உதட்டை கிழித்து.. இளைஞரை கொடுமைப்படுத்திய லட்சுமி மேனன் கேங்.. பயில்வான் சொன்னதை கேட்டா பதறுதே!
சென்னை: நடிகை லட்சுமி மேனன் தனது தோழி உள்பட 3 பேருடன் பாருக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பாரில் இருந்து புறப்பட்டனர். பாரை விட்டு வெளியே வந்தபிறகும் அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. அதில், லட்சுமி மேனனின் கேங், ஐ.டி. ஊழியர் காரில் கடத்தி, அவரை தாக்கி ஒரு இடத்தில் இறங்கி விட்டுள்ளனர்.
இதையடுத்து, ஐடி ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், லட்சுமி மேனின் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த லட்சுமி மேனன் தற்போது முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதுகுறித்து புதிய சிந்தனை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன் பாரில் நடந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
நடிகை லட்சுமி மேனன்: பொதுவாக மலையாள சினிமாவில் நடிகைகளை தான் கடத்துவார்கள், அது தொடர்பான வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், இப்போது கலிகாலம் என்பதை நிரூபிக்கும் வகையில் லட்சுமி மேனன் ஒருவரை கடத்தி இருக்கிறார். ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் பாருக்கு சென்று சரக்கு அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் சிக்கியதே பாரில் நடந்த சண்டையால் தான் அந்த சண்டை கைகலப்பாகி, அது தொடர்பான விசாரணை நடத்தும் போது தான் போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் சிக்கினார்.

தலைக்கு ஏறிய போதை: லக்ஷ்மிமேனன் தனது தோழியுடன் பாருக்கு சென்று இருக்கிறார். தோழிக்கு போதை ஏறி விட, அங்கு வந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் லட்சுமி மேனனின் கேங், அந்த ஐடி ஊழியரை காருவில் கடத்திக்கொண்டு சென்று காரில் வைத்தே அவனை படாத பாடு படுத்து இருக்கிறார்கள். அவனது உதட்டை கிழித்து, காதை கடித்து சொல்ல கூடாத இடங்களில் எல்லாம் அவனைத் தொட்டு இந்த இளைஞரை டார்ச்சர் செய்து இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து மீண்டு வந்த அந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
குடிக்கு அடிமையான லட்சுமி மேனன்: தலைக்கேறிய போதையால் இப்படி நடந்து கொண்டு இருக்கிறார்கள், இவை அனைத்தும் லட்சுமி மேனனின் முன்னிலையில் தான் நடந்தது. அவர் கூட அந்த இளைஞரிடம் வரம்பு மீறி நடந்து இருக்கலாம், அங்கு இருந்தவர்களுக்கு தான் என்ன நடந்தது என்று தெரியும். ஆனால், இது லட்சுமி மேனனுக்கு முதல் தடவை அல்ல, ஏற்கனவே லட்சுமி மேனன், நகைச்சுவை நடிகர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சரக்கு அடித்து விட்டு, ஆட்டம் போட்டார். அதன்பின் அங்கு இருந்தவர்கள், அவரை காரில் அழைத்துச் சென்று வீட்டில் பத்திரமாக விட்டனர்.
இதை பற்றி நான் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறேன். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உஷாராகி அவரை படங்களில் கமிட் செய்வதை தவித்தனர். இதுபற்றி லட்சுமி மேனனே ஒரு பேட்டியில் பேசி இருந்தார். தமிழகத்தில் என்னை குடிகாரி என முத்திரை குத்திவிட்டார்கள். இதனால், தமிழில் எனக்கு படங்கள் வருவதே இல்லை என சொல்லி இருந்தார். தலைமறைவாகி இருக்கும் லட்சுமி மேனன், முன் ஜாமீன் பெற்று இருக்கிறார். ஆனால், இந்த முன் ஜாமீன் எப்போது வேண்டுமானாலும் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











