இருவரும் வேறு வேறு சாதி.. நாங்கள் செய்த பெரிய தவறு.. 11 வருடம் தள்ளிப்போன திருமணம்.. ரோஜா பேட்டி!
சென்னை: 90 கால கட்டங்களில் தென்னிந்திய திரை உலகை கலக்கியவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜுன், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரோஜா செல்வமணி மீதான தகவல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அதில், எனக்கு செல்வாவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால் பெண்களுக்கு அவர் எப்போதுமே ஆதரவாக இருப்பார். அவர் பெரியாரின் கொள்கை கொண்டவர் என்பதால், ஆண் பெண் இருவருக்கும் சமமான உரிமை கொடுக்க வேண்டும் என பேசுவார். சில பேர் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும், ஆண் பெண் இருவருமே சமம் என பேசுவார்கள். மனைவி என்று வரும் போது அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால், செல்வா அன்றிலிருந்து இன்று வரைக்கும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான்.

நடிகை ரோஜா பேட்டி: தெலுங்கு படம் ஒன்றில் நான் நடித்துக் கொண்டு இருந்த போது தான், செல்வா என்னிடம் முதன் முதலாக காதலை சொன்னார். என்னிடம் காதலை சொல்லிவிட்டு உடனே என்னுடைய வீட்டிற்கு சென்று அவர்களிடம் நான் உங்கள் மகளை காதலிக்கிறேன், ரோஜாவை திருமணம் செய்து வைத்தால், அவளை நான் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் திருமணத்திற்கு சம்மதிப்பார்களா? என்ற பயம் இருந்தது. ஆனால், என் வீட்டில் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்கள். அதன்பின், என்னுடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், எனக்கு ஒரு நெக்லஸை வாங்கி வந்து பரிசாக கொடுத்துவிட்டு, திருமணத்திற்கு வீட்டில் ஓகே சொல்லி விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான தகவலை சொன்னார். அந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்.
11 வருட காத்திருப்பு: ஆனால், திருஷ்டிப்பட்டது போல எனக்கும் அவருக்கும் திருமணமாவதற்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது .ஏனென்றால், என்னுடைய அம்மா எனக்காக வாலண்டியர் ரிட்டயர்மென்ட் ஆகிவிட்டார். அதேபோல, சினிமாவிற்கு நான் வந்துவிட்டதால், எனக்காக என் அண்ணன் வேலையை விட்டுவிட்டார். இப்படி எங்களை நம்பி அனைவருமே வந்துவிட்டதால், அவர்களுடைய வாழ்க்கையை செட்டில் செய்ய வேண்டும் என்பதற்காக அதிரடிபடை என்ற திரைப்படத்தை ஆரம்பித்தோம். எந்த நேரத்தில் அந்த பெயரை வைத்து, படத்தை ஆரம்பித்தோமோ? அதிலிருந்து, எனக்கு அடுத்தடுத்து விபத்துகள். தலையில் அடிபட்டு மூன்று மாதம் ரெஸ்ட் எடுத்தேன். காலில் அடிபட்டு ஓய்வில் இருந்தேன். இதனால் நாங்கள் போட்டு வைத்திருந்த பட்ஜெட்டை தாண்டி, கடன் மேல் கடனாகி கடைசியில் அந்த கடனை எல்லாம் அடைத்து விட்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.
உருகி உருகி காதலித்தோம்: அந்த 11 வருடங்களும் நானும் செல்வாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் எங்களுடைய குடும்பமும் அவர்களுடைய குடும்பமும் இணைந்து இருப்பதற்கு வழி வகை செய்தது. நடிகர்கள் என்றாலே திருமணம் செய்பவர்கள், அடுத்து விவாகரத்து செய்து விடுவார்கள் என்ற கெட்ட பெயர் இருக்கிறது. அந்த அவப்பெயர் இல்லாமல் 11 வருட இடைவெளி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்துக்கொண்டே இருந்தோம் என நடிகை ரோஜா அந்த பேட்டியில் பல விஷயத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











