»   »  "தெறி படத்துல நடிக்கப் போறேன்..." - ச்சோ ஸ்வீட் அருவி பாப்பா! #ExclusiveInterview

"தெறி படத்துல நடிக்கப் போறேன்..." - ச்சோ ஸ்வீட் அருவி பாப்பா! #ExclusiveInterview

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெறி படத்தில் நடிக்க போறேன் - அருவி பாப்பா- வீடியோ

சென்னை : திரையரங்குகளில் ரசிகர்களின் அமோக வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கும் 'அருவி' படத்தில் நம் மனதிற்கு நெருக்கமான காட்சிகள் அத்தனை இருக்கின்றன.

அவற்றில், ஒரு நீளமான கவிதையைப் போல வந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த காட்சிகள் படத்தின் முதல் சில நிமிடங்கள். அதற்குக் காரணம் அந்த காட்சிகளில் குழந்தை அருவியாக அசரடித்த தக்‌ஷனா.

அருவி கேரக்டரில் குட்டிக் குழந்தையாக தனது மழலைத்தனத்தால் ரசிக்கவைத்தவர் தக்‌ஷனா. இரண்டரை வயது குழந்தையாக இருக்கும்போது அந்தப் படத்தில் நடித்தவருக்கு இப்போது ஐந்தரை வயது. அவரிடம் பேசினோம்...

அருவி குழந்தை

அருவி குழந்தை

தக்‌ஷனா, என்ன படிக்கிறீங்க எனக் கேட்டோம்... "ஸ்கூல் ஜவஹர் வித்யாலயா. கிளாஸ் யூ.கே.ஜி" என மழலை மொழி மாறாத குட்டி அருவியைப் போல அத்தனை அழகாகச் சொன்னதோடு "ஹவ் ஆர் யூ" என்றாள். ஹவ் ஸ்வீட் ஷீ இஸ்!

தெறி படத்தில் நடிக்கப் போறேன்

தெறி படத்தில் நடிக்கப் போறேன்

"என் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இன்னும் 'அருவி' படம் பார்க்கலை. நீங்க பார்த்தீங்களா? நான் 'தெறி' படத்துல நடிக்கப் போறேன்" என குழந்தைக்கே உரிய பேதைத்தனத்தோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள் க்யூட் அண்ட் ஸ்வீட் தக்‌ஷனா.

தக்‌ஷனா அம்மா

தக்‌ஷனா அம்மா

தக்‌ஷனாவின் அம்மா ஹர்ஷினியிடம் பேசினோம்... "நான் பேங்க்ல வேலை பார்க்கிறேன். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நான் வொர்க் பண்ற ப்ராஞ்ச்ல தான் அக்கவுன்ட் வெச்சுருக்கார். அதனால், கொஞ்சம் பழக்கம். அப்படித்தான் அருண் பிரபுவும் அறிமுகமானார்.

அதிதி மாதிரியே குழந்தை

அதிதி மாதிரியே குழந்தை

'அருவி' படத்தில் அதிதி பாலன் மாதிரியே ஒரு குழந்தையை நடிக்க வைக்கிறதுக்காக தேடிக்கிட்டு இருந்தாங்க. டைரக்டர் அருண்பிரபு அதே மாதிரி பாப்பாதான் வேணும்னு ஸ்ட்ரிக்டா இருந்திருக்கார். அப்போதான் எங்க குழந்தையோட போட்டோ பார்த்ததும் இவளையே நடிக்க வெச்சுடலாமானு கேட்டாங்க.

நடிக்க ஓகே

நடிக்க ஓகே

நாங்களும் தக்‌ஷனாவை நடிக்க வைக்க ஓகே சொல்லிட்டோம். ஆனா, பாப்பாவுக்கு அப்போ சரியா பேச கூட வராது. ப்ளே ஸ்கூல்ல கூட சேர்க்கலை. எங்களை விட்டு வேற யார்கிட்டயும் அவ்ளோ சீக்கிரம் போகமாட்டா. அதனால ரொம்ப பயமாதான் இருந்துச்சு. ஷூட்டிங்ல ரொம்ப சொதப்பிருவாளோன்னு பயந்துக்கிட்டே இருந்தோம்.

கேண்டிட் ஷாட்ஸ்

கேண்டிட் ஷாட்ஸ்

தக்‌ஷனா இந்தப் படத்தில் நடிக்கவே இல்ல... எல்லாமே கேண்டிட் மாதிரி அவளை அப்படியே ஓட விட்டு, சிரிக்க விட்டு, விளையாட விட்டு ரொம்பவே காத்திருந்து எடுத்த காட்சிகள் தான். அதுக்காக படக்குழுவினர் ரொம்பவே மெனக்கெட்டாங்க.

அருண், ஷெல்லி

அருண், ஷெல்லி

மூணு நாள் திருவாலங்காட்டிலும், ரெண்டு நாள் கேரளா பார்டர்ல இருக்குற அருவி பகுதியிலயும் ஷூட்டிங் நடந்துச்சு. அருண், ஷெல்லி ரெண்டு பேரும் அவ்ளோ ரசிச்சு ரசிச்சு தக்‌ஷனா வர்ற சீன்ஸ்லாம் எடுத்தாங்க. அவளோட க்யூட்னெஸ்ஸை ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.

அழகா காட்டினாங்க

அழகா காட்டினாங்க

அவளுக்கு மாதுளம்பழம் ரொம்ப பிடிக்கும். அதை வெச்சும் சில சீன்ஸ் கூட எடுத்தாங்க. ஆனா, எடிட்டிங்ல போயிடுச்சு. படத்தில் தக்‌ஷனா அருவியாவே வாழ்ந்திருக்கா. கேண்டிட்டா குழந்தையை இவ்வளவு அழகா காட்டினதுக்கு ஷெல்லிக்கும், அருண் சாருக்கும் ரொம்ப நன்றி."

English summary
There are so many heart touching scenes in the film 'Aruvi'. In the first few minutes of the film, the most impressive footage is baby aruvi scenes. Dhakshana, the child who was acted in that scenes. When shooting, she was two and a half years old, she is now five and half years old. A short interview with Baby Dhakshana here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X