»   »  ஆமிர் ஆஹா .. ஆசின் குஷி

ஆமிர் ஆஹா .. ஆசின் குஷி

Subscribe to Oneindia Tamil

ஆமிர்கானைப் பற்றி ஆஹா ஓஹோவென்று புகழந்து தள்ளுகிறார் ஆசின்.

பாலிவுட்டுக்குப் போகும் கோலிவுட் ஹீரோயின்களுக்கு எப்போதுமே ராஜ வரவேற்பு காத்திருக்கும். அந்தக் காலத்து வைஜெயந்தி மாலா முதல் கடந்த தலைமுறை ஸ்ரீதேவி வரை அத்தனை பேருக்கும் செமத்தியான வரவேற்பு கிடைத்ததை திரை ரசிகர்கள் அறிவார்கள்.

ஆனால் ஸ்ரீதேவிக்குப் பின்னர் தென்னிந்திய நடிகைகள் யாரும் பெரிய அளவில் புகழ் பெறவில்லை, பிரபலமாகவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை. அதை உடைக்க ஆர்ப்பரித்துக் கிளம்பியுள்ளார் ஆசின்.

தமிழ் கஜினியின் இந்தி ரீமேக்கில் ஆசின்தான் நாயகி. படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திக்குப் போன நேரமோ என்னவோ போக்கிரியின் இந்திப் பதிப்பிலும் ஆசினே நடிக்கவுள்ளார்.

இந்த கஜினியின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. ஆமிர், ஆசின் காதல் காட்சிகளை இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார்.

கிடைத்த கேப்பில் ஆசினிடம் பட அனுபவம் குறித்து நோண்டியபோது, ஆமிர்கானை புகழ்ந்து தள்ளி விட்டார். ஆமிர்கான் ஜென்டில்மேன். நல்ல இதயத்துக்காரர். தொழிலில் திறமையானவர். என்னை மாதிரியான நடிகைகளுக்கு அவர் போன்ற உயர்ந்த நடிகர்களுடன் நடிப்பது மிகப் பெரிய மரியாதை, கெளரவம்.

எனக்கு இந்தி தெரியும் என்பதால் வசனங்களைப் பேசுவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்தே நான் இந்தி படித்து வந்துள்ளேன். எனவே இந்தியில் வசனம் பேசுவது சிரமமாக இல்லை. எனது படங்களுக்கு நான் சொந்தக்குரலில்தான் பேச வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். அதனால் இந்தி கஜினியிலும் நான் எனது சொந்தக் குரலில்தான் பேசுகிறேன்.

இப்போது இந்தியில் இன்னொரு படம் பேசியுள்ளேன். அதுகுறித்த விரிவான தகவல்களை இப்போது கூற முடியாது. தமிழில் சூர்யாவுடன் வேல் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படத்துக்கான போட்டோ செஷன் முடிந்து விட்டது.

தமிழிலும், இந்தியிலும் சம அளவில் கால்ஷீட் கொடுத்து நடிப்பேன் என்றார் ஆசின்.

ஆசின், ஆமிரை புகழ்கிறார் என்றால், ஆமிரோ, ஆசினை புகழ்ந்து தள்ளி வருகிறாராம். ஆசினின் இந்தி உச்சரிப்பு, டைமிங், வசனத்தை சரியாக பேசுவது ஆகியவற்றைப் பார்த்து ஆமிர் மெய் மறந்து விட்டாராம்.

இந்தப் படத்துக்கான வசனங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஒலிப்பதிவும் செய்யப்படுவதால், காட்சி முடிந்ததுமே ஆசினை பாராட்டி விடுகிறாராம் ஆமிர்.

ரொம்ப நாளைக்குப் பிறகு சொந்தக் குரலில் பேசி நடிக்கும் முதல் தென்னிந்திய நடிகை ஆசின்தான் என்று திரையுலகில் கூறுகிறார்கள்.

வெரி இன்டரஸ்டிங்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil