»   »  கண்கவர் தமன்னா, கலகல நிலா!

கண்கவர் தமன்னா, கலகல நிலா!

Subscribe to Oneindia Tamil

ஒரு படம் கமர்ஷியலாக வெற்றி பெற என்னவெல்லாம் தேவையோ எல்லாமே நீக்கமற நிறைந்திருப்பதாக புன்னகையுடன் கூறுகிறார் அர்ஜூன்.

மருதமலை என்று பெயரிடப்பட்ட படத்தில் அர்ஜூன் நடித்து வருகிறார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஜில் நிலா, இன்னொருவர் ஜின் தமன்னா.

படம் பூராவும் அடிதடியாக இருக்கிறாதாமே என்று அர்ஜூனிடம் கேட்டால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது பாஸ். ஒரு படம் கமர்ஷியலாக சக்ஸஸ் ஆக என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் மருதமலையில் இருக்கிறது.

அட்டகாசமாக காமெடி செய்துள்ளார் வடிவேல். அவரும், நானும் இணைந்து வரும் காட்சிகளில் எல்லாம் காமெடியில் அணல் பறக்கும். விழுந்து விழுந்து சிரித்து ரசிகர்களுக்கு வயிறு புண்ணாகிப் போவது உறுதி.

ஒரு பக்கம் நான் ஆக்ஷனில் தூள் கிளப்பினால், மறுபக்கம் நிலாவும், தமன்னாவும் ரசிகர்களை குளிர்வித்து அணல் பறப்புவார்கள். இவர்கள் மட்டுமா, முமைத் கானின் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டும் படத்தில் இருக்கிறது.

இதைவிட ஒரு படத்துக்கு வேறு என்ன வேண்டும். ஆனால் இத்தனையையும் தாண்டி படத்தில் நல்ல மெசேஜும் வைத்துள்ளோம். எனவே படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிறார் அர்ஜூன்.

அர்ஜூன் சொல்வது உண்மைதான். நிலாவும், தமன்னாவும் கிளாமரில் போட்டி போட்டு புயலைக் கிளப்பியுள்ளனராம். குறிப்பாக நிலா இதுவரை இல்லாத அளவுக்கு வெளுத்துக் கட்டியுள்ளனராம்.

முமைத்கானும் இதுவரை இல்லாத அளவுக்கு குத்துப் பாட்டில் கிளாமரைக் கூட்டி புரட்சி படைத்துள்ளாராம்.

மசாலாவை அதிகம் கலந்து நெடி ஜாஸ்தியாகி விடாமல் பார்த்துங்குங்க அர்ஜூன்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil