Don't Miss!
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்பா சொன்ன அசத்தல் டிப்ஸ்.. உடனே செய்த அக்ஷரா.. என்னவெல்லாம் சொல்லி இருக்காரு பாருங்க!
சென்னை: அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானது. இத்திரைபடத்தை நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தயாரித்து நடித்துள்ளார். இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு அப்பா கொடுத்த டிப்ஸ் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் உஷா உதுப், மால்குடி சுபா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்
இரண்டு பெரிய பாடகர்கள் இருக்கும்பொழுது, நான் தவறாக பாடினால் மானம் போய் விடும் என்று அமைதியாக இருந்ததாகவும, இது குறித்து பல ஸ்வாரஸ்யத் தகவல்களை நடிகை அக்ஷரா, நமது பிலீம்பிட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பார்ப்போம்.
பிளாஸ்டிக் சர்ஜரியா?...ரசிகர் மீது பாய்ந்த ஸ்ருதி ஹாசன்

அப்பாவின் ஆர்வம்
கேள்வி: அக்ஷரா, படத்தின் தலைப்பான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு குறித்து அப்பா என்ன கூறினார்?
பதில்: ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது. படத்தின் கதை என்ன என்று கேட்டார். படத்தை ஒரு தடவை பாருங்க. உங்களுக்கு அப்புறம் தெரியும் என்றேன்.
கேள்வி: அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது.
பதில்: இந்த படத்தின் கதை ரொம்ப அழுத்தமானது. ரொம்ப சென்சிடிவ் ஆனது. எனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரமும் வித்தியாசமானது. இந்த கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிப்பதற்கு இயக்குனர் ராஜா உறுதுணையாக இருந்தார். இந்த படத்தில் நான் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முதன்முதலாக காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும் இந்த படம் முழுவதும் சென்னையில் ஷூட்டிங் நடந்தது. இது தொடர்பாக நானும், இயக்குனரும் அதிகமாக டிஸ்கஷன் செய்தோம். எமோஷனல் காட்சிகள் எப்படியிருக்க வேண்டும் என்றும் ஆலோசித்தோம். அந்த காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்தள்ளது என்றார்.

பாப்பா மாதிரி இருக்குற...
கேள்வி: பவித்ரா கதாபாத்திரத்திற்கு வசனங்கள் அனைத்தும் பிராமின் மக்களுடைய வசனங்களாக அமைந்துள்ளது. எதனால்?
பதில்: கதைக்கு பொருத்தமாக இருந்தது. பாப்பா மாதிரி இருக்கிற... ஆனால் பண்றது எல்லாம் பயங்கரமாக இருக்குது என்ற வசனம் பிராமின் சமூகத்திற்கும் மட்டும் பொருந்ததாது. அனைத்து குடும்பங்களிலும் இது போன்ற கதாபாத்திரங்களில் பெண்கள் கண்டிப்பாக இருப்பார்கள். பாப்பா மாதிரி இருக்கிற...ஆனால் பண்றது எல்லாம் பயங்கரமாக இருக்குது என்ற வசனம் எனக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களை கூறினால் தப்பாக போய் விடும் என்று ஜாலியாக கூறினார்.

90% கதாபாத்திரங்கள் பெண்கள்
கேள்வி: உஷா உதுப், மால்குடி சுபா, சுரேஷ் மேனன் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: ரொம்ப சுவாராஸ்யமாக இருந்தது. இந்த படத்தில் 90% கதாபாத்திரங்கள் பெண்கள் தான். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் திறமையானவர்கள். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பின் போது நாங்கள் அனைவரும் இந்த கதாபாத்திரத்தை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கலந்து ஆலோசித்து நடித்தோம். படப்பிடிப்பின் கடைசி நாளில் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக மாறி விட்டோம்.
கேள்வி: உங்களுக்கு நண்பராக நடித்த அஞ்சனா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: அஞ்சனா ரொம்ப திறமையானவங்க. மனதளவிலும் நல்லவர். கடின உழைப்பாளி. நேர்மறை எண்ணங்களை கொண்டவர். ரொம்ப பொறுமைசாலி. அவருடன் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

மானம் போய்விடும்
கேள்வி: கேமராமேன், இசையமைப்பாளர் குறித்து நீங்கள் கூற விரும்புவது...
பதில்: கேமராமேன் ஸ்ரேயா வித்தியாசமாக ஒவ்வொரு காட்சியையும் அழகாக காட்டியிருப்பாங்க. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று யோசித்தேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இசைமைப்பாளர் உஷா மியூசிக் அருமையாக வந்துள்ளது. இந்த படத்துல இரண்டு பெரிய பாடகர்கள் இருக்கும்பொழுது, நான் தவறாக பாடினால் மானம் போய் விடும் என்பதற்காகவே நான் அமைதியாக பின்னணியில் பாடினேன்.
கேள்வி: சினிமாவில் பொதுவாக உங்களுடைய மறக்க முடியாத அனுபவம்
பதில்: நான் பாடிய "வேறு ஏதும் தேவையில்லை" என்ற பாடல் இன்றும் என்னால் மறக்க முடியாது. அந்த படத்தில் நான் நடித்த அனுபவங்கள் ஞாபகங்களாக இன்றளவும் உள்ளது.

தெனாலி பிடிக்கும்
கேள்வி: அக்ஷரா, உங்க அப்பா காமெடி ரோலில் நடிப்பதற்காக ஏதாவது டிப்ஸ் கொடுத்தார்களா?
பதில்: எந்த ரோலும் செய்தாலும் கண்ணாடி முன் நின்று முதலில் நடித்து பார். உன்னை நீ அறிந்து கொள்வாய். அதிலுள்ள தவறுகளை உன்னால் சரி செய்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். அதை நான் இந்த படத்தில் நடிப்பதற்கு முன் செய்தேன். நல்ல ரிசல்ட்டும் கிடைத்துள்ளது. அப்பா நடித்த காமெடி படங்களில் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன் போன்றவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: உங்களுடைய டீன் ஏஜ் வாழ்க்கையுடன் இந்த படம் பொருந்தியுள்ளதா?
பதில்: நிறைய விஷயங்கள் இந்த படத்தில் ஒரே மாதிரியாக இருந்தது. நான் சானிட்டரி நாப்கின் முதன்முதலில் கடைக்கு சென்று வாங்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது சூழ்நிலை மாறி விட்டது. இது போன்ற சில சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நான் காலேஜ் எல்லாம் போகலை என்றார் சிரித்தபடி.
உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும்
கேள்வி: டப்பிங் குறித்து நீங்கள் கூறுவது?
பதில்: படத்தில் நடிக்கக்கூடிய நடிகர், நடிகைகள் தான் அவரவர் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்பது எனது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நடிகர், நடிகைகள் அவரவர் சொந்தக்குரலில் டப்பிங் பேசும்பொழுது, உணர்வு பூர்வமாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், பயிற்சி இல்லாததால் நான் தமிழில் தயக்கமாக பேசி வருகிறேன். ஆனால் முன்பை விட நன்றாக பேசுகிறேன். பயிற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக தமிழ் இன்னும் நன்றாக பேசுவேன் என்றார். இதுபோல் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன் . இந்த முழு வீடியோவை காண கிளிக் செய்யவும்.