twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ரோல்ல்லிங் சா...ர்" - ஒரே வார்த்தை.. ஓஹோனு பாராட்டு.. அபிநய குமார் ஷேரிங்! #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'அருவி' படத்தில் ''ரோல்ல்லிங் சா....ர்ர்" எனும் இந்த ஒரு வசனத்தின் மூலம் திரையரங்கில் ரசிகர்களை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தவர் கேமரா மேனாக நடித்த அபிநய குமார்.

    முதல் இரண்டு முறைகள் அவர் டயலாக் சொல்லும் மாடுலேஷனை வைத்தே, அடுத்தமுறை இயக்குநராக நடித்திருக்கும் கவிதா பாரதி 'ரோல் கேமரா' சொன்னதுமே மொத்தத் திரையரங்கும் "ரோல்லிங் சா....ர்" சொல்கிறது.

    தனது வித்தியாசமான மாடுலேஷனால் ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அபிநய குமாரிடம் பேசினோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக அவர் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ...

    'ரோல்லிங் சா...ர்' - யாரு சார் நீங்க?

    'ரோல்லிங் சா...ர்' - யாரு சார் நீங்க?

    "கோயம்புத்தூரில் சூலூருக்குப் பக்கத்துல காமாம்பாடிங்கிற ஊர்தான் என் சொந்த ஊர். கோயம்புத்தூரில் 'ஜோக்கர்ஸ் டான்ஸ் கம்பெனி' எனும் பெயரில் டான்ஸ் ஸ்கூல் நடத்திக்கிட்டு இருக்கேன். எங்க ஸ்கூல்ல இப்போ 20 குழந்தைங்க கத்துக்கிட்டு இருக்காங்க. 'ஓடி விளையாடு பாப்பா' உள்ளிட்ட குழந்தைகளுக்கான தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகள்ல எங்க ஸ்கூல் குழந்தைகளும் கலந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்."

    'அருவி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி?

    'அருவி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி?

    "அஃப்சல்னு ஒரு நண்பர் தாராபுரத்தில் என் டான்ஸ் ஸ்கூலில் டான்ஸ் கத்துக்க வந்தார். அவர் சினிமாவில் ஹீரோவாக சான்ஸ் தேடிக்கிட்டு இருந்தார். அவர் சொல்லித்தான் 'அருவி' படத்துல நடிக்கிறதுக்கு ஆடிஷன் நடக்குறது தெரியும். 2014-ல சென்னை வந்து அருவி ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு படக்குழுவில் இருந்து கூப்பிட்டு நீங்க படத்துல நடிக்க ஓகேன்னு சொன்னாங்க. 2014 இறுதியில் ஷூட்டிங் நடந்தது."

    இந்த மாடுலேஷன் எப்படி உருவானது?

    இந்த மாடுலேஷன் எப்படி உருவானது?

    " 'ரோல்லிங் சா...ர்' டயலாக்கை டைரக்டர் சொல்லிக்கொடுத்த மாதிரிதான் பேசினேன். அந்த டயலாக் சொல்லிக் கொடுக்கும்போதே, நிச்சயம் இந்த டயலாக் நல்ல பாராட்டைப் பெறும்னு சொன்னார். ரெண்டு முறை நீங்க சொன்னா மூணாவது முறை ஆடியன்ஸே இந்த டயலாக்கை சொல்வாங்கனு சொன்னார். அது அப்படியே நிஜமாகிடுச்சு. ஒரு நல்ல படத்தில் நான் பேசின டயலாக் நின்றது எனக்கு ரொம்பவே பெருமை."

    அதிதி பாலன் - ஸ்பாட்டில் எப்படி?

    "அருவி ஷூட்டிங்கில் நான் 20 நாள் கலந்துக்கிட்டேன். படக்குழுவினர் எல்லோரும் ஒரு ஃபேமிலி மாதிரி ஜாலியா இருந்தோம். டி.வி ப்ரோகிராம் ஷூட்டிங் சீன்ல வர்றவங்க நாங்க ஒரு கேங்கா இருப்போம். ஹீரோயின் அதிதி கூட நான் பேசினதில்ல. ஆனா, அவங்க நடிக்கிறதை பார்த்து மிரண்டிருக்கேன். 'அப்பா... என்னா நடிப்புடா சாமி'னு தோணும். இந்தப் படத்தில் அவங்களோட நடிப்பு பிரமாதமா பேசப்படும்னு முன்னாடியே எதிர்பார்த்தோம்."

    உங்களுக்கு பாராட்டுகள்..?

    உங்களுக்கு பாராட்டுகள்..?

    "பிரபலங்கள் யாரும் இதுவரைக்கும் கூப்பிட்டு பேசலை. என் டைரக்டர் அருண் பிரபு சார் அந்த டயலாக்குக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்னு சொன்னார். அதை நான் தியேட்டர்ல படம் பார்க்கும்போது நேரடியாகவே உணர்ந்தேன். என்னோட அம்மாவும் என்னோட டயலாக் வரும்போது ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நல்லா பண்ணியிருக்கடானு சொன்னாங்க. இது ரெண்டும் போதும் எனக்கு... இதுக்கு மேல வேற என்ன பாராட்டு வேணும்?"

    அடுத்தகட்ட முயற்சிகள்?

    அடுத்தகட்ட முயற்சிகள்?

    " 'அருவி' படத்தில் நடிச்சு ரெண்டு வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் வேற எந்தப் படத்திலும் நான் நடிக்கல. என் வாழ்நாள் முழுக்க 'அருவி' படத்தின் அந்த வசனம் நிற்கும். இந்தப் படத்துக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன். கேரக்டர் ரோல் பண்றதுக்கு ரெடியா இருக்கேன். முதலில் நடிக்க வரும்போது பயந்த எனக்கு 'அருவி' படம் நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு. சிறப்பா பண்ணமுடியும்னு நம்புறேன்."

    சினிமாவில் நடிக்க வந்துட்டா நீங்க நடத்துற டான்ஸ் ஸ்கூல்?

    சினிமாவில் நடிக்க வந்துட்டா நீங்க நடத்துற டான்ஸ் ஸ்கூல்?

    "சினிமாவில் நடிக்க வந்தாலும் டான்ஸ் கத்துத் தர்றதையும், கத்துக்கிறதையும் எப்போதுமே விட மாட்டேன். என்னோட ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க... அசிஸ்டென்ட்ஸ் இருக்காங்க. டான்ஸ் ஸ்கூலையும் அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகணும். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைச்சு நடிச்சா நான் நடத்துற டான்ஸ் ஸ்கூலுக்கும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன். டான்ஸ் சின்ன வயசுலேர்ந்து என்னோட கனவு. அதை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது."

    லவ்... கல்யாணம்..?

    லவ்... கல்யாணம்..?

    "எனக்கு இப்போ முப்பது வயசாகுது. மிடில் கிளாஸ் ஃபேமிலி தான். நான் இப்பதான் முதல் படியிலேயே கால் எடுத்து வச்சுருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூலுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கு. கல்யாணத்தை பத்தி யோசிக்க இப்போ நேரம் இல்லை. இப்போதைக்கு ஓடிக்கிட்டே இருக்கணும். ரோல்ல்லிங் சார்ர்..!"

    வாழ்த்துகள் பாஸ்..!

    English summary
    Abinaya Kumar, who played the camera man role in the movie 'Aruvi'. He pronounce a dialogue like 'Rollling Sirrr...' in the movie 'Aruvi', was praised by more fans. An exclusive interview with 'Aruvi' Abinaya kumar is here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X