»   »  எங்கெங்கும் கிளாமர் தானா?:அலுக்கும் அங்கீதா

எங்கெங்கும் கிளாமர் தானா?:அலுக்கும் அங்கீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கு பார்த்தாலும் ஹீரோயின்களுக்கு கிளாமர் வேடமே கொடுக்கிறார்கள், அலுத்துப் போய் விட்டது எனக்கு என்கிறார் ரஸ்னா பாப்பா அங்கீதா.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு ஐ லவ் யூ ரஸ்னா என்று டிவி விளம்பரங்கள் மூலம் மகிழ்வித்த குட்டிப் பாப்பா அங்கீதா இப்போது மடமடவென வளர்ந்துவிட்டார். தமிழில் தடதடவென இரண்டு படங்களில் நடித்த அங்கீதா, லேட்டஸ்டாக திருரங்கா என்ற படத்தில் நடித்தார்.

குளுகுளுவென கிளாமர் காட்டி நடித்தும் அங்கீதாவுக்கு எந்த பிராப்தியும் கிடைக்கவில்லை. கைவிடப்பட்டோர் பட்டியலில் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இடம் பெற்ற அங்கீதாவுக்கு தமிழ் சோர்வைக் கொடுத்து விட்டதாம்.

எனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த 3 படங்களிலும் கூட எனது கிளாமரைத்தான் அதிகம் பயன்படுத்தினார்கள். என்னிடம் உள்ள நடிப்பை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று யாருமே முயற்சிக்கவில்லை.

இது எனக்கு அலுத்து விட்டது. இங்கு மட்டுமல்ல தெலுங்கிலும் இப்படித்தான். நடிகைகள் என்றாலே கிளாமர் காட்டத்தான் என்று திட்டவட்டமான ஒரு முடிவில் அனைவரும் உள்ளனர்.

நான் மட்டும் புரட்சி செய்து முடியாது என்ற கூற முடியாது. அப்படிக் கூறினால் என்னை விட ஏடாகூடமாக கிளாமர் காட்டும் நடிகைக்கு வாய்ப்பு போய் விடும்.

வர வர எனக்கு கிளாமர் நடிப்பு போரடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் தெலுங்கில் எனது கிளாமருக்கு ஓரளவு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. பட வாய்ப்புகளும் அங்கு அவ்வப்போது கிடைக்கத்தான் செய்கிறது.

எனவே தமிழைக் குறைத்துக் கொண்டு தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன் என்கிறார் அங்கீதா.

எங்கிருந்தாலும் வாழ்க அங்கீதா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil