twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : நடிப்புன்னு வந்த பிறகு சினிமாவில் இதெல்லாம் சகஜம்ங்க.. : தேவயானி

    நீண்ட இடைவெளிக்குப் பின் எழுமின் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை தேவயானி.

    |

    Recommended Video

    அன்றும் இன்றும் மெருகுடன் தேவயானி பேட்டி- வீடியோ

    சென்னை: குழந்தைகளுக்கான தற்காப்புக்கலை பற்றி பேசியுள்ள எழுமின் திரைப்படம் நிச்சயம் பெற்றோரும், குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் என நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக கோலோச்சியவர் தேவயானி. குடும்ப பாங்கான தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்கள் பலருடன் நாயகியாக நடித்தவர், இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டதும் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தார்.

    பின்னர் சின்னத்திரையில் கோலங்கள் சீரியலில் நடித்த தேவயானி, நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுமின் படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஒன்இந்தியாவுக்காக அவரை சந்தித்தேன்.

    அவருடன் உரையாடியதில் இருந்து...

    எழுமின்:

    எழுமின்:

    "நான் நடித்துள்ள எழுமின் படம் இப்போது ரிலீசாகி இருக்கிறது. தற்காப்பு கலை தொடர்பாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பெற்றோர்களும், குழந்தைகளும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

    இது தான் காரணம்:

    இது தான் காரணம்:

    ஏன் இந்த இடைவெளி என்று கேட்கிறார்கள். ஆனால் நான் எப்போதுமே சினிமாவில் தான் இருக்கிறேன். சில படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பது உண்மை தான். எழுமின் படத்தின் கதையை கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. அதனால் தான் இந்த படத்தில் நடித்தேன்.

    வித்தியாசமான விவேக்:

    வித்தியாசமான விவேக்:

    விவேக் சாருடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவருக்கு ஜோடியாக நடித்தது இதுதான் முதல்முறை. இந்த படத்தில் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம்.

    மாமியார் கதாபாத்திரம்:

    மாமியார் கதாபாத்திரம்:

    அடுத்து களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ளேன். இதில் தினேஷுக்கு மாமியார் ரோல். இந்த படத்தில் நான் நடிப்பேன் என இயக்குனர் நம்பவே இல்லை. ஆனால் படத்தின் கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டேன்.

    எல்லாமே நடிப்பு தான்:

    எல்லாமே நடிப்பு தான்:

    இப்போ தான் அம்மா புரோமோஷன் கிடைச்சிருக்கு. அதுக்குள்ள ஏன் மாமியாராக நடிக்கிறீங்கனு கேட்கிறாங்க. நடிப்புன்னு வந்த பிறகு அம்மாவா இருந்தா என்ன... மாமியாரா இருந்தா என்ன... எப்படியும் ஒரு நாள் நான் மாமியாராக தானே போறேன்.

    மாறி வரும் நிலைமை:

    மாறி வரும் நிலைமை:

    பொதுவா ஒரு ஹீரோயினுக்கு கல்யாணம் ஆனதும், அடுத்த படத்துலேயே அண்ணியாக, அம்மாவாக நடிக்கக் கூப்பிடுவாங்க. டுயட் பாடின ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதெல்லாம் சினிமாவில் சகஜம். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்போது நிறைய வருவது நல்ல விஷயம்.

    கணவருடன் நடிப்பேன்:

    கணவருடன் நடிப்பேன்:

    எனது கணவர் ராஜகுமாரனுக்கு கடுகு படம் பெரிய இடத்தை பெற்று தந்தது. ஆனால் அதற்கு பிறகு அதுபோன்ற வாய்ப்பு வரவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு நல்ல இயக்குனர். நானும் அவரும் சேர்ந்து நடிப்பது போன்ற கதை வந்தால் நிச்சயம் நடிப்போம்.

    எதிர்கால திட்டம்:

    எதிர்கால திட்டம்:

    எனக்கு இரண்டு மகள்கள். பெரிய மகள் பேரு இனியா. சின்ன பொண்ணு பேரு பிரியங்கா. பள்ளிக்கு செல்கிறார்கள். கணவருடைய சொந்த ஊரான அந்தியூரில் தோட்டத்துடன் கூடிய வீடு வாங்கி இருக்கிறோம். விவசாயம் செய்கிறோம். இயற்கை சூழல் கொண்ட இடம் அது. வயதான பிறகு அங்கு செட்டில் ஆகலாம் என திட்டமிட்டிருக்கிறோம்", என அவர் கூறினார்.

    English summary
    In an exclusive interview to oneindia, actress Devayani shared about her upcoming projects and plan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X