twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப மனிதநேயம் மிக்கவர் அஜித்.. 8 மணிநேரம் நின்னுட்டே பேசினார்.. பூரிப்பில் எம். எஸ். பாஸ்கர்!

    |

    சென்னை: செல்ஃபி எடுப்பது தவறில்லை. ஆனால் தேவையில்லாத நேரங்களில் செல்ஃபி எடுத்தால் தனக்கு கோபம் வரும் என்றும், நடிகர்களுக்கும் Privacy தேவை என்றும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.

    Recommended Video

    M.S Bhaskar Part-02 | இப்படி SELFI எடுத்தா எனக்கு கோவம் வரும் | Filmibeat Tamil

    போலீசாக முடியவில்லை; நடிகனாகி விட்டேன் என்றும், உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    வாழ்க்கையில் போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடும் என்று கூறிய எம்.எஸ்.பாஸ்கர், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சமுத்திரகனிக்கு என்ன ரோல் தெரியுமா? சரியான பிறந்தநாள் பரிசு!சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சமுத்திரகனிக்கு என்ன ரோல் தெரியுமா? சரியான பிறந்தநாள் பரிசு!

    போராட்டம் தான் வாழ்க்கை

    போராட்டம் தான் வாழ்க்கை

    கேள்வி: உங்கள் ஆரம்ப காலம் திரைப்பயணம் குறித்து நீங்கள் கூற விரும்புவது...

    பதில்: நான் நடித்த பட்டாபி என்ற கதாபாத்திரம் தான் மக்களிடம் என்னை அடையாளம் காட்டியது. நான் தூங்கும்போது கூட பட்டாபி என்று அழைத்தால் நான் எழுந்து விடுவேன். எனக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்பொழுது இருக்கின்ற பிளாட்பார்ம் அப்பொழுது கிடையாது. போராட்டம் தான் வாழ்க்கையாக இருந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடுகிறது. சேலஞ்சிங் முக்கியம். எப்பொழுது ஒரே மாதிரியான கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்காது. சிவாஜிகணேசன், ரஜினி, கமல் போன்றவர்கள் மாதிரி புதியதாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது என்றார்.

    இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ராடான் நிறுவனத்திற்கும், அதற்கு பிறகு எனக்கு வாய்ப்பளித்த சக்திவேல், ராஜீவ்ஈஸ்வர், பேரரசு, திருமுருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

    51 விருதுகள்

    51 விருதுகள்

    கேள்வி: நீங்கள் ஏற்றுக் நடிக்கும் கதாபாத்திரங்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது. இது குறித்து உங்கள் கருத்து...

    பதில்: நான் டிரெண்டிங்கில் இருப்பது என்னுடைய கையில் இல்லை. அழுத்தமான கதாபாத்திரத்தை எனக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர், படக்குழுவினர்கள் வழங்குகிறார்கள். நான் மலையாளத்தில் முனுசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜலசமாதி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படமானது 51 விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தில் நான் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

    போலீசாக முடியவில்லை; நடிகனாகி விட்டேன்

    போலீசாக முடியவில்லை; நடிகனாகி விட்டேன்

    கேள்வி: நீங்கள் நடித்த டாணாக்காரன் படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது, நீங்கள் ஏற்ற செல்லக்கண்ணு கதாபாத்திரம் குறித்து...

    பதில்: எனக்கு போலீஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். போலீசில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. நாம் எதுவாக ஆக வேண்டும் என்று நாம் நினைப்பது ஒன்று. இறைவன் நினைப்பது ஒன்று. போலீசாக முடியவில்லை. நடிகனாகி விட்டேன்.

    டாணாக்காரன் படத்தில் எனக்கு அளித்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் தமிழுக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடித்தது சந்தோஷம். இயக்குனர் தமிழ் ஏற்கனவே போலீசில் பணிபுரிந்தவர் என்பதால் எனது கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

    இயக்குனர் தமிழ் என்னிடம் கூறுகையில், நான் பரேடு எடுக்கும் காட்சியில் நீங்கள் சும்மா கை மட்டும் ஆட்டினால் போதும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இது சரியாக அமைய வேண்டுமென்றால் ரொம்ப பயிற்சி வேண்டும் என்றார். அதனால் என்ன? நானே பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கிறேன் என்றேன். ஏனெனில் படப்பிடிப்பு சென்ற நாள் முதல் இரவு மட்டும் தான் ஹோட்டலுக்கு செல்வேன். மீதி நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் மற்றவர்கள் எடுக்கும் பரேடு போன்றவற்றை பார்த்து கொண்டு, அனைத்தையும் உள்வாங்கி நடித்தேன். காட்சிகள் அருமையாக வந்தது. இயக்குனர் தமிழ் என்னை மிகவும் பாராட்டினார் என்றார்.

    டாணாக்காரன் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ரொம்ப கஷ்டப்பட்டார். பரேடில் கலந்து கொண்ட அனைவரும் கஷ்டப்பட்டார்கள். நான், நடிகர் மதுசூதனன், நடிகர் லால் ஆகியோர் வெயிலின் தாக்கம் தெரியாத அளவுக்கு எங்களது கதாபாத்திரத்துடன் ஐக்கியமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

    எதற்கு டாக்டர் பட்டம்?

