»   »  நான் குடிக்கிறேனா?-அக்ஷயா!

நான் குடிக்கிறேனா?-அக்ஷயா!

Subscribe to Oneindia Tamil

நான் குடிப்பதாகவும், கல்யாணமாகி விட்டதாகவும் சில வேண்டாதவர்கள் வதந்தி பரப்பி விடுகிறார்கள் என்று புலம்பியுள்ளார், கலாபக் காதலனில் அக்கா புருஷன் மீது ஆசை வைக்கும் மச்சினியாக நடித்த அக்ஷயா.

கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சிம்ரனின் தங்கச்சியாக நடித்தவர் அக்ஷயா. ஆனால் அப்படத்தில் அவர் சரிவர கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் கலாபக் காதலனில் ரேணுகா மேனனின் தங்கச்சி கேரக்டரில் நடித்தபோது தமிழ் கூறும் நல்லுலகமே அக்ஷயாவின் நடிப்பைப் பார்த்து வியந்தது.

காரணம், அக்ஷயா ஏற்றிருந்த கேரக்டர் அப்படி. அக்கா புருஷன் மீது ஆசை வைக்கும், அடையத் துடிக்கும் மச்சினியாக நடித்திருந்தார் அக்ஷயா. காதலையும், காமத்தையும் கரெக்டாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருந்தார் அக்ஷயா.

ஆனால் அதன் பின்னர் காணாமல் போனார் அக்ஷயா. காரணம், தொடர்ந்து கலாபக் காதலன் பட கேரக்டர் போலவே பல வாய்ப்புகள் வந்ததால், அப்படிப்பட்ட ரோல்களில் நடிக்க முடியாது என்று அக்ஷயா மறுத்து விட்டார். இதனால் படமே இல்லாமல் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் பிரஷாந்த் - கிரகலட்சுமி கதையை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படும் என் மனைவிக்கு நடந்த கல்யாணம் படத்தில் அக்ஷயா நடிப்பதாக செய்திகள் வெளியானது. வேலு பிரபாகரன்தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் அக்ஷயா. இதுகுறித்து அவர் கூறுகையில்,

வேலு பிரபாகரனை நான் நேரில் கூட பார்த்ததில்லை. எனது ஒப்புதல் பெறாமல், எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் அக்ஷயா.

தொடர்ந்து அவர் கூறுகையில், திரையுலகில் என்னைப் பிடிக்காத சிலர் நான் குடிப்பதாகவும், கல்யாணமாகி விட்டதாகவும் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விசனப்பட்டார்.

சரி, இப்போது என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் தெலுங்கில் பிசியாக உள்ளேன். அங்கு சிந்தூரி என்ற படத்தில் கிளாசிக்கல் டான்ஸர் கேரக்டரில் நடித்துள்ளேன். உண்மையில் நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.

எனக்குப் பிடித்த கேரக்டரே கிடைத்ததால் சந்தோஷமாக செய்துளளேன் என்றார் பூரிப்பாக.

நல்லதுங்கம்மணி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil