»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

இனி கார் ரேஸ் எல்லாம் கிடையாது; சினிமா மட்டும்தான்; ஒரு கை பார்த்து விடும் முடிவில் இருக்கிறேன் என்றுதோள் தட்டுகிறார் அஜீத்.

ராஜா, ரெட், ஆஞ்சநேயா, ஜனா என அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டிருப்பார் என நினைத்தால், மனுஷர்உற்சாக வெடியாக ஜி படத்தில் மூழ்கியிருக்கிறார்.

எப்படியும் ஒரு வெற்றிப் படம் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் அஜீத் , ‘’நாலு படம் சரியாப்போகலை என்றவுடன் அஜீத் அவ்வளவுதான் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். எனக்கு இன்னும் வயதுஇருக்கிறது. என்னுடைய ஒரே பலவீனம், ஒரே நேரத்தில் சினிமா, கார் ரேஸ், விமானப் பயிற்சி என்று நாலாப்பக்கமும் ஆர்வமாக இருந்ததுதான்.

இப்ப சினிமாவைத் தவிர மற்ற எல்லாத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டேன். ஒரு வருடத்தில் நான் யார் என்பதைக்காட்டுகிறேன். அதுவரைக்கும் ஆடுகிறவர்கள் ஆடட்டும்.

என்னுடைய மைனஸ் பாயிண்ட்டே, மற்றவர்கள்போல் காமிராவுக்குப் பின்னாடி நடிக்கத் தெரியவில்லைஎன்பதுதான். என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையாகச் சொன்னால் திமிராகப் பேசுகிறான் என்கிறார்கள்.எனக்குப் பிடிக்கிற, நான் நம்புகிற ஒரு விஷயத்தைப் பற்றி பேசினால் தப்பா?

நான் கார் ரேஸ், விமானப் பயிற்சி என்று போவது எல்லாம் ஒரு பெரிய குறையா? அதனால்தான் என்னுடையபடங்கள் வெற்றி பெறவில்லை என்று கூறுகிறார்கள். இதனால்தான் தோல்வி என்றால், அந்தப் படங்களோடஇயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கார் ரேசுக்குப் போனார்களா?

நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதேநேரத்தில் கஷ்டப்பட்டு நான் அடைந்த இந்த இடத்தை வேறயாருக்கும் விட்டுத்தர மாட்டேன். வெற்றிப்படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தால்தான் சினிமாவில் நிற்கமுடியும்.

தோல்வியைக் கண்டு நான் கலங்கவில்லை. வெற்றியின் போது என் பெயர் வந்தால், தோல்வியின்போதும் என்பெயர் வரத்தானே செய்யும். இப்ப எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, சினிமாவில் மட்டும் ஒரு கை பார்ப்பதுஎன முடிவெடுத்து விட்டேன்‘’ என்று தன்னம்பிக்கையாகப் பேசுகிறார் அஜீத்.

இப்போது நடித்து வரும் ஜி படத்தில், மாணவனாக இருந்து கொண்டு அரசியலில் இறங்குபவராக அஜீத் நடித்துவருகிறார். எடுத்த வரைக்கும் ரஷ் போட்டுப் பார்த்ததில் ஆய்த எழுத்து படத்தில் வருவது போல் சில காட்சிகள்இருந்தனவாம். உடனடியாக அவற்றை நீக்கிவிட்டு இப்போது புதிதாக ஷூட் செய்து வருகிறார்கள்.

Please Wait while comments are loading...