»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீவா இயக்கி வரும் பெப்சி படத்தில் அறிமுகமாகிறார் ஆஷின்.

இவரும் வழக்கம் போல கேரளா தான். அடிப்படையில் இவர் ஒரு மாடலிங் கேர்ள். டிவி விளம்பரங்களில்நிறையவே தலை காட்டியிருக்கிறார்.

ஒரு மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இவரது படத்தை ஒருபத்திரிக்கையில் பார்த்த ஜீவா, மாடல் கோ-ஆர்டினேட்டர்களை வளைத்துப் பிடித்து ஆஷினை வரவழைத்தாரம்.

சிறந்த ஒளிப்பதிவாளரான ஜீவா, சில ஸ்டில்களை எடுத்துப் பார்த்தவர், நீங்க தான் என் படத்தில் ஹீரோயின் என்றுகூறிவிட்டு கையோடு புரடியூஸர் முன் போய் நிறுத்தி, அட்வான்ஸையும் வாங்கித் தந்துவிட்டாராம்.

நடிப்பு எனக்கு புதிதல்ல. ஆனால், தமிழில் நடிக்க திடீர்னு கிடைச்ச சான்ஸ்.. அதுவும் ஹீரோயினா.. படுதிரில்லிங்காக இருக்கு என்கிறார் ஆஷின். இவரது அப்பா சி.பி.ஐயில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம். அம்மாடாக்டராம். இப்போது இவரது குடும்பம் ஒரு மருந்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதனால் பணத்துக்குபஞ்சமில்லை.

மாடலிங் கூட ஒரு இன்ட்ரஸ்டுக்காகத் தான் செய்தேன். பணம் இரண்டாம் பட்சம் தான்.

சினிமாவிலும் சான்ஸ் தேடிஅலைய மாட்டேன். நல்லா நடிக்கனும், நல்ல பெயர் வாங்கனும். அவ்வளவு தான். பணம் பெரிதல்ல என்கிறார்தெளிவாகவே.

ஜீவாவைப் பற்றி விசாரித்தோம். நல்ல திறமைசாலி, ஜென்டில் மேன் என்றார்கள். அதனால் தான் உடனே நடிக்கஒப்புக் கொண்டேன் என்கிறார் ஆஷின்.

சிறு வயதில் இருந்தே மேற்கத்திய நடனமும் கற்றிருக்கிறார். கையை ஆட்டிப் பேசுவதிலேயே நாட்டிய நளினமும்தெரிகிறது. அப்புறம் இன்னொரு விஷயம், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். அழகை அருவருப்பில்லாமல் வெளிப்படுத்தும் அளவுக்கு எக்போஸ் பண்ண நான் ரெடி என்கிறார்.

வாழ்க வளமுடன் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil