»   »  ஆண்ட்ரியா வழி தனி வழி

ஆண்ட்ரியா வழி தனி வழி

Subscribe to Oneindia Tamil

நடிப்பை விட பாடவே விருப்பம் அதிகம். எனவேதான் என்னைத் தேடி வந்த படங்களையெல்லாம் திருப்பி அனுப்பி விட்டேன் என்கிறார் பச்சைக் கிளி ஆண்ட்ரியா.

குறு குறு கண்கள், குளு குளு குரல், ஜிலு ஜிலு முகம், அட அட ஆண்ட்ரியா! தமிழ் சினிமாவுக்கு கெளதம் மேனன் கொடுத்த கொடை ஆண்ட்ரியா.

நல்ல அழகும், வாட்டமும், வடிவுமாக இருக்கும் ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தினால்தான் பிரபலமானார் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் விளம்பர உலகில் ஆண்ட்ரியா அதற்கு முன்பாகவே ரொம்பப் பாப்புலர்.

விளம்பரப் படங்களில் கெளதம் மேனன் கவனம் செலுத்திய காலத்திலிருந்தே அவருக்கு ஆண்ட்ரியாவை நன்கு தெரியும். கெளதமின் விளம்பரப் படங்களுக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளாராம்.

இந்த சமயத்தில்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார் கெளதம்.

முதலில் இஷ்டம் இல்லையாம் ஆண்ட்ரியாவுக்கு. இருந்தாலும், கெளதமின் வற்புறுத்தலால் நடிக்க வந்தாராம்.

என்னாச்சு, புதுப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா என்று ஆண்ட்ரியாவிடம் கேட்டால் அவரது பேச்சே தினுசாக இருக்கிறது.

முதலில் நான் ஒரு பாடகி. பல விளம்பரப் பாடல்களை பாடியுள்ளேன். ஆனால் பச்சைக்கிளி முத்துச்சரத்திற்குப் பிறகு பலரும் என்னை நடிகையாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதற்காக என்னை நான் மறந்து விட முடியாது அல்லவா. நான் பாடகிதான், பாடுவதில்தான் எனக்கு விருப்பமும் இருக்கிறது.

நான் நிறைய படங்களை ஒத்துக்கொண்டு பிசியாக இருக்கிறேன் என என்னை பார்க்கும் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் நான் இதுவரை நான் ஒரு படத்தில் கூட நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.

பட வாய்ப்புக்காக நான் அலையவில்லை. நல்ல கதை, இயக்குநர் அமைந்தால் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்கிறார் படு கூலாக.

புரிஞ்சுதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil