twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா!

    |

    சென்னை : தென்னிந்தியாவில் மிகச்சிறந்த பாடகர்களாக ஏ. எம். ராஜா, ஜிக்கி இருந்துள்ளனர்.

    Recommended Video

    A. M. RAJA வின் சிஷ்யர்தான் ILAYARAJA | Mrs. Hemalatha | Rewind Raja Ep - 47 | Filmibeat Tamil

    முதல் முறையாக வட இந்தியாவில் கால் தடத்தைப் பதித்த பாடகர் என்ற பெருமையை ஏ எம் ராஜா பெற்றுள்ளார்.

    காசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா காசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா

    இவர்களின் பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டு இருக்க இப்போது ஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் மகள் ஹேமலதா அவர்களை பற்றிய சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்துள்ளார்.

    வாய்ப்புகளையும் தவிர்த்தார்

    வாய்ப்புகளையும் தவிர்த்தார்

    பாடகர் எ ஏ எம் ராஜா தென்னிந்தியாவில் கொடி கட்ட பாடகராக தெரிந்தவர் வீட்டில் எப்படி இருப்பார் என கேட்டதற்கு, வீட்டில் எப்பொழுதுமே அமைதியாக இருப்பார். தென் இந்தியாவைத் தொடர்ந்து வட இந்தியாவிலும் பல பாடல்களை பாடி அங்கும் கலக்கு கலக்கியவர். வீட்டில் அப்பா அம்மா இரண்டு பேருமே ரொம்ப சிம்பிளாக இருப்பாங்க. வெளிநாடுகளுக்கு செல்ல பல வாய்ப்புகள் வந்தபோதும் சிங்கப்பூர் மலேசியாவை தவிர வேறெந்த நாடுகளுக்கும் அப்பா சென்றது இல்லை ஏனெனில் குடும்பத்தை தெரிந்து அவரால் மாதக்கணக்கில் இருக்க முடியாது என்பதற்காக அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்தார் அந்த அளவிற்கு எங்களின் மீது மிகவும் பாசமாக இருந்தார்கள்.

    முதல் பாடல்

    முதல் பாடல்

    1951ல் சம்சாரம் என்ற பாடலின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஜெமினி ஸ்டூடியோவின் எஸ் எஸ் வாசன் முதல் வாய்ப்பு கொடுத்தார். இரண்டு பாடல்களை அப்பவே இசையமைத்து பாடியும் இருந்தார். அந்த பாடல்கள் ஆல் இந்தியா ரேடியோவில் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்து தான் எஸ் எஸ் வாசன் முதல் வாய்ப்பை கொடுத்தார். பின் அந்த பாடல் அனைத்தும் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

    இசையின் மீது பெரும் ஆர்வம்

    இசையின் மீது பெரும் ஆர்வம்

    அப்பா அம்மா இருவரும் நடிக்கத் தொடங்கி பின் பாடுவதில் முழு கவனம் செலுத்தி வந்தனர். 1958 ஆண்டில் அப்பா ஏ. எம்.ராஜா இசை அமைப்பாளராகவும் அறிமுகமானார். சிறுவயது முதலே இசையின் மீது பெரும் ஆர்வம் கொண்ட அப்பா ஏ. எம்.ராஜா பிறந்தது சித்தூர் என்றாலும் வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு டென்ட் கொட்டாயின் பின்னால் நின்று அனைத்து பாடல்களையும் கேட்டுவிட்டு வீட்டில் வந்து அப்படியே பாடிக் காட்டுவார்.

    மகள் ஹேமலதா

    மகள் ஹேமலதா

    துள்ளாத மனமும் துள்ளும், தனிமையிலே இனிமை காண முடியுமா, காலை நீயே மாலை நீயே போன்ற பாடல்கள் எனது மிகவும் ஃபேவரிட் பாடல்கள். மேலும் இளையராஜாவுக்கு இளையராஜா என பெயர் வைக்கப்பட்டதின் காரணத்தை பற்றி கேட்டதற்கு, தனது அப்பாவின் பெயர் ஏ எம் ராஜா என இருப்பதால் சினிமாவில் மற்றொரு ராஜா இருக்க வேண்டாமே என இளையராஜாவுக்கு இளையராஜா என பஞ்சு அருணாச்சலம் தான் பெயர் சூட்டி அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருந்தார். என்ற தகவலையும் இந்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். இவ்வாறு ஏ எம் ராஜா மற்றும் ஜிக்கியின் சுவாரசியமான வாழ்க்கைப் பக்கங்களை பற்றி மகள் ஹேமலதா இந்தப் பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

    Read more about: raja ராஜா
    English summary
    Yesterdayear Singer couple AM Raja and Jikki have sune huge songs and all are super hits till now. Their daughter Hemalatha has shared very interesting facts about her parents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X