For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யானைப் படத்தில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டாலும் ஓய்வு தரவில்லை..ஹரி சொன்ன திடுக் தகவல்

  |

  சென்னை: சமீபத்தில் வெளியான யானை படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பட்டி தொட்டி எல்லாம், கிராமபுறங்களில் ஹரி படம் என்றால் ஒரு தனி புத்துணர்ச்சி தான்.

  Recommended Video

  Arun Vijay | School Friends தான் நல்லது கெட்டது இரண்டையும் சொல்லுறவங்க | *Interview

  இயக்குனர் ஹரி என்றாலே பரபரப்பு , துடிதுடிப்பு என்று எப்போதும் இருக்கும். அப்படி பட்ட ஹரி தனது படங்களின் வசனங்கள் மற்றும் காட்சிகள் அனல் பறக்கும் .

  யானை படத்தை பற்றி நமது பில்மி பீட்டுக்காக பிரத்யேகமாக பேட்டி ஒன்று கொடுத்து உள்ளார். அதில் குறிப்பாக சண்டை காட்சிகள் எடுக்கும் போது நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்.

  தமன்னா நடிச்சதுலயே இந்த ரோல் தான் அவருக்கு பிடிக்குமாம்.. அந்த கேள்வியை யாருமே கேட்கலையே?தமன்னா நடிச்சதுலயே இந்த ரோல் தான் அவருக்கு பிடிக்குமாம்.. அந்த கேள்வியை யாருமே கேட்கலையே?

  எனக்கு பிடித்த படங்கள்

  எனக்கு பிடித்த படங்கள்

  கேள்வி: உங்களுடைய 20 வருட சினிமா பயணம் குறித்து....

  பதில்: 20 வருடங்களுக்கு முன்பு எனது இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவானது "தமிழ்" படம். அன்றிலிருந்து இன்றுவரை எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும், எனக்கு தொடர்ந்து வேலை கிடைத்து கொண்டே இருக்கிறது. சினிமாவில் இருப்பதே சந்தோஷம். இது ஒரு அற்புதமான வேலை. இந்த கிரியேட்டிவ் வேலையில் இருப்பது மிகவும் சந்தோஷம். அதுவும் இயக்குனராக இருப்பது ரொம்ப சந்தோஷம். நாம் கிடைத்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் .யானை படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு முன்பு, "தமிழ்" படத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பார்த்தேன். அதன் மாதிரி எமோஷன் கலந்து இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது மட்டுமின்றி தற்போது இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களையும் பார்த்தேன். எல்லாம் சேர்ந்த கலவையாக இன்று யானை ரெடி ஆகி உள்ளது.

  ஹரி அப்டேட்டடு

  ஹரி அப்டேட்டடு

  கேள்வி : ஹரி எந்த எந்த விஷங்களில் அப்டேட்டடு இன்றைய சினிமா பொறுத்த வரையில் ?

  பதில் : குறிப்பாக சொல்லப்போனால் பரியேறும் பெருமாள், மண்டேலா போன்ற படங்களையும் பார்த்து பிரமித்து போனேன். இது போன்று நாமும் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். முழு படமாக அப்படியே எடுத்தால் ஹரி காணாமல் போய்விடுவான். அதனால் ஒரு குறிப்பிட்ட சீன் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அது போன்று உணர்வுகளை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். முன்பு இருந்த ஹரி இப்பொழுது கொஞ்சம் அப்பேட் ஆகியிருக்கிறேன். முழுவதுமாக அப்டேட் ஆகவில்லை. அப்படி நான் அப்டேட் ஆனேன் என்றால், எனது ஸ்டைல் மாறிவிடும். நான் ஒன்றும் அந்தளவுக்கு ஆளுமை இயக்குநர் கிடையாது என்று தன்னடக்கத்துடன் பதில் அளித்தார் .

  தென் மாவட்டங்கள்....

  தென் மாவட்டங்கள்....

  கேள்வி: உங்களுடைய படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்த காரணம்?

  பதில்: எனது முதல் படம் மதுரையிலும், இரண்டாவது படம் திருநெல்வேலியிலும், மூன்றாவது படம் நாகர்கோவிலும், அதை தொடர்ந்து கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம், திண்டுக்கல், தூத்துக்குடி, பொள்ளாச்சி, சென்னை போன்ற இடங்களில் நடத்தியுள்ளேன். பெரும்பாலும் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். வடஆற்காடு, தென்ஆற்காடு பகுதிகள் மட்டும் தான் பாக்கி. அவர்களின் கலாச்சாரத்தை இயக்குனர் தங்கர்பச்சான் ஏற்கனவே அழகாக காட்டி விட்டார். அவரை விட அழகாக காட்ட முடியுமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் விரைவில் அவர்களது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எனது படம் இருக்கும் .

  எதற்காக உழைக்கணும்?

  எதற்காக உழைக்கணும்?

  கேள்வி: நீங்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்களில், பிடித்து விட்டால் அங்கு உள்ள இடங்களை வாங்கி விடுவதாக சிலர் கூறுகிறார்கள், அது எந்தளவுக்கு உண்மை?

  பதில்: அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. காலில் வீலை கட்டிக்கொண்டு ஓடும் நமக்கு இடம் வாங்கி விற்பது சாத்தியமில்லாது. இவ்வளவு தூரம் சிலர் கேட்கிறார்கள் என்பதால் ஒரு தகவலை மட்டும் நான் பகிர்கிறேன். ஒரு படத்திற்காக அம்பாசமுத்திரத்தில் தோட்டம் அமைப்பதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்தேன். ஆனால் அந்த இடத்தின் வாடகை, விற்கும் விலையை விட அதிகமாக இருந்தது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு. எனவே நான் தயாரிப்பாளரிடம் தெரிவிக்காமல் என் சொந்த செலவில் அந்த இடத்தை வாங்கி படப்பிடிப்பை நடத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தியதற்கான எந்த வாடகையையும் நான் பெறவில்லை. இதை யாரோ வெளியே சொல்லியிருக்கிறார்கள். நாம் உழைப்பதற்கு எதற்கு என்றால், நம்முடைய வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கு தான் . ஆதலால் தான் இப்படி ஒரு சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

  அருண் விஜய்க்கு காயம்

  கேள்வி: யானை படம் குறித்தும், அப்படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் பற்றி கூறுங்கள்...

  பதில்: யானை படத்தில், "நீ ஜெயிச்சா உன் அண்ணா தோற்பான். உன் அண்ணன் தோற்று நீ ஜெயிக்கணுமா" என்ற எமோஷன் வசனம் எனக்கு பிடிக்கும். அது மட்டும் அல்லாமல் யானை படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய், படகில் இருந்து குதிப்பது போன்ற காட்சியில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. மூன்று நாள் ஓய்வு கொடுக்க வேண்டிய இடத்தில் அவருக்கு 1.30 மணி நேரம் மட்டுமே ஓய்வு கொடுத்தேன் . மேலும் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் அனலரசு சிறப்பாக பணிபுரிந்துள்ளார் . அருண் விஜய் நடித்த படங்களில தடையறத் தாக்க, இயற்கை போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பல தகவல்களை தெரிவித்தார் ஹரி. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/5MILtZ_iybY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.இயக்குநர் ஹரி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  Arun Vijay Not Given Rest Though he was injured during yaanai shooting says director hari
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X