கணவனை இழந்து நிற்கதியா நின்னேன்.. அந்த நேரத்தில் பரவிய வதந்தி.. குமுறிய நடிகை மீனா!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வரும் நடிகை தான் மீனா. கண் அழகுக்கு தமிழ்நாட்டை எழுதி வைக்கட்டுமா என்று பாடல் பாடும் அளவுக்கு, மீனாவின் கண் பேரழகாக இருக்கும். அந்த கண் அழகுக்காகவே தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் இவரை சுற்றி வருகிறார்கள். இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வரும் மீதான பேட்டி ஒன்றில் தன்னை குறித்து பரவி வரும் வேதனை குறித்து மனம் வருந்தி பேசி உள்ளார்.
90 கால கட்டத்துல தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, அர்ஜூன், பிரபுதேவா, அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் இவர் ஜோடி போட்டு நடித்த எஜமான், வீரா, முத்து படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதேபோல கமலுடன் சேர்ந்து அவ்வைசண்முகி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசிலில் நல்ல வசூலை அள்ளியது. அந்த படங்கள் மட்டுமில்லாமல் பொற்காலம், பாரதிகண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் வெற்றியால் மீனா தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகையாக மாறினார்.

நடிகை மீனா பேட்டி: பிஸியாக நடித்துக் கொண்டிருந்த மீனா, பொறியார் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது, மீனா தனது மகள் நைனிகாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா தனது பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் "ஜெயம்மு நிச்சயாமு ரா" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அம்மா தான் காரணம்: அதில், நான் ஹீரோயினான அறிமுகமான போது, என்னைவிட வயதில் மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நடித்தேன். அதேபோல, தமிழில் ரஜினிகாந்த் அவர்களுடன் மகளாகவும் நடித்திருக்கிறேன். அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறேன். அது எல்லாம் எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் நினைக்கிறேன். இவை அனைத்திற்கும் காரணம் என்னுடைய அம்மா தான், அந்த காலத்தில் போன் இல்லை, போக்குவரத்து வசதி, என இப்படி எதுவுமே சரியாக இல்லாத காலகட்டத்திலேயே என்னுடைய அம்மா எந்தெந்த படத்திற்கு எப்போது கால்ஷீட் என அனைத்தையும் தெளிவாக குறித்துவைத்து இருந்தார்கள். எனக்காக கடுமையாக வேலை செய்தது என்னுடைய அம்மா தான் என்றார்.
வேதனை: இதைத்தொடர்ந்து வதந்தியால் பாதிக்கப்பட்டது பற்றி பேசிய மீனா, நடிகைகள் என்றால் வதந்திகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், என் கணவர் இறந்த பின், அந்த நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என பல வதந்திகள் வந்தன. அந்த நேரத்தில் அந்த வதந்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் செய்தது, அந்த வதந்திகள் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்தது என்று அந்த பேட்டியில் நடிகை மீனா மனம் திறந்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











