கர்ப்பமாக இருந்தபோது வயிற்றில் உதைத்தார்.. கணவரால் நான் அனுபவித்த கொடுமை.. கலங்கிய நடிகை சரிதா!

சென்னை: 1970களின் இறுதி காலக்கட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் நடிகை சரிதா. தனித்துவமானவர். அவரிந் நடிப்பை யாருமே குறை சொல்ல முடியாது. சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்த இவர், நிஜவாழ்க்கையில் தன் கணவனால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கண்ணீர் மல்க அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெணடாகி பேசுபொருளாகி உள்ளது.

நடிகை சரிதா: கே. பாலச்சந்தர் இயக்கிய 'மரோ சரித்ரா 'என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் சரிரா. அதைத்தொடர்ந்து தமிழில் அவள் அப்படித்தான் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். பின் பாலச்சந்தரின் 'தப்பித தாளா' என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத் தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது பாலச்சந்தர் இயக்கிய 22 படங்களில் கதாநாயகியாக சரிதா நடித்துள்ளார். அதில், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்ற படங்கள் அவருக்கு விருதை பெற்றுக்கொடுத்தது.

இரண்டாவது திருமணம்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சரிதா, வேங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த வாழ்கை ஓராண்டுக்குள்ளே முடிந்துவிட்டது. இதையடுத்து, மலையாள நடிகர் முகேசை இரண்டாவதாக 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரவண், தேஜா என்ற மகன்கள் பிறந்த நிலையில், 2007 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிந்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரிதா தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்தார்.

saritha painful story
Photo Credit:

கண்ணீர் பேட்டி: இந்நிலையில் நடிகை சரிதா அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. அதில், தனது கணவர் முகேஷ் செய்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு பேசி உள்ளார். நான் கர்ப்பமாக இருக்கும் போது, என் கணவர் என் வயிற்றில் மிதித்தார். நான் வலிதாங்க முடியாமல் அம்மா என்று வயிற்றை பிடித்துக்கொண்டு கத்தினேன். அதைப்பார்த்துவிட்டு அவர், வாவ்... சூப்பர், நீ ஒரு நல்ல நடிகை நல்லா அழு என்றார். நான் கரு கலைந்துவிடுமோ என்று நான் பயந்தேன். எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்காத கொடுமை எனக்கு நடந்தது. இது போல கொடுமைகளை நான் சினிமாவில் தான் பார்த்து இருக்கிறேன். ஆனால், அவை அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது.

Take a Poll

மிகவும் கஷ்டப்பட்டேன்: குழந்தை பிறந்த போது, நான் முகேஷை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவர் ஃபோனை எடுக்வில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் மூன்று நாட்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் தவித்தேன். அப்போது தான் இந்த விஷயத்தை அனைவரிடமும் சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்து என் நண்பர்களிடம் சொன்னேன். இந்த விஷயம் தெரிந்து பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்ப்பு கொண்டு கேட்ட போது, முட்டாள் தனமாக எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லிவிட்டேன். அதன்பிறகு தான் அந்த வாழ்க்கையில் இருந்து நான் விவகாரத்து பெற்று மீண்டு வந்தேன் என நடிகை சரிதா கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளர். மலையாள நடிகரான முகேஷ் தற்போது மலையாளத் திரையுலகில் ஒரு மூத்த நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.

More from Filmibeat

Read more about: saritha சரிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X