»   »  பெரியம்மா நக்மா!

பெரியம்மா நக்மா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தங்கச்சி ஜோதிகாவின் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பணியில் படு பிசியாக இருக்கிறாராம் நக்மா.

குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக தாய் வீடான மும்பைக்குச் சென்றுள்ளார் ஜோதிகா. கணவர் சூர்யா, வாரணம் ஆயிரம் பட ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயுள்ளதால் குழந்தை தியாவுடன் மும்பைக்கு அம்மா வீட்டுக்குப் போயுள்ளார் ஜோதிகா.

ஜோதிகா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊர் வந்திருப்பதால் அக்கா நக்மா தனது ஷூட்டிங்குகளை ரத்து செய்து விட்டு ஜோதிகாவையும், அவரது குழந்தையையும் பார்த்துக் கொண்டு வீட்டோடு இருக்கிறாராம்.

தியாவுக்காக ஏகப்பட்ட பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் வீடு முழுக்க வாங்கிப் போட்டு நிரப்பி விட்டாராம் நக்மா. தியாவுடன் சேர்ந்து அவரும் ஒரு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.

தியாவைப் பார்த்து நக்மா சந்தோஷமடைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது தியா என்ற பெயரை பரிந்துரைத்தவரே நக்மாதானாம்.

இதுகுறித்து நக்மா கூறுகையில், பெயர் தேர்வு செய்தபோது சிவக்குமார் சார் தாராளமாக நடந்து கொண்டார். தியா என்ற பெயரை அவரும், அவரது குடும்பத்தினரும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டனர். எங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளாள் தியா என்று பெருமை பொங்கக் கூறினார்.

பாசமான பெரியம்மாதான்!

Read more about: jyothika, nagma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil