ஸ்கின் க்ளோவுக்காக குடிக்க ஆரம்பித்தேன்.. பேட்டியில் மானத்தை வாங்கிய சீரியல் நடிகை!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் கிருத்திகா அண்ணாமலை. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் சந்திரகலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் இவர் பல விஷயம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை கிரித்திகா பேட்டி: அதில், தொகுப்பாளர் அசார், நடிகை கிருத்திகாவிடம் ரேஷ்மா பசுபுலேட்டி கிட்ட இருக்குற ஒரு விஷயம் தன்னிடம் இல்லை அது என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த, கிருத்திகா, நான் அவரை விட உயரமாக இருப்பேன். இதுகுறித்து அவரே என்னிடம் பல முறை பேசியுள்ளார். அதனால் நான் அதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அவர் அவருடைய ஸ்கின்னை நன்றாக பராமரிப்பார். அது என்னிடம் இல்லை என்றார். அதைத்தொடர்ந்து கமலேஷூடன் காதலா என செய்தி பரவியதே அது உண்மையா என அசார் கேட்டார். அதற்கு அப்படி இல்லை, சுகன்யா நடித்த ஆனந்தம் சீரியலில் அவருடன் நடித்திருந்தேன். அப்போது, கமலேஷ் பார்ப்பதற்கு மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தார் அந்த நேரத்தில், அவர் மீது ஒரு க்ரஷ் இருந்தது. ஆனால், அது காதல் இல்லை என பதில் அளித்தார்.

Krithika annamalai interview
Photo Credit:

அதற்காக குடிக்க ஆரம்பித்தேன்: இதைத்தொடர்ந்து, முதன்முதலில் எப்போது சரக்கு அடித்தீங்க என ஆசார் கேட்டார். அதற்கு பதில் அளித்த கிருத்திகா, நடிக்க தொடங்கிய போது அனைவரும் Wine குடித்தால் ஸ்கின் க்ளோவாக, பளபளவென்று நன்றாக இருக்கும் என சொன்னார்கள். அதற்காக அப்பொழுதுதான் முதன் முதலாக Wine குடித்தேன். தினமும் தூங்கும் போது கொஞ்சமாக Wine குடித்துவிட்டு தூங்கினால் நிச்சயமாக நல்ல க்ளோ கிடைக்கும், அதிகமாக குடித்தால் பலன்தராது. என் 22வது வயதில் இருந்து அதைத்தான் நான் குடிக்கிறேன். எப்போவது, சரக்கு அடிப்பேன் என நடிகை கிருத்திகா அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், அழகுக்காக பெண்கள் குடிக்கலாமா என்றும், இவர் தான் புதுமைப்பெண் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X