»   »  எனக்கு சேலை தான் சரி-கோபிகா

எனக்கு சேலை தான் சரி-கோபிகா

Subscribe to Oneindia Tamil

மாடர்ன் பொண்ணாக நடிப்பதை விட பாவாடை, தாவணியிலும், புடவையிலும் வருவதே தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறுகிறார் கோபிகா.

சமீபத்தில் கோபிகா கொடுத்த இரண்டாவது சூப்பர் ஹிட் படம் வீராப்பு. கனா கண்டேனுக்குப் பிறகு தமிழில் தனது படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார் கோபிகா.

சின்ன இடைவெளி விட்டு அவர் நடித்த எம் மகன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து நிறையத் தமிழ்ப் பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனாலும் மலையாளத்திலேயே அதிகம் நடிக்க அவர் ஆசைப்பட்டார். இதனால் தமிழ்ப் படங்ளை ஒதுக்க ஆரம்பித்தார் கோபிகா.

மலையாளத்திலும், தமிழிலும் உருவான அரண் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் கோபிகா நடித்த படம் வீராப்பு. சுந்தர்.சிக்கு ஜோடியாக கோபிகா நடித்த இப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

தான் சமீபத்தில் தேர்வு செய்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் சந்தோஷமாக உள்ளார் கோபிகா. இதுதவிர ஓணத்தையொட்டி மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள அலி பாய் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியாம் கோபிகாவுக்கு.

இதுகுறித்து அவர் கூறுகையில், அலிபாய் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல நான் தமிழில் நடித்த வீராப்பு படமும் வெற்றிப் படமாயுள்ளது. இதையும் நான் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். இந்தப் படத்தின் ஒரிஜினல் மோகன்லால் நடித்த ஸ்படிகம் என்பது எனக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்தது (தாய்மொழிப் பாசம்) என்றார் கோபிகா.

சரி, தமிழில் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று கேட்டால், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மற்றபடி தமிழில் நடிக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை.

எனக்கு மாடர்ன் பெண் கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. மலையாளமாக இருந்தாலும் சரி, தமிழாகட்டும் மாடர்ன் பெண் கேரக்டர் என்றால் முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பேன். எனக்குப் புடவைதான் ரொம்பப் பிடிக்கும், அதேபோல பாவாடை தாவணியும் ரொம்பப் பிடிக்கும்.

இந்தக் காஸ்ட்யூமில் நான் நடித்துள்ள அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இது எனக்கு ரொம்பப் பெருமையான விஷயம். வீராப்பு படத்தில் எனது காஸ்ட்யூமை பலரும் ரசித்து வருகின்றனர். எனது உடல் வாகுக்கும் சேலைதான் அம்சமாக இருக்கும் என்கிறார் கோபிகா.

மெய்யாலுமாத்தான் கோபிகா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil