»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவ்வளவு பெரிய படத்தை (பாபா) 3 மாதங்களில் முடித்தது சாதனை தான் என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்தப் படப் பிடிப்பு தொடங்கிய பின்னர் அவர் முதல்முறையாக சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.

"படையப்பா" படத்திற்குப் பின்னர் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் காமிரா பக்கமே திரும்பாத ரஜினிகாந்த்,கடந்த மார்ச் 24ம் தேதி "பாபா" படப்பிடிப்பைத் தொடங்கினார்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ரஜினி படமே வராததால் தீபாவளி, பொங்கல் என்று ஒரு பண்டிகையும்கொண்டாடாமல் துவண்டு போயிருந்த அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து வேலைகளும் மளமளவன்று நடந்தன.சென்னை தவிர மைசூர், ஹைதராபாத் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) படப்பிடிப்பு முழுமையாகமுடிவடைந்தது. மொத்தம் 75 நாட்கள் "பாபா" படப்பிடிப்பு நடந்துள்ளது.

கண்களை மூடியபடி இருந்த ரஜினி ""ஜெய் அருணாச்சலேஸ்வரா... ஜெய் காளிகாம்பாள்... ஓம் பரம்பொருள்பாபா"" என்று பேசிய வசனத்துடன் புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதி நேற்று படப்பிடிப்பை முடித்துவைத்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி ரஜினிகாந்த் நிருபர்களை அழைத்து கிண்டியில் உள்ளகேம்பகோலா மைதானத்தில் பேட்டி கொடுத்தார்.

ரஜினி பேட்டி:

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், கறுப்பு பேண்ட்டும் வெள்ளைச்சட்டையும் அணிந்திருந்தார். ராஜஸ்தான் பாணியில் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு தலைப்பாகைஅணிந்திருந்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடக்கும் இந்த நல்ல நாளில் உங்களை எல்லாம்சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீராகவேந்திரருக்கும் உகந்த நாள் இது.

ஆன்மீகம் உண்டு:

ஜூலை 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஆண்டவன் அனுக்கிரஹத்தாலும்தெய்வ பலத்தாலும் "பாபா" படப்பிடிப்பு வெகு விரைவாகவே நடந்து முடிந்து விட்டது. இவ்வளவு பெரிய படத்தைமூன்றே மாதங்களில் முடித்தது பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

என்னிடமிருந்து ரசிகர்கள் என்ன என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அவை அனைத்தும் "பாபா"வில்உள்ளது. நானும் அப்படிப்பட்ட ஒரு வேடத்தில் தான் நடித்துள்ளேன்.

ஆனால் படத்தில் ஆன்மீகமும் கலந்துள்ளது. காளிகாம்பாள் கோவில் தெருவில் வசிக்கும் ஒரு சாதாரணமனிதனாக நான் நடித்துள்ளேன்.

சண்டைக்கு முக்கியத்துவம்:

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் "மகாகுரு" என்ற இந்திப் படத்திற்குப் பின்னர் "பாபா"வில் தான் சண்டைக்காட்சிகளில் மிகவும் "ரிஸ்க்"கெடுத்து நடித்துள்ளேன்.அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. "பெப்சி" விஜயன் அருமையாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

மேலும் இதுவரை என்னுடைய படங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் அரங்குகள் இந்தப் படத்தில்பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆர்ட் டைரக்டர் ஜீ.கே. கடுமையாக உழைத்துள்ளார்.

எப்போதுமே வேகமாகச் செயல்படக் கூடிய சோட்டா கே. நாயுடு என்பவர் தான் "பாபா" படத்திற்கானஒளிப்பதிவைச் செய்துள்ளார்.

"நோ" அரசியல்:

இந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது என்றும் சொல்ல மாட்டேன். இல்லை என்றும் சொல்ல மாட்டேன்.

ஆனால் யாரையும் தாக்கும் வகையிலான அரசியல் வசனம் எதுவும் இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

"லோக்கல்" சுரேஷ் கிருஷ்ணா:

"பாபா" படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா பார்ப்பதற்குத் தான் படு டீஸன்டாக இருப்பார். ஆனால் அவர் பக்காலோக்கல் (சிரிப்பு). இவர் ஒரு நல்ல வியாபார ரீதியான டைரக்டரும் கூட.

"படையப்பா"வில் நீலாம்பரியாக வந்து கலக்கிய ரம்யா கிருஷ்ணன் இதிலும் நீலாம்பரியாகவே வருகிறார்.

"லேட்டா வந்தாலும்...

மேலும் இதற்கு முன் வந்த என்னுடைய படங்களைப் போலவே "பாபா"விலும் ஒரு பஞ்ச் வசனங்களைவைத்திருக்கிறேன்.

அவற்றில் ஒன்று தான் "பாபா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றான்" என்று கூறிய ரஜினிகாந்த் வெகு வேகமாகஎழுந்து செல்ல முயற்சித்தார்.

ஆனால் நிருபர்கள் அவரைச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, போட்டோவுக்கு "போஸ்" கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். ரஜினியும் அதன் பின்னர் சிரித்துக் கொண்டே பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்குப்பொறுமையாக "போஸ்" கொடுத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil