For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாங்க சேர்ந்து நடிக்கும் முதல் படம்..பூரிப்பில் அர்ச்சனா..அட பொண்ணு நல்லா வளந்துட்டாங்களே !

  |

  சென்னை : நிகழ்ச்சித்தொகுப்பாளரும், நடிகையுமான அர்ச்சனா பிக்பாஸ் முதலிய நிகழ்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்றார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

  இவர் ரஜினியை நேர்முகம் செய்த வீடியோ இன்றும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்த அர்ச்சனா, சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.

  18 நாட்கள் மருத்துவமனையிலிருந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமாகி வந்திருக்கிறார்.கூடுதலான சிறப்பான விஷயம், அவரின் மகள் சாராவும் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

  அழகழகான காஸ்ட்யூமில் இளமை பொங்க, துள்ளலான ரஜினி – நயன்தாரா அழகழகான காஸ்ட்யூமில் இளமை பொங்க, துள்ளலான ரஜினி – நயன்தாரா

  ரொம்ப ஹாப்பி

  ரொம்ப ஹாப்பி

  அர்ச்ச்சனாவும் மகள் சாராவும் ஒரே படத்தில் நடித்துள்ளது தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டாக்டர் பட ப்ரஸ்ட் மீட்டில் அர்ச்சனா மற்றும் சாராவின் கலகலப்பான நேர்முகம் இதோ.

  அம்மாவும் மகளும்

  அம்மாவும் மகளும்

  கேள்வி : அம்மாவும் பொண்ணும் ஒரே படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

  பதில் : இப்படி ஒரு வாய்ப்பு தமிழ் திரை உலகில், எனக்கு கிடைச்சதே பெரிய விஷயம். அதுக்கு நல்ல வரவேற்பும் பாதுகாப்பும் இருக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். என் மகள் சாரா முதன் முதலா நிகழ்ச்சி தொகுத்து வழங்குனதும் என் கூடதான். அவ முதல்முதலா படத்துல நடிச்சதும் என் கூடதான். ஒரு தாயா ரொம்ப சந்தோஷப்படுறேன்.

  பாதுகாப்பா உணர்ந்தேன்

  பாதுகாப்பா உணர்ந்தேன்

  கேள்வி : எப்படி இருந்துச்சு உங்க முதல் பட அனுபவம்?

  சாராவின் பதில் : ஷூட் போன ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் போல இருந்துச்சு. அவ்ளோ அன்பா, பாதுகாப்பா இருந்தாங்க எல்லாரும். ஒட்டுமொத்த டீம்க்கும் டைரக்டருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.வித்யாசமான அனுபவமா இருந்துச்சு.

  இதுதான் இன்றைய சினிமாத்துறை

  இதுதான் இன்றைய சினிமாத்துறை

  கேள்வி : எல்லா நாளும் நீங்க சாரா கூட ஷூட்டிங் போனீங்களா?

  அர்ச்சனா பதில் : நிறைய நாள் அவ கூட நான் ஷூட் போகல. எங்கயோ 40,50 கி.மீ தூரத்துல ஷூட் இருக்கும். ஷூட் முடிச்சி வந்ததும், அம்மா ரொம்ப சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் இருந்துச்சு அம்மான்னு சொன்னா. அத்தனை ஆண்கள் மத்தியில ஒரே பெண் இவ. பாதுகாப்பாவும் பத்திரமாவும் பாத்துகிட்டாங்க படக்குழுவினர். தமிழ் சினிமா நல்ல நிலை நோக்கிதான் போயிட்டு இருக்கு.

  சாரா மூக்குத்தி

  சாரா மூக்குத்தி

  கேள்வி : சாராவோட மூக்குத்தி பத்தி பரபரப்பா பேசப்பட்டுதே ?

  பதில் : இப்ப உள்ள பெண்குழந்தைகள் எல்லாம் முடி நிறைய வளர்த்துக்கனும், மூக்கு குத்திக்கனும்ன்னு ஆசப்படுறதெல்லாம் ரொம்ப அரிதா இருக்கு. இவ ஆசப்பட்டா.. இந்த வருஷ என்னோட ஆசை மூக்கு குத்திக்கனும்ன்னு. அத நிறைவேத்தியாச்சு.

  https://tamil.filmibeat.com/interview/actress-archana-and-zara-archana-exclusive-interview-087953.html

  தனிப்பட்ட முறையில்

  கேள்வி : உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்துல, உங்கள் ரசிகர்களோட பிராத்தனைகளுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க.?

  பதில் : ஃபிலிம்பீட் -க்கு முதல்ல என்னோட மனமார்ந்த நன்றி. நான் உடம்பு சரி இல்லாம இருந்தப்ப, எத்தனையோ விஷயங்கள் நெகட்டிவ்-ஆ எழுதுன பல ஊடகங்கள் இருக்கும் போது, கமெண்ட்ல மக்கள் குடுத்த அன்பையும், ஒவ்வொரு பிரார்த்தனைகளையும் ஃப்லிம்பீட் தான் ஆர்டிகளா எழுதி இருந்தீங்க. அதுக்கு முதல்ல என்னோட மனமார்ந்த நன்றி. 18 நாள் மருத்துவமனைல இருந்தது, மூளைல அறுவை சிகிச்சை.. இதையெல்லாம் தாண்டி இன்னைக்கு உங்க முன்னாடி வந்து பேசிகிட்டு இருக்கேன்னா.. அதுக்கு காரணமே எல்லாரோட பிரார்த்தனைகள் தான். அதுக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டுருக்கேன். எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இதுக்கப்பறம் நான் விடற மூச்சு ஒவ்வொன்றுமே நீங்க போட்ட பிச்சைதான் என்று பிரார்த்தனைகள் செய்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியையும்,அதே கலகலப்பான சிரிப்பையும் அளித்தார் அர்ச்சனா.

  English summary
  Actress Archana and Zara Archana Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X