Bad Girl: புடிச்சவன் கூட போனா.. Bad Girl ஆ.. இயக்குநர் கொடுத்த விளக்கம்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 'பேட் கேர்ள் படக்குழுவினர் Cineulagam யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில், படத்திற்கு பேட் கேர்ள் என தலைப்பு வைத்ததன் நோக்கமே, யாருமே பேட் கேர்ள் இல்லை என்பதை குறிக்கும் விதமாக தான் படத்திற்கு இந்த பெயர் வைத்தோம். இந்த உலகத்தில் யாருமே பேட் கேர்ள் இல்லை ,கெட்ட பெண் என்ற சொல்வதில் அர்த்தம் இல்லை. அது நாமாகவே வைத்துக் கொள்ளும் ஒரு லேபிள். இந்த படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் தனக்கு விரும்பிய ஒருவரோடு வாழ வேண்டும் ஆசைப்படுகிறாள். அவள் எப்படி பேட் கேர்ள் ஆவாள்.

பேட் கேர்ள்: இந்த காலகட்டத்தில் வரும் படங்கள் கூட மிகவும் பிற்போக்குத்தனமான படங்களாக இருக்கிறது. அதற்காக அதுபோன்ற படங்கள் வெளியே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது போன்ற திரைப்படங்களே தொடர்ந்து வருவதற்கு காரணம் அனைத்து இயக்குனரும் ஆண்களாக இருக்கிறார்கள். பெண் இயக்குனர்களால் மட்டும் தான் பெண்களுக்குரிய விஷயங்களை குறித்து எடுத்துச் சொல்ல முடியும், அதற்காக எல்லா பெண் இயக்குனர்களும் பெண்களைப் பற்றிய படத்தைத்தான் எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 'பேட் கேர்ள்' படத்தின் மூலமாக ஏதாவது ஒரு புரட்சி நடந்து மாற்றம் நடந்து விடுமா என்ற ஏக்கத்தோடு நான் கதையை எழுதவில்லை. ஆனால் அப்படி ஏதாவது நடந்தால் மகிழ்ச்சி தான்.
அவருக்கு படம் பிடித்துவிட்டது: இயக்குனர் வெற்றிமாறன் முதலில் மூன்று நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அதன் 'ரஷ்சை' பார்த்து எனக்கு படம் எடுக்க வருதா என செக் செய்தார். அனுராக் காஷ்யப் படத்தின் கதையை ஏற்கனவே கேட்டுவிட்டார். ஆனால், சில காரணங்களால் அவரால் இந்த படத்தை தயாரிக்க முடியாமல் போனது, அதன் பிறகு படத்தை முடித்துவிட்டு அவரிடம் படத்தை போட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு மிகவும் இன்ஸ்பிரசாகி எப்படியாவது நான் இந்த படத்திற்குள் வர வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த படத்தில் இணைந்தார். அதன்பிறகு வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் 'பேட் கேர்ள்' படம் என விளம்பரப்படுத்தப்பட்டது என்று படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











