»   »  மீடியா டென்ஷனில் ஆசின்!

மீடியா டென்ஷனில் ஆசின்!

Subscribe to Oneindia Tamil


என்னைப் பற்றி மீடியாக்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது வேதனை தருவதாக உள்ளது என்று ஆசின் பொங்கிப் பொருமியுள்ளார்.

Click here for more images

சமீபத்தில்தான், சூர்யா, ஆசின் நடிக்கும் வேல் படத்தைத் தயாரித்து வரும் ராஜகாளியம்மன் என்டர்பிரைஸ் நிறுவனத்தின் அதிபரான மோகன் நடராஜன், ஆசினை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

தொழில் பக்தி மிக்கவர் ஆசின், ஷூட்டிங்குக்கு வருவதில் சொதப்பாதவர் என்று நற்சான்றிதழ் கொடுத்திருந்தார். ஆனால் அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாராம் ஆசின்.

வேல் படத்தில் நடிக்கக் கொடுத்திருந்த கால்ஷீட்டை தற்போது ஆமிர்கானுடன் நடித்து வரும் கஜினிக்குக் கொடுத்து விட்டாராம் ஆசின்.

இதுகுறித்து வேல் பட இயக்குநர் கூறுகையில், வேல் படத்தில் மீதமுள்ள காட்சிகளை முடிப்பற்காக ஆசினுக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு ஆசின் கொடுத்திருந்த கால்ஷீட்டை தியாகம் செய்து கஜினி படத்தில் நடிக்க அனுப்பியுள்ளோம்.

ஆமிர்கானும், ஆசின் திரும்பி வர சில நாட்கள் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே காத்திருக்கிறோம் என்றார்.

ஆசின் கஜினிக்குப் போய் விட்டதால் கிட்டத்தட்ட 3 வாரங்களாக படப்பிடிப்பு நின்றிருக்கிறதாம். இருப்பினும் தீபாவளிக்குப் படத்தைக் கொண்டு வருவதில் ஹரி உறுதியாக இருக்கிறாராம்.

இதற்கிடையே, தான் ஒன்றரை கோடி ரூபாய் முதல் 2 கோடி வரை சம்பளம் கேட்பதாக வெளியாகியுள்ள செய்தியால் (நாம் போடவில்லை) ஆசின் 'அப்செட்' ஆகியிருக்கிறாராம்.

இதுகுறித்து ஆசின் நம்மிடம் கூறுகையில், ஏன் இப்படி உள்நோக்கத்துடன் வதந்தியைக் கிளப்புகிறார்கள் என்று புரியவிலல்லை.

இது முற்றிலும் தவறான, அவதூறான செய்தி. எனது நிலை என்னவென்று எனக்குத் தெரியும்.

எனது தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் என்னைப் பற்றியும், எனது சம்பளம் குறித்தும் அறிவார்கள். அதை எப்படி நான் டீல் செய்கிறேன் என்பதையும் அறிவார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிக்கைகளுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ைல.

இந்தி கஜினி படத்தில் நடிப்பதற்கு வேல் பட இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் நான் முன்பே அனுமதி வாங்கி விட்டேன்.

இந்த நிலையில் இதுகுறித்து தவறான முறையில், பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறார்கள். நல்ல சினிமாவை உருவாக்குவதில் மீடியாக்கள் உதவி புரியவேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக பெயரைக் கெடுக்கும் வேலையில்தான் பல மீடியாக்கள் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பொங்கித் தீர்த்தார் ஆசின்.

கூல் ஆசின் கூல்!

Read more about: asin
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil