தைரியம் இருந்தா.. ஒத்தைக்கு ஒத்த விவாதத்திற்கு வாங்க.. கோபிநாத்தை கதறவிட்ட நடிகை!

சென்னை: 'நீயா நானா' நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் VS தெரு நாய்களுக்கு நகரத்தில் உரிமை உண்டு என்கிற தலைப்பில் கடந்த வாரம் விவாதம் நடைபெற்றது. இதில் படவா கோவி, நடிகை அம்மு என பலர் கலந்து கொண்டு நாய்களுக்கு ஆதரவாக பேசினார்கள. இதில், நடிகை அம்மு பேசிய சில விஷயம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இதுகுறித்து, Cineulagam யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், எட்டு மணி நேரம் தொடர்ந்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து ஒரு சில விஷயங்கள் நாங்கள் பேசியதை மட்டும் தான் ஒளிபரப்பு இருக்கிறார்கள். அவர்கள் கேட்ட கேள்விகள் என்ன அதற்கு. நாங்கள் என்ன பதில் அளித்தோம் என்பதை அவர்கள் ஒளிபரப்பதில்லை. கடைசியில் நாய் பிரியர்கள் ஒரு பக்கம், நாய் எதிர்ப்பாளர்கள் ஒரு பக்கம் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பெரிய சர்ச்சையாக்கி விட்டார்கள்.

Neeya Naana Gopinath Ammu
Photo Credit:

நாங்களும் மனிதர்கள் தான்: நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் தன்னுடைய ஆறு வயது குழந்தை வண்டியில் சென்று கொண்டு இருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் தவறி விழுந்து இறந்து விட்டதாக ஒருவர் சொன்னார். அப்போது, என்னுடைய கண்கள் கலங்கிவிட்டன. இந்த இடத்தில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று ஆர்கியுமென்ட் செய்யக்கூடிய இடம் அது இல்லை. இதனால், நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம். ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு நடந்திருக்கிறது. இதனால் இதை உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய விஷயம் தான் என்று நான் சொன்னேன். அதையும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை. முதலில் ரெக்கார்டிங் செய்யப்பட்ட அனைத்தையும் பார்த்ததால் நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியும். ஏனென்றால் இணையத்தில் எங்களை அவ்வளவு மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மரியாதையே போச்சு: நீயா நானா கோபிநாத் மீது உண்மையில் நல்ல மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தேன். ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு அவர் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. நான் பேசிய பல விஷயங்களை துண்டு துண்டாக கட் செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து இருக்கிறார்கள். அதைப்பற்றி என்னை அழைத்த பிஆர்ஓ ஒருவரிடம் கேட்டேன், விவாதம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தோம், எப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று சொன்னார். ஆனால், அதற்காக ஒரு வருத்தம் கூட அவர் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாய்கள் குறித்து பல நல்ல விஷயங்களை பேசி இருந்தோம். ஆனால், எங்கள் பகுதியில் இருந்த ஒருவரையும் கோபிநாத் அவர்கள் பேசவில்லை. ஆனால், எதிரணியில் இருந்தவர்களை குறிப்பிட்டுக்காட்டி பேசவைத்தார்.

தைரியம் இருக்கா: அதற்கு காரணம் என்ன என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பிறகு தான் தெரிந்தது அவர்கள் அனைவருமே, நீயா நானா நிகழ்ச்சியில் ஏற்கனவே பலமுறை கலந்து கொண்டவர்கள். நல்ல பேச்சாளர்கள் என்று. அதனால் தான் கோபிநாத் அவர்களை குறிப்பிட்டு பேச வைத்திருக்கிறார். ஒருவரை பேசவிடாமல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு, அடுத்தவரை பதில் சொல்ல விடாமல் திணற வைப்ப தான் கோபிநாத்தின் திறமை என்றால், என்னும் இப்போது ஒத்தைக்கு ஒத்த விவாதத்திற்கு நான் தாயாராக இருக்கிறேன் என்று அம்மு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X