»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இவ்வளவு அசட்டுத் துணிச்சல் கூடாது. நியூ படத்தின் அளவு மீறிய ஆபாசத்துக்கு இன்னும் கண்டனக்குரல்கள் அடங்காத நிலையில், தனது அடுத்த படத்திற்கு பி.எப். என்று ஆங்கிலத்தில் ஏடாகூடாமான பெயர் வைத்தார்.

பெஸ்ட் பிரண்ட் என்று தலைப்புக்கு அவர் விளக்கம் சொன்னாலும், படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பா என்று சலசலப்பு கிளம்பி, இன்னும்அடங்கவில்லை.

இந் நிலையில் தனது அடுத்த படத்திற்கு ஏ/சி என்று கூலாக பெயர் சூட்டி கோலிவுட்டில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் சூர்யா.

வாலி, குஷி, நியூ என்று ஹாட்ரிக் அடித்த சந்தோஷத்தில் இருக்கும் சூர்யாவின் ஏ/சி படத்தில் ஹீரோவாக நடிப்பது சிம்பு. எஸ்.ஜே. சூர்யாகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு நிறுத்திக் கொள்கிறார். இதில் நடிக்கப் போவதில்லை.

சிம்புவுக்கு இதில் ஜோடியாக வருவது அழகிய ஆஷின்.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி இந்தப் படத்தை தயாரிக்கிறார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம்தான் எஸ்.ஜே. சூர்யாவை இயக்குனராக வாலிபடத்தில் அறிமுகப்படுத்தியது. (இந்த நிறுவனமே நடிகர் அஜீத்தின் பினாமி கம்பெனி என்போரும் உண்டு)

படத்துக்கு ஒளிப்பதிவு ஜீவா. இசை ஏ.ஆர். ரஹ்மான். நியூ, பி.எப். படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக எஸ்.ஜே. சூர்யாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கை கோர்க்கிறார்.

மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்டில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக பி.எப். படத்தை சூர்யாவும்,தொட்டி ஜெயா படத்தை சிம்புவும் முடித்துவிடும் ஐடியாவில் இருக்கிறார்கள்.

மன்மதன் வெற்றிக்குப் பிறகு பயங்க குஷியில் இருக்கும் சிம்பு, தொட்டி ஜெயா, ஏ/சி இரண்டும் அதேபோல் வெற்றி பெறும் என்கிறார்.

நான் விரல் வித்தை காட்டுவதாக நிறைய பேர் குற்றம் சொல்லுகிறார்கள். ஆனால் கோவில் படத்தில் அது எதுவும் இல்லாமல்தான்நடித்தேன். ஆனால் படம் ஓடவில்லை. எல்லோரும் ஒருவரது பிளஸ் பாயிண்ட் எதுவோ, அதைத்தான் மைனஸ் பாயிண்டாகசொல்கிறார்கள்.

இயக்குனர் தரணியின் ஸ்பெஷாலிட்டியே ஆக்ஷன் படங்கள்தான். ஆனால் அது தவிர்த்து வேறு படங்கள் பண்ணுவதில்லை என்று அவர்மீது குற்றம் சொல்கிறார்கள்.

நான் தோல்விப் படங்கள் கொடுத்தபோது என்னைப் பற்றி நிறைய பேர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால் மன்மதன் ஹிட்டான பின்புஅவர்கள் மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். இத்தகைய மனிதர்களை நான் மதிப்பதே இல்லை.

மக்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். தியேட்டர்களுக்கு மாறுவேடத்தில் சென்றுமக்களோடு மக்களாய் உட்கார்ந்து என் படங்களைப் பார்க்கிறேன்.

அவர்களுக்கு எது பிடிக்கிறது என்பதைப் பார்த்து வருகிறேன். இப்போது எனது கவனமெல்லாம் சினிமாதான். தொட்டி ஜெயா, ஏ/சிபடத்திற்குப் பிறகு பி.எல். தேனப்பன் படத்தில் மன்மதன் யூனிட்டோடு மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறேன்.

அந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதத் தொடங்கிவிட்டேன் என்றார்.

சிம்புவுக்கு பை சொல்லிவிட்டு, எஸ்.ஜே. சூர்யாவிடம் ஆஜரானோம். புதிய படத்திற்காவது தமிழில் பெயர் வைத்திருக்காலாமே என்றுசூர்யாவிடம் கேட்டால்,

படத்திற்கு ஏ/சி என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. ஏ என்ற ஆங்கில எழுத்தில்தான் படத்தின் சிம்புவின் கேரக்டரின் பெயர்ஆரம்பிக்கும். அதேபோல் சி என்ற ஆங்கில எழுத்தில்தான் ஆஷினின் பெயர் ஆரம்பிக்கும்.

ஹீரோ, ஹீரோயின் பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துத் தான் ஏ/சி என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார்.

சூர்யாவின் இந்த ஜில்லான ஏ/சி விளக்கத்திற்கு ராமதாஸ் கூல் ஆவாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil