மலையாள திரைத் துறை... கதையுடன்.. கலையையும் சேர்த்து வளர்க்கிறது.. அஸ்வின் குமார்

சென்னை : மலையாள திரைத்துறை சிறந்த கலையை பெருமளவில் வரவேற்கிறது என்று அஸ்வின் குமார் கூறினார்.

நடிகர் அஸ்வின் குமார் துருவங்கள் பதினாறு மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சென்றடைந்தவர். இவர் தற்போது அதிகபடியான மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Ashwin kumar interview

இவரின் முதல் படம் துருவங்கள் பதினாறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் இவரின் முதல் மலையாளப் படமான ஜாக்கோப்பின்டே சொர்கராஜியம் படம் முதலில் வெளியாகி மலையாள திரைத்துறையில் பெரிய பெயரை பெற்று தந்தது அதை தாண்டி துருவங்கள் பதினாறும் மலையாள படம் நல்ல வெற்றியை பதிவு செய்ய தற்போது தொடர் மலையாள படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் அஸ்வின் குமார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது மலையாள திரைத்துறையில் நல்ல கதையையும் கலையையும் வளர்க்க பாடுபடுகிறார்கள். அங்கு அதனால் தான் நல்ல கதைகளையும் நல்ல சினிமாக்களையும் அதிகம் காண முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே, மலையாளம் கற்று வந்ததாகவும் தற்போது மலையாள சினிமாவில் நல்ல நடிகராக வளர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் .

Ashwin kumar interview

ஜாக்கோப்பின்டே சொர்கராஜியம் படத்தில் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் கௌதம் மேனன் தான் நடிக்க வேண்டியது இருந்தது அந்த சமயத்தில் ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக கௌதம் மேனனால் துபாய்க்கு நடிக்க வர முடியவில்லை அதனால் துபாயில் இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று பகிர்ந்து இருக்கிறார் .

இவரின் குரல் கம்பீரமாக கனீர் என்று இருக்கும் இவர் துருவங்கள் பதினாறு படத்தில் நடிக்கும் போதும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கும் போதும் ரசிகர்கள் இவரின் குரலை வெகுவாக ரசித்திருந்தனர். மேலும் இந்த குரல் தான் என் மிக பெரிய பலம் என்று கூறியுள்ளார் அஸ்வின் குமார். இந்த குரலை வைத்து மலையாளத்தில் பல வில்லன்களுக்கு டப் செய்து வருவதாக கூறினார். மேலும் தமிழ் பையன் என்பதால் பல நடிகர்களுக்கு தமிழுக்கு டப் செய்யவும் என் குரல் நன்றாக பயன் படுகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி என அஸ்வின் குமார் நடித்து வருகிறார் .எப்போதும் தன்னை ஒரு மொழி நடிகராக பார்த்தில்லை நான் ஒட்டுமொத்த இந்திய நடிகராக தான் ஆசை பட்டிருக்கிறேன் அதனால் எந்த மொழியில் நல்ல கதை நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறதோ அதை ஏற்று நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X