ரெண்டு பொண்டாட்டி தொல்லையே தாங்கல.. இதுல மாதம்பட்டி ரங்கராஜுக்கு புதுசா ஒண்ணா?.. பயில்வான் பகீர்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்து உள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதன் youtube சேனலில் மாதம்பட்டி ரங்கராஜின் புது காதலி குறித்து பேசி இருக்கிறார்
அதில், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜாய் கிரிஸில்டாவிற்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. மாதம்பட்டி ரங்கராஜனுடன் ஜாய் பபழகிய நிலையில் ஏற்கனவே இரண்டு முறை ஜாய் கர்ப்பமாகி இருக்கிறார். இதில் மாதம்பட்டிக்கு விருப்பம் இல்லாததால், கருவை கலைத்து இருக்கிறார். மூன்றாவது முறையாக ஜாய் கிரிஸில்டா கர்ப்பமாகி இருக்கிறார். ஆனால், அவர் கருவை கலைக்கவில்லை, கருவை கலைக்க சொல்லி மாதம்பட்டி ஜாய்யை அடித்தும் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் சோசியல் மீடியாவில் திருமணம் புகைப்படத்தையும் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஜாய் கிரிஸில்டா பகிர்ந்திருந்தார்.

ஜாய் கிரிஸில்டா: தற்போது, ஜாய் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மனு தாக்கல் செய்துள்ளார். மாதத்திற்கு ஆறு லட்சமா என்று நமக்கு தோன்றலாம், அவர் ஆடம்பரமாக வாழ்ந்தவர் என்பதால், வீட்டு வாடகை, குழந்தை பராமரிப்பு என எல்லாத்தையும் சேர்த்து கணக்கு போட்டு கேட்டு இருக்கிறார்.
இரண்டாவது காதலி: இப்படி மாதம்பட்டி ரங்கராஜை சுற்றி பல சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், புது காதலியுடன் சுற்றி வருகிறார். அது வேறு யாரும் இல்லை, குக் வித் கோமாளியில் வந்த சுனிதா தான். தற்போது, சுனிதா மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடித்து வரும் மிஸ் மேகி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். சுனிதாவும் மாதம்பட்டி ரங்கராஜ் அப்பாவி, ரொம்ப நல்லவர் என அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேறு ஒரு பெண்ணுக்கும் ரங்கராஜ் ரூட் விட்டார். ஆனால், அந்த நடிகை நிகழ்ச்சியில் இருந்தே விலகிவிட்டார்.
திட்டும் இணையவாசிகள்: தன்னை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கிளுகிளுப்பாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் மாதம்பட்டி ரங்கராஜ் என்று சொல்வதற்கு பதிலாக மாதம்பட்டி சிவக்குமார் என்று சொல்கிறீர்கள், ஒரு பெயரைக்கூட சொல்லத் தெரியவில்லை, ஆனால், அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி வாய்க்கு வந்ததை பேசுகிறீர்கள் என பலரும் பயில்வானை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











