»   »  ஆசினின் அடுத்த டார்கெட் ரஜினி!

ஆசினின் அடுத்த டார்கெட் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

கலைஞானி கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் ஜோடி சேர்ந்து விட்ட சந்தோஷத்தில் இருக்கும் ஆசின், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைய ஆர்வமாக உள்ளார்.

தென்னிந்திய நடிகைகள் அத்தனை பேருக்கும் ரஜினி, கமலுடன் ஜோடி சேருவது என்பது ஒரு அஜென்டாவாகவே இருக்கும். குறிப்பாக ரஜினியுடன் ஜோடி சேர ரொம்பவே பிரயத்தனப்படுவார்கள். சிலருக்கு அது கைகூடும். சிலருக்கு கடைசி வரை அது கனவாகவே போய் விடும்.

அப்படிப்பட்ட கனவில் இருக்கும் நடிகைகளில் ஆசினும் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார். கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ஆசின்.

கமலுடன் இணைந்து நடித்ததை ரொம்பப் பெருமையாக நினைக்கும் ஆசின், கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்தபோது பயந்து கொண்டே நடித்ததாக கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் கமல் போட்ட மேக்கப்பைப் பார்த்து அசந்தும் போய் விட்டாராம்.

இந்த நிலையில் ரஜினியுடன் ஜோடி சேர தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார் ஆசின். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கமல் சார் போன்ற மாபெரும் கலைஞருடன் இணைந்து நடிப்பது என்பது எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அது இப்போது நனவாகி விட்டது.

எனது அடுத்த பெரிய கனவு ரஜினி சாருடன் இணைவது. அவரது அடுத்த படத்திலேயே இந்த கனவு, நனவாகும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார் ஆசின்.

தசாவதாரம் படத்தில் அக்கா, தங்கை வேடத்தில் நடித்துள்ளாராம் ஆசின். அவர் இரட்டை வேடம் போடுவது இதுவே முதல் முறையாகும். அதிலும் கமல்ஹாசனின் சாதனைப் படமான இதில் இரட்டை வேடங்களில் நடிப்பதை பெருமையாக, கெளரவமாக நினைக்கிறார் ஆசின்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடி போட்டுள்ள ஆசினுக்கு, இரண்டு பாடல்களும் உள்ளதாம். படத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ஆசினுக்கு மட்டும் இரண்டு பாடல்கள் என்பதும் ஆசினுக்கு சந்தோஷம் தந்துள்ள இன்னொரு சந்தோஷ விஷயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil