»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

உன்னைக்கொடு என்னைத் தருகிறேன் படத்தின் அவுட்டோருக்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார் அஜித்.அவர் நடித்துக் கொண்டிருக்கும் எல்லா படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு ஏப்ரல் 24 ம் தேதி ஷாலினியைமணம் செய்கிறார்.

திருமணம் பற்றி விசாரிக்க லேசான வெட்கத்துடன் சிரித்தபடியே பேசத் தொடங்கினார். நான் ரொம்பஅதிர்ஷ்டக்காரன். ஷாலு (ஷாலினியைத்தான் சொல்கிறார்) எனக்குக் கிடைச்சது பெரிய விஷயம். என்வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. நான் இந்து. ஷாலு கிறிஸ்டின். அதனால் முதலில் இருவரும் மோதிரம்மாற்றிக்கொண்டு, பின் வைதீக முறைப்படி மந்திரம் சொல்லி தாலி கட்டிக் கல்யாணம் நடக்கும்.

எங்களுக்குள் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. திருமணத்திற்குப் பிறகு ஷாலினி என்னைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருப்பதால் சினிமாவில் நிச்சயமாக நடிக்க மாட்டார்.

ஹனிமூன் எங்க கொண்டாடப்போறீங்க சார் என்றோம்.

மறுபடியும் அதே வெட்கத்துடன் கூடிய சிரிப்பு. தொடர்கிறார். மே மாதம் என் பிறந்தநாள். அன்று மதுரையில்ரசிகர்களோடு ஷாலினியுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உடனே ஹனிமூன் போகிறதா பிளான். ஈரோப் போய்அங்கிருந்து அமெரிக்கா. அடுத்து சிங்கப்பூர், துபாய்னு ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு வரணும். இரண்டு மாதம்ஜாலிதான்.

உன்னைக்கொடு என்னைத்தருவேன் ஷூட்டிங் இன்னும் சில நாள்ல முடிஞ்சிடும். அடுத்தது கல்யாணம்,பிறந்தநாள், ஹனிமூன் ஜூலை மாதம் நான் திரும்பிய பிறகுதான் அடுத்த பட வேலை ஆரம்பிக்க வேண்டும்.அதுவரை ஜாலி, ரிலாக்ஸ் என்று கண்சிமிட்டி சிரித்தார்.

அடுத்து ஷாலினியைப் பேட்டி எடுக்கப் போறோம் என்று நாம் சொன்னதுதான் தாமதம்.. டேய் ஷாலுஉன்னைப் பேட்டி எடுக்க எப்ப வரச்சொல்லலாம் செல்போனில் பேசினார் அஜீத். மேடம் உடனேவரச்சொல்றாங்க என்றார் நம்மிடம்.

அடுத்த சில நிமிடங்களில் ஷாலினி வீட்டில் நாம். சிவப்பு கலர் சுடிதாரில், நன்றாக டிரஸ் பண்ணி, ஷாம்புவிளம்பரத்தில் வருகின்ற பெண்ணைப் போன்ற கூந்தலுடன் சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஷாலினி.

அமர்க்களம் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை.நானும் அவரும் (அஜீத்) படப்பிடிப்பு இடைவேளையின்போது பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஒரு நாள்அவரே என்னுடைய சினிமா வாழ்க்கை சிறப்பா அமையணும்னா என்னைக் கவனித்துக் கொள்ள நல்ல நபர்அல்லது தோழி வேண்டும். என் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் சினிமா சம்பந்தமேஇல்லாதவர்கள் என்று சொன்னவர் திடீரென்று ஷாலு உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்என்றார். தொடர்ந்து அவரே உனக்கு விருப்பம் இருந்தால் உன் பெற்றோரிடம் சொல். நானும் முறைப்படி உங்கள்வீட்டுக்கு பெற்றோர்களுடன் வந்து பெண் கேட்கிறேன் என்றார்.

என் மனதில் காதல் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது. அஜீத்தோட நேரடியான, பொறுப்பான அப்ரோச் எனக்குரொம்ப பிடிச்சிருந்தது. எங்க அப்பா அம்மா கிட்டயும் சொன்னேன். உடனே பேசி முறைப்படி நிச்சய தாம்பூலம்மாற்றிக்கொண்டார்கள் என்றவர் தொடர்ந்து,

அஜீத் ஏற்கனவே பல பெண்களுடன் சுற்றியவர் அது இது என்று பலர் சொன்னார்கள். ஏற்கனவே இதுபற்றியெல்லாம் அஜீத் தெளிவாகச் சொல்லிவிட்டார் என்று அஜீத் பற்றி குறை சொன்னவர்களிடம்சொல்லிவிட்டேன். எங்கள் திருமணம் என்ற பேச்சு என்று தொடங்கியதோ அதிலிருந்து அவரிடம் ஒட்டிக்கொண்டிருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டார். அவரது குணங்களே இப்போது மாறி விட்டது.அடிக்கடி கோபப்படும் அவர் சாந்த சொரூபி ஆகிவிட்டார். அவர் மனைவியாகப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிரியாத வரம் வேண்டும் என்ற படம் பிரசாந்துடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவாரத்தில் ஷூட்டிங் முடிந்து விடும். திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாக நான் நடிக்கக் கூடாது என்பது அவர்விருப்பம். என்றார் ஷாலினி.

அடுத்து ஷாலினி சமையல் எல்லாம் கற்றுக் கொண்டீர்களா என்ற போது,

சமையல் புத்தகத்தை வைத்துக்கொண்டும், அம்மாவிடம் கேட்டுக்கொண்டும் சமையல் கற்று வருகிறேன்.இன்னும் சரியான கைப்பக்குவம் வரவில்லை.

எனக்கு சிக்கன் ஐயிட்டங்கள், ஐஸ்கிரீம் ரொம்பப் பிடிக்கும். ஓரளவு சுமாராகப் பாடுவேன். பியானோ வாசிக்கத்தெரியும்.

அஜீத் அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன்

அஜீத் அம்மா அப்பாவிற்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர்களிடம் நல்ல மருமகள் என்ற பெயர் எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய லட்சியம் என்று குறும்பாகச் சிரித்தார் ஷாலினி.

பேச்சின் நடுவே அஜீத்தை திருமணம் செய்து கொள்வதற்கு நான் ரொம்பக் கொடுத்து வச்சவ என்றார்.

புத்தாண்டு வாழத்துக்களுடன், திருமண வாழ்த்துக்களையும் சொல்லி விடைபெற்றோம்.

Read more about: ajith shalini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil