twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷுக்கு பொல்லாதவன் போல ஜி.வி.பிரகாஷுக்கு ஐங்கரன்... இயக்குனர் ரவிஅரசு சிறப்பு பேட்டி

    ஐங்கரம் படம் ஜி.வி.பிரகாஷுக்கு திருப்புமுனையாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் ரவிஅரசு தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    ஜி.வி. பிரகாஷை பற்றி ஐங்கரன் இயக்குனர் பேட்டி!- வீடியோ

    சென்னை: நடிகர் தனுஷுக்கு பொல்லாதவன் படம் திருப்புமுனையாக அமைந்தது போல், நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஐங்கரன் படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் ரவிஅரசு தெரிவித்துள்ளார்.

    நடிகர் அதர்வாவை வைத்து ஈட்டி என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ரவிஅரசு. இவர் தற்போது, ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக வைத்து, ஐங்கரன் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    Ayngaran will take G.V.Prakash to next level: Director Raviarasu

    ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் பணியில் மிகத்தீவிரமாக இருந்த அவரை, ஒரு மதிய உணவு இடைவேளையில் சந்தித்தோம். ஒன்இந்தியாவுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி....

    ஐங்கரன் - எப்போ ரிலீஸ்?

    ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி. மற்ற எல்லா காட்சிகளும் முடிந்துவிட்டது. எடிட்டிங் பணியில் பெரும்பாதி முடிவடைந்துவிட்டது. பாடல் காட்சிக்காக அடுத்த வாரம் கோவா செல்ல இருக்கிறோம். அது முடிந்துவிட்டால், ஜூலை மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

    படத்துக்கு ஐங்கரன்னு பெயர் வைக்க என்ன காரணம்?

    இது இளம் விஞ்ஞானிகளை பற்றிய கதை. இந்த படத்துல மெக்கானிக்கல் இன்ஜினியரா ஜி.வி. நடிச்சிருக்கார். ஒருத்தனுக்கு
    ஐந்து கை இருந்தா எவ்வளவு வேலைகளை செய்வானோ, அவ்வளவு வேலைகளையும் இரண்டு கைகளால செய்ரவர் தான் என் படத்தோட ஹீரோ. படத்தை பார்க்கும் போது, ஆடியன்சுக்கு டைட்டில் காரணம் நிச்சயம் புரியும்.

    உங்க முதல் படமான ஈட்டி பெரிய ஹிட். அப்படி இருந்தும் அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு இடைவெளி? மட்டுமல்லாம பெரிய ஹீரோ சப்ஜட்டா போகாமா ஏன் ஜி.வி.யுடன் கூட்டணி அமைச்சீங்க?

    ஈட்டி படம் நான் எதிர்பார்த்ததைவிட பெரிய ஹிட். அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தபிறகு, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பெரிய ஹீரோக்கள்ட தான் முயற்சி பண்ணினேன். ஆனால் சில காரணங்களால அது நடக்கல. எதார்த்தமா ஒரு நாள் ஜி.வி.யை மீட் பண்ணப்போதான், அவர் இந்தப் படத்துக்குள்ள வந்தார். ஆனால் நான் நினைச்சதைவிட பிரமாதப்படுத்திட்டார்.

    வேறலெவல்...

    ஜி.வி.க்கு இந்த படத்துல நிறைய ஆக்‌ஷன் பிளாக் இருக்கு. ஆக்‌ஷன் சீக்வென்ஸ் எல்லாமே கதையாடு சேர்ந்து டிராவல் பண்றமாதிரி அமைச்சிருக்கோம். உண்மையிலேயே ஜி.வி. சூப்பரா பண்ணியிருக்கார். தனுஷுக்கு எப்படி பொல்லாதவன் படம் ஒரு திருப்புமுனையா அமைந்ததோ, அதேபோல ஐங்கரன் படம் ஜி.வி.யை வேற லெவலுக்கு கொண்டு போகும்.

    ஹீரோயின் மஹிமா பத்திச் சொல்லுங்க?

    இந்தப் படத்துல ஜி.வி.க்கு ஜோடியா மஹிமா நடிச்சிருக்காங்க. ரொம்ப டெடிக்கெட்டட் ஆர்டிஸ்ட். அவுங்களுக்கும் இந்த படம் திருப்புமுனையா அமையும்.

    ஈட்டி படத்துல கிளான்ட்ஸ்மேன் திராம்பஸ்தேனியா என்ற ஒரு புது நோயை அறிமுகப்படுத்துனிங்க... இந்த படத்துல என்ன புதுசு?

    (சிரிக்கிறார்)... இந்த படத்தைப் பொறுத்தவரைக்கும் திரைக்கதையில வித்தியாசமான முயற்சிகள் பண்ணியிருக்கோம். இரண்டாம் பாதி முழுவதும் லைவ் லொக்கேஷன்ஸ்ல தான் எடுத்திருக்கோம். ஆடியன்சுக்கு அது புது அனுபவமா இருக்கும். மத்தபடி, டெக்னிக்கலாவும் படம் சவுண்டா இருக்கும்.

    English summary
    Actor G.V.Prakash starrer Ayngaran movie's director Raviarasu is confident that the movie will take G.V.P. to next level.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X