விஜய் கட்சிக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்.. விஜயகாந்த் மாதிரி அவரை முடிக்க பாக்குறாங்க..கஸ்தூரி!
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது 41 பேர் கூட்டநெரிசல் சிக்கி உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, விஜய் கட்சிக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றார்.
இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, தற்போது நான் என்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருக்கிறேன். இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். இந்த நேரத்தில் நான் கரூர் மக்களுடன் இருந்திருக்க வேண்டுமே என்கின்ற ஆதங்கம் என்னை வாட்டி வதைக்கிறது. எனக்கே இப்படி இருக்கும் போது, விஜய்யின் மனநிலை எப்படி இருக்கும்.

நடிகை கஸ்தூரி பேச்சு: சம்பவ இடத்திற்கு ஏன் விஜய் வரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள், விஜய்யை எந்த வகையில் தடுத்து வைத்து வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது யாருக்கு தெரியும். நான் கைது செய்யப்பட்ட பிறகு ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், அப்போது போலீஸ் தரப்பில் இருந்து நீங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இப்படி ஒரு பிரச்சனை நடக்கும், நிகழ்ச்சியை தவிர்த்து விடுங்கள், அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்தினால் உங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றார்கள். அதையும் மீறி, நான் நிகழ்ச்சியை நடத்திய ஆவேன் என்றதும், நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலத்தின் உரிமையாளர் எனக்கு ஃபோன் செய்து தயவு செய்து இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்துவிடுங்கள் என என்னிடம் கெஞ்சினார். இதுதான் திமுகவின் சதி வலை, அனைவரையும் ஒருவிதமான பயத்தில் ஆழ்த்தி செயல்படவிடாமல் தடுப்பது. இவற்றை அவர்கள் நேரடியாக செய்ய மாட்டார்கள் மறைமுகமாக பல பிரச்சனைகளை கொடுப்பார்கள்.
ஸ்லீப்பர் செல்: தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, பிரச்சாரத்தில் விஜய் பேசிய போது செருப்பு வீசியது யார்? செருப்பு வீசியதற்கான காணொளிகளை நாம் பார்க்கிறோம். அந்த கூட்டத்திற்குள் குண்டரகள் நுழைந்து இருப்பது தெரியவருகிறது. அது மட்டும் அல்லாமல், விஜயின் கட்சிக்குள்ளே மாற்றுக் கட்சிகள் ஊடுருவி ஸ்லீப்பர் செல்போல இருக்கிறார்கள். அவர்கள் மறைந்து இருந்து தவறான செயல்களை செய்து வருகிறார்கள். இதனால் தான் விஜய் செல்கிற இடங்களில் எல்லாம் மைக் வேலை செய்வதில்லை, பவர் கட் நடக்கிறது. விஜய் கரூர் பிரச்சாரத்திற்கு 10 ஆயிரம் பேர் தான் கூடுவார்கள் என அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால், அந்த பிரச்சார கூட்டத்திற்கு 25 ஆயிரம் பேருக்கு மேல் வந்திருக்கிறார்கள். விஜய்யின் பலம் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், விஜய்யின் பலம் என்னவென்று திமுகவிற்கே தெள்ளத் தெளிவாக தெரிவதால் தான் இப்படி ஒரு விஷயத்தை அவர்கள் கையில் எடுத்து இருக்கிறது.
முடக்க பார்க்கிறார்கள்: ரஜினியை மூளை சலவை செய்து கட்சிக்கு வராமல் செய்து விட்டார்கள். அதேபோல கமலஹாசனை சரசமாடி பின்வாங்க வைத்து விட்டார்கள். குடிகாரன் என விஜய்காந்தை பேசி எதிர்கட்சித் தலைவரை முடிக்கிறார்கள், வைகோ எதிர்காட்சி தலைவராக இருந்த போது, அவர் எங்கு சென்றாலும் கூட்டணி விளாங்காது என்று அவரை காமெடியனாக்கினார்கள், பின் வைகோ அவர்களின் கூட்டணியில் ஐக்கியம் ஆனபின் தான், விமர்சனத்தை நிறுத்தினார்கள். இப்படியான பல விதமான மூளைச்சலைகள், சரசமாடுதல், மிரட்டல்கள் என விஜய்க்கு நடந்து இருக்கிறது. அதற்கெல்லாம் அவர் செவி சாய்க்காததால் விஜய் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். எது எப்படியாக இருந்தாலும் 41 உயிர் பறிபோன கரூருக்கு விஜய் அவர்கள் சென்று இருக்க வேண்டும், மக்களுக்காக இருக்கும் தலைவன் உயிர் போனாலும் அந்த இடத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