    எதற்கு டாக்டர் பட்டம்?

    கேள்வி: உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறித்து...

    பதில்: நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காக எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கவேண்டியதை ஏன் எனக்கு வழங்குகிறீர்கள் என்று கேட்டேன். சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டேன்.

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    கேள்வி: உங்களது தலைமுறையான ஐஸ்வர்யா, ஆதித்யா வளர்ச்சி குறித்து கூறுவது..

    பதில்: எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற தகுதியை நடிகர் ராதாரவி வழங்கினார். எனது மகள் ஒரு நாள் என்னை அழைத்து ஒரு விளம்பரத்தை காட்டினார். எப்படியிருக்கிறது என்றார். நன்றாக உள்ளது என்றேன். அந்த விளம்பரத்திற்கு நான் தான் ட்ப்பிங் கொடுத்துள்ளேன் என்றபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    அதே போல் ஒரு நல்ல கதாபாத்திரம் உள்ளது என்று ஒரு போன் கால் வந்தது. நான் அப்படியா என்றேன். உங்களுக்கு இல்லை. உங்கள் மகனுக்கு என்றனர். சந்தோஷமாக இருந்தது. நான் எனது பிள்ளைகளுக்கு தடை சொல்வது இல்லை. இப்படி தான் செய்ய வேண்டும் என்று கூறுவதும் கிடையாது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நன்மையானதாக தேடி செய் என்பது மட்டும் தான். நிதானமாக வா என்பது மட்டும் தான் எனது அறிவுரை. எனது மகன் ஆதித்யா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் பாவக்கதைகள் வெப்பிலிம் ஒன்று செய்துள்ளான். கொரோனா காலக்கட்டத்தில் 3 வெப்பிலிம் நடித்துள்ளான். தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளான் என்றார்.

    நடிகர்களுக்கும் Privacy தேவை

    நடிகர்களுக்கும் Privacy தேவை

    கேள்வி: செல்பி எடுத்தால் உங்களுக்கு கோபம் வருவதாக கூறுகிறார்கள்? அப்படியா?

    பதில்: கோபம் வருவதில்லை. செல்பி எடுப்பது என்பது தவறு கிடையாது. செல்பி எடுப்பதற்கு முன்பு நடிகர், நடிகைகளிடம் அனுமதி பெற்ற பின்பு எடுக்கலாம். தேவையில்லாத நேரங்களில் செல்பி எடுப்பது தவறு. நடிகர்களுக்கும் Privacy தேவை என்பது மட்டும் தான் எனது கருத்து. நானும், எனது குடும்பமும் இன்று நிம்மதியாக சாப்பிடுகிறோம் என்றால் ரசிகர்கள் தான் காரணம். இந்த கருத்தை மலையாள நடிகர் பிரேம் நசீரும் தெரிவித்துள்ளார் என்றார்.

    நடிகர் அமிதாப்பச்சன்

    நடிகர் அமிதாப்பச்சன்

    கேள்வி: கே.ஜி.எப் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது:

    பதில்: படம் நன்றாக உள்ளது. இந்த படத்திற்கு எனது மாமா நிழல்கள் ரவி டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அவர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொடுத்த வாய்ஸை என்னால் இன்றும் மறக்க முடியாது என்றார். நாம் பழகுற போது உண்மையான அன்போடு பழகினால் அவர்களும் உண்மையாகவே இருப்பார்கள் என்றார்.

    நான் பார்த்த குழந்தை

    நான் பார்த்த குழந்தை

    கேள்வி: நடிகர் விஜய் குறித்து...

    பதில்: நடிகர் விஜய்யை அவரது சிறுவயது முதலே எனக்கு தெரியும். ஆனால் இன்று மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். அவரது இந்தளவிற்கு வருவதற்கு காரணம் அவரது உழைப்பு. நான் பார்த்த குழந்தை இன்று மிகப்பெரிய உயரத்தில் இருப்பதை நாம் பார்க்கும்பொழுது ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்றார்.

    மரியாதை தெரிந்த மனிதர்

    கேள்வி: நடிகர் அஜித் குறித்து...

    பதில்: நடிகர் அஜித் போன்ற மரியாதை தெரிந்த மனிதரை பார்க்க முடியாது. கிரீடம் பட சூட்டிங்கின் போது நானும் மனோபாலாவும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அஜித் எங்களை உட்காரவைத்து கொண்டு, அவர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நாங்கள் எழுந்து காபி சாப்பிட போகிறோம் என்றோம். உடன் அவர் உதவியாளரை அழைத்து, இவர்களுக்கு காபி கொடுங்களேன் என்று மரியாதையாக கூறினார். அன்று எங்களுடன் 8 மணி நேரம் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார். நிலை உயரும்போது பணிவு வந்தால் உலகில் உயிர்கள் உன்னை வணங்கும் என்பதற்கு இணங்க அவரது நடவடிக்கை இருந்தது.

    கேள்வி: நீங்கள் எத்தனை மொழிகளில் பேசுவீர்கள்?

    பதில்: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம். பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/FaGngfM1bS0, https://www.youtube.com/watch?v=Ctkne8g6-ew இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..

    English summary
    Ajith has more Humanity and he talked to me for 8 Hours without sitting Says MS Bhaskar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X