இறந்தது கூட தெரியாது.. என் பொண்ணு சாகல.. என் கூடத்தான் இருக்கா.. கண்கலங்கிய விஜய் ஆண்டனி!
சென்னை: இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, . நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார். சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன், ரத்தினம், திமிருபிடிச்சவன், கொலை, ஹிட்லர் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் மறைந்த தனது மகள் குறித்து பேசி உள்ளார்.
அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கிய 'சக்தி திருமகன்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில், படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி, வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண், கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷனின் போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பல விஷயத்தை மனம் திறந்து பேசி இருந்தார். அதில்,
என் அப்பா இறக்கும்போது எனக்கு ஏழு வயது, அப்பா இறந்தது கூட எனக்கு தெரியாது. நான் அந்த நேரம் பலூனை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்பா இறந்த சோகம் தெரியக்கூடாது என்பதற்காக, வந்திருந்த அனைவரும் எனக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தார்கள். அந்த வயதில் எனக்கு சாக்லெட் தான் பெரிதாக தெரிந்தது. சிறிய வயது என்பதால் அந்த வலி எனக்கு தெரியவில்லை. அந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவித்தது என்னுடைய அம்மா தான்.
நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி: அம்மாவின் 27 வயதாக இருக்கும் போது தான் அப்பா இறந்து விட்டார். அந்த நேரத்தில் எங்களுக்காக அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்கள். அம்மா ஒன்பதாவது தான் படித்து இருந்தார்கள். அப்பாவின் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, டுட்டோரியலில் சேர்ந்து படித்து பத்தாவது தேர்வு எழுதி அதன் பிறகு தான் அவர்களுக்கு திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. நான் சிறுவயதில் ஒரு பொறுப்பானவனாக இல்லை, தருதலையாக தான் இருந்தேன். என்னை எந்தவித கஷ்டமும் தெரியாமல்என் அம்மா பார்த்துக் கொண்டார்கள். நான் எப்போது வேலை தேடி வெளி உலகத்திற்கு வந்தேனோ, அப்போதுதான் இந்த உலகம் எப்படி என்று எனக்கு தெரிந்தது. எங்களுக்கு வீடு கிடைக்காததால், அப்பா ஒரு ஹாஸ்டல், தங்கையும், நானும் தனித்தனி ஹாஸ்டலில் இருந்தோம்.

என் மகள் சாகல: உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும், பிரச்சனை இல்லாத ஆட்களே இருக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சனையில் இருந்து கடந்து வர வேண்டும் என்றார். தொடர்ந்து தனது மகள் மீரா மரணம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, என் மகள் மீரா கிட்ட நான் இப்பவும் பேசிக்கிட்டுதான் இருக்கிறேன். அவளை நான் மிஸ் பண்ணல, அவளை இழந்து விட்டேன் என நினைச்சா தான் நான் மிஸ் பண்ணுவேன். அவள் எப்போதும் என் கூடவேதான் இருக்கிறாள் என்று மகள் குறித்து பேசி இருந்தார். 16 வயதாக விஜய் ஆண்டனியின் மகள் மீரா, தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, கடந்த 2023ம் ஆண்டு, தனது தந்தையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











