For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அருவி பாப்பாவோட ஆசை என்ன தெரியுமா..? பேபி அருவியின் ஃபேவரிட் இதுதான்! #Exclusive

  By Vignesh Selvaraj
  |

  சென்னை : 'அருவி' படத்தில் அருவியின் சிறு வயது கேரக்டரில் நடித்த குழந்தை சென்னையைச் சேர்ந்த தக்‌ஷனா கோபிகிருஷ்ணாஜி. 2014-ல் 'அருவி' பட ஷூட்டிங் நடக்கும்போது இரண்டரை வயதுக் குழந்தையாக இருந்தவர் இப்போது யூ.கே.ஜி படிக்கிறார்.

  சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வந்தாலும், ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து விட்டார் இந்த குட்டி பாப்பா. அருவி படம் பார்த்த பலரும், இந்தக் குழந்தையின் கேரக்டரை பாராட்டியிருந்தனர்.

  இயல்பான மழலையாக கேண்டிட் ஷாட்ஸ் மூலமே கவனம் ஈர்த்த தக்‌ஷனாவுக்கு பிடித்த விஷயங்கள், எதிர்கால ஆசை எல்லாவற்றையும் அவரது அம்மா ஹர்ஷினியிடம் கேட்டோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக இதோ எக்ஸ்குளூசிவ்.

  பேபி தக்‌ஷனா

  பேபி தக்‌ஷனா

  "இப்போ தக்‌ஷனா யூ.கே.ஜி போய்ட்டா... அருவி ஷூட் நடக்கும்போது ரெண்டரை வயசுங்கிறதால அதைப் பத்தி இப்போ அவளுக்கு ஒண்ணும் ஞாபகம் இல்ல. இப்போ படம் பார்க்கும்போது அவளை ஸ்கிரீனில் பார்த்ததும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டா.

  அப்பா செல்லம்

  அப்பா செல்லம்

  தக்‌ஷு குட்டி அப்பா செல்லம். அதனால், அவங்க அப்பா கூட தான் நிறைய போட்டோக்கள்ல இருப்பா. அவருக்கு இவங்க கங்காரு குட்டி. அவர் போற இடங்களுக்கெல்லாம் இவளையும் கூட்டிட்டுப் போகணும்.. இல்லேன்னா ரகளைதான்.

  மெர்சல் ஃபேவரிட்

  மெர்சல் ஃபேவரிட்

  அவளுக்கு சினிமாவுல பிடிச்ச ஹீரோஸ் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி இவங்க மூணு பேரும் தான். 'பாகுபலி', 'மெர்சல்', அப்புறம் 'சேதுபதி' இந்த மூணு படமும் அவளோட ஃபேவரிட்.

  பெயின்டிங் பிடிக்கும்

  பெயின்டிங் பிடிக்கும்

  பாட்டு பாடுறதும், பெயின்டிங்கும் தக்‌ஷனாவோட ஹாபி. ரெண்டுலயும் ரொம்ப இன்ட்ரெஸ்டடா இருக்கா. வீட்டிலயும், ஸ்கூல்லயும் சமத்து பாப்பா. ஏரியாவுல பலருக்கு லட்டு குட்டி இவதான்.

  5 ரூபா டாக்டர்

  5 ரூபா டாக்டர்

  மெர்சல் படம் பார்த்ததுக்கு அப்புறம், விஜய் மாதிரி எதிர்காலத்துல அவளும் அஞ்சு ரூபா டாக்டர் ஆகணும்னு சொல்லிடு இருக்கா. இவங்கதான் மெர்சல்ல வர்ற மாறனாம். தக்‌ஷனாவோட தங்கச்சி பாப்பா நயனிகாதான் வெற்றியாம்.

  சிவகார்த்திகேயனை பார்க்கணும்

  சிவகார்த்திகேயனை பார்க்கணும்

  ஏற்கெனவே, அவளுக்குப் பிடிச்ச ஹீரோக்கள்ல விஜய் சேதுபதி சாரையும், கார்த்தி சாரையும் தக்‌ஷனா மீட் பண்ணிட்டா... சீக்கிரமே சிவகர்த்திகேயனையும் பார்க்கணும்ங்கிறதுதான் அவளுக்கு இப்போதைக்கு ஆசை.

  போன் நம்பர் வாங்கிய இயக்குநர்

  போன் நம்பர் வாங்கிய இயக்குநர்

  அருவி படம் பார்த்துட்டு செலிபிரிட்டி யாரும் கூப்பிடலை. எங்களை ரீச் பண்றதுல சிரமம் இருக்கலாம்னு நினைக்கிறேன். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தோட டைரக்டர் ராம் பிரகாஷ் பாப்பாகிட்ட பேசணும்னு எங்களோட கான்டாக்ட் நம்பர் வாங்கிருக்கிறதா 'அருவி' படத்தில் அம்மாவா நடிச்ச ஹேமா சொன்னாங்க.

  வெளிநாடுகளிலும் அருவி

  வெளிநாடுகளிலும் அருவி

  என்னோட ஆஃபிஸ்ல நிறைய பேர் இவ நடிச்சதுக்காகவே, முதல் நாளே சினிமாவுக்கு போய்ட்டு, செமயா இருக்கானு சொன்னாங்க. ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வெளிநாடுகள்ல இருந்து படம் பார்த்துட்டு Aruvi in chicago screen, Aruvi in singapore screen னு பாப்பா வந்த சீனை போட்டோ எடுத்து அனுப்பியிருந்தாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

  சினிமாவில் நடிப்பார்

  சினிமாவில் நடிப்பார்

  தக்‌ஷனாவை ஒரு ஸ்டேஜ் வரைக்கும் சினிமாவில் நடிக்க சான்ஸ் வந்தா நிச்சயமா நடிக்க வைப்போம். இது அவளுக்கு கான்ஃபிடன்ட் கொடுக்கிற மாதிரியும் இருக்கும்னு நினைக்கிறோம். அதுக்கு அப்புறம் அது அவளோட வாழ்க்கை. என்ன ஆகணும்னு அவளே முடிவு பண்ணிக்குவா."

  English summary
  Dakshana Gopikrishnaji from Chennai, who played a child aruvi role in the film 'Aruvi'. Dhakshana's favorite things and future aim were asked. Her favourite actors are Sivakarthikeyan, vijay sethupathi and karthi. More interesting things are here.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more