற்றவர்கள் ஸ்டைலில் படம் இருக்காது .

  எனது அடுத்த படத்தின் கதை 'இது குறித்து தான் இருக்க வேண்டும்' என்ற மையக்கருத்து எனக்குள் உருவாகி விட்டது. ஆனால் கதையை இன்னும் எழுதவில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் விஜய்யிடம் பீஸ்ட் பட ஷூட்டிங்கின்போது டான் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினேன். அவரும் பார்ப்பதாக உறுதி கூறியுள்ளார் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/oRTeMYIeMsc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  Actor Samuthirakani Advised Cibi Chakkaravarthy to Marry Soon Exclusive Interview Story
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X