பிக் பாஸ் வேஸ்ட்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் இன்ஸ்டா பிரபலங்கள்.. திணறும் விஜய்சேதுபதி!

சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரம் தொடங்கியது. இதில், வழக்கமாக நடிகர்கள், மாடல்கள், பல துறைகளில் சாதித்தவர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த முறை சோஷியல் மீடியா பிரபலங்களான கலையரசன், வாட்டர்மெலன் திவாகர், பலூன் அக்கா என சர்ச்சையில் சிக்கி பலரும் வந்து இருப்பது பேசு பொருளாகி உள்ளது. இதுகுறித்து பேசிய நடிகையும், பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட போட்டியாளருமான ஆர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமானதற்கு காரணம் என்னவென்றால் பிரபலங்கள் எப்படி வீட்டிற்குள் இருப்பார்கள், அவர்கள் எப்படி பேசுவார்கள், பழகுவார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. ஆனால், இந்த முறை போட்டியாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள் எப்படி பிக் பாஸ் டீம் இப்படி போட்டியாளர்களை தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் இவ்வளவு தண்ணீர் தான் கொடுப்போம். அந்த தண்ணீரில் தான் குளிக்க வேண்டும், குடிக்க வேண்டும் என சொல்வது எல்லாம் சரியா இல்லை.

Bigg Boss tamil 9 Vijay sethupathi Aarthi 9
Photo Credit:

ஆர்த்தி கணேஷ்: சோஷியல் மீடியாவில் தப்பு தப்பா பேசுவது, கணவர் மனைவி சண்டை போடுவது என பல சர்ச்சைகளை செய்தவர்களை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்கிறார்கள். இது உண்மையிலேயே அடுத்த ஜெனரேஷனுக்கு தவறான ஒரு உதாரணமாக அமைந்து விடும். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியை குடும்பங்கள் அனைவரும் பார்க்கிறார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியில், எது வேணாலும் செய்து கெட்ட பெயரை எடுத்து விட்டால் பிக் பாஸ்க்கு சென்று விடலாம் என்ற ஒரு எண்ணம் மக்களிடம் எழுந்து விடும் இது உண்மையில் கண்டிக்கக்கூடிய விஷயம்.

விஜய்சேதுபதி தான் பாவம்: பொதுவாக பிக் பாஸிடம் போட்டியாளர்கள் அனைவரும் மாட்டிக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்களிடம் மாட்டி இருக்கிறார். இதிலிருந்து பிக் பாஸ் எப்படி தப்பிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு டிசைனில் இருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டு திணறுவது விஜய் சேதுபதி அவர்கள் தான், அவர் என்ன செய்வது என்றே தெரியாமல் மாட்டிக்கொண்டு திணறுகிறார். மூச்சு முட்டிக்கொண்டு இருக்கும் விஜய் சேதுபதியை பார்த்தால் தான் எனக்கு பாவமாக இருக்கிறது. நான் எந்த போட்டியாளருக்கும் ஆதரவு இல்லை, விஜய் சேதுபதி அண்ணா தான் பாவம் என நினைக்கிறேன் என ஆர்த்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X