ஓவர் போதையில் ரேட் கேட்டாங்க.. ஒரே டார்ச்சர் மாடியில் இருந்து குதித்து இருப்பேன்.. காயத்ரி பேட்டி!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளை கவர்ந்த சீரியலாகும். இதன் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பலரையும் கவர்ந்திருக்கும் இந்த சீரியலில், ஜான்சி ராணியாக நடித்து பலரின் மனதில் இடம் பிடித்த காயத்ரி கல்லூரியில் படிக்கும் போது தனக்கு நடந்த கொடுமையை மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

அயலி வெப் தொடரில் நடித்த விஜே காயத்ரி, எதிர்நீச்சல் முதல் பாகத்தில், வெற்றிலை போட்டுக்கொண்டு சிவந்த உதடுடனே வலம் வந்தார். வெற்றிலை போட்டு பழக்கம் இல்லாததால், படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டே இருந்ததால், வாய் புண்ணாகிவிட்டது. இதனால், ஷூட்டிங் முடிந்ததும் நேராக மருத்துவமனைக்கு தான் செல்லுவேன் என்றார். ஆனால், நான் பட்ட கஷ்டத்திற்கு இப்போது கை கிடைத்துள்ளது. நான் எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் பலர், ஜன்சி என்றே அழைக்கிறார்கள்.

Ethirneechal Serial Jhansi Rani interview
Photo Credit:

எதிர்நீச்சலால் கிடைத்த வாய்ப்பு: அந்த கதாபாத்திரத்தில் அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் என அடுத்தடுத்து படங்களிலும் நடித்து இருக்கிறேன். சிலர் அயலியில் நான் நடித்ததை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள், சிலர் ஜான்சி ராணி கதாபாத்திரத்தை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். அயலி வெப் தொடர் எந்த அளவிற்கு எனக்கு ஒரு பெயரை வாங்கி கொடுத்ததோ, அதே போல, எதிர்நீச்சல் சீரியலும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறேன் அது விரைவில் வெளியாக உள்ளது. Scam 1992 என்ற ஒரு அட்டகாசமான வெப் தொடரை கொடுத்த இயக்குநர் Harshad Mehta இயக்கி இந்த தொடரை இயக்கி இருக்கிறார். இந்த வெப்தொடரில் தமிழ் நாட்டில் இருந்து நான் நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

ரேட் என்ன சொல்லு: பல விஷயங்களை பற்றி பேசிய காயத்ரி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து அந்த பேட்டியில் பேசி உள்ளார். அதில், நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது போதை ஆசாமி ஒருவர், என்னிடம் நேரடியாகவே 'ரேட்' பேசினார். நான் உடனே, ஹலோ நான் லயோலா கல்லூரியில் படிக்கிறேன் என்று சொன்னதும், இருந்துட்டு போ, உன்னுடைய 'ரேட்' என்னனு சொல்லு என்று கேட்டார். நான் பலமுறை கல்லூரி மாணவி என்று சொல்லியும் அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவர் ஓவராக குடித்து இருந்தார். என்னுடன் இருந்த அனைவருமே, ப்ரோக்ராமிற்கு சென்று விட்டதால், நான் தனியாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், நான் மாடியில் இருந்து குதித்து விடலாம் என நினைத்தபோதுதான். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து என்னை காப்பாத்தினார். என் வாழ்க்கையில் நடந்த அந்த மோசமான சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என காயத்ரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X