மகள் கேட்ட கேள்வி.. அப்படி ஒரு படத்தில் நடிக்கணும்.. விதார்த் மனம் திறந்த பேட்டி!

சென்னை: விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள "மருதம்" அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரக்‌ஷனா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் விதார்த்துடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படக் குழுவினர் எமது பிலிமி மீட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

கேள்வி: தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு 'மருதம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மருதம் இப்போதும் அப்படித்தான் பசுமையாக உள்ளதான என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பதில்: அதற்கு பதில் அளித்த படத்தின் இயக்குநர், நான் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். ராணிப்பேட்டை மாவட்டம் குறித்து எந்த கதைகளிலும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அதனால், அதை நான் படத்தில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். தட்பவெப்ப நிலையில் காரணமாக சில நேரங்களில் மாற்றம் இருக்கும். ஆனால், கடந்த ஐந்து வருடமாக மருதம் போல எங்கள் மாவட்டம் பசுமையாக தான் உள்ளது என்றார்.

மருதம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படத்தின் கதையை நான் யோசித்து எழுதும் போதே, இந்த கதையில் விதார்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய பல திரைப்படங்களை நான் பார்த்து இருக்கிறேன். அழுத்தமான கதாபாத்திரத்தை அவர் இயல்பாக செய்து இருப்பார். இதனால், இந்த கதாபாத்திரத்தில் விதார்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் என் நண்பர் மூலாக விதார்த்தை சந்தித்து இந்த படத்தின் கதையை சொன்னேன்.

Marudham Vidharth interview

கேள்வி: இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தது ஏன்?

விதார்த் பதில்: படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன போது. இது ஒரு கிராமத்து, விவசாயம் பற்றிய கதை என்றார். வழக்கமாக விவசாயம் பற்றிய கதை என்றால், அதில் சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால், இவர் சொன்ன விஷயம் வேறு விதமாக இருந்தது. இப்படியெல்லாம் கூட பிரச்சனை நடக்குமா என யோசித்தேன். அந்த விஷயம் தான் இந்த படத்தில் நான் நடிப்பதற்கு காரணம்.

கேள்வி: இந்த படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ரக்‌ஷனா பதில்: அந்த திரைப்படத்தில் நான் ஒரு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என்னுடைய வயதுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் ராணிப்பேட்டை கிராமவாசிகளின் ஸ்லாக் தமிழ் தான் என்றாலும் வேறுவிதமாக இருந்தது. இதற்காக படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கும் முன்பே அங்கு சென்று விட்டேன். ஆனால் அவர்கள் பேசுவது எதுவுமே புரியவில்லை, இதுஎல்லாம் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

கேள்வி: கமர்ஷியல் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதா?

விதார்த் பதில்: கமர்ஷியல் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால், ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய மகள் தான். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்துவிட்டு உனக்கு நடிக்கவே தெரியவில்லை. நீ அந்த படத்தை பார்த்து நடிக்க கற்றுக்கொ என்றாள். அவளுக்கு படத்தில் நான்சண்டை போட வேண்டும் என்று ஆசை. அதனால் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.என்னை 'underrated actor' என்று சொல்லும் போது, அனைவர் மனதிலும் எனக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான், இன்னும் பெரிய இடத்திற்கு நான் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஆனால், இந்த இடமே எனக்கு போதுமான இடமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் எனக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று விதார்த் பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X