சுசித்ராவை பிடித்து இருக்கும் ஏழரை சனி.. வனிதா போல கெட்ட பெயர்.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா, தனது இன்ஸ்டாகிராமில் என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல வந்த சண்முகம், என் வாழ்க்கைக்குள் வந்தார். 48 வயதில் என் மனதில் காதல் வந்தது. சண்முகம், நானும் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளால் படாத பாடுபட்டுவிட்டேன், நீதியும் தனுஷ், கார்த்திக் ராஜாவால் வாழ்க்கையை தொலைத்துவிட்டாய், இனி மேல் உனக்கு நான் எனக்கு நீ என்று இருப்போம், என பல விதமான ஆறுதல் வார்த்தைகளை சொல்லி என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தார்.

நானும் அவர் சொல்வது எல்லாம் உண்மை என நினைத்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி பணம் மொத்தத்தையும் சுருட்டிவிட்டார். தினமும் என்னை அடித்து உடைத்து மிதித்து கொடுமைப்படுத்தினார். இப்போது என் வீட்டில் சண்முகம் அவரின் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மீது ஆறு வழக்குகள் போட இருப்பதாக பேசி இருந்தார். இதுகுறித்து புதிய சிந்தனை யூடியூப் சேனலுக்கு பேட்டி பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.

Suchitra Bailwan ranganathan interview
Photo Credit:

பயில்வான் ரங்கநாதன்: அதில், பாடகி சுசித்ரா ஒரு வருடத்திற்கு முன் என்னுடன் பேசிய போது, வழக்கறிஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருப்பதாக சொன்னார். என்னுடைய பாதுகாப்பிற்காக அவரை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னார். இதெல்லாம் தேவையா என்று நான் கேட்டேன். என்னுடன் சுசித்ரா நன்றாகத்தான் பேசுவார். ஆனால், ஒரு முறை இருவரும் சேர்ந்து youtube சேனல் ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை, பல சேனல்களில் நான் பேசி வருகிறேன். ஆனால், தனியாக youtube சேனல் ஆரம்பிக்க எனக்கு விருப்பமில்லாததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதனால் என் மீது அவர் கோபமாக இருந்தார்.

நம்புறமாதிரி இல்லை: சுசித்ரா வீடியோவில் என்னுடைய பெயரை சொல்லி இருப்பதற்கு காரணம் பப்ளிசிட்டியாக கூட இருக்கலாம். பயில்வான் பெயரை சொன்னால் வீடியோ நன்றாக ஓடும் என்பதற்காக கூட சுசித்ரா அப்படியே சொல்லி இருக்கலாம். ஆனால், உலக நியாயம் அனைத்தையும் தெரிந்த சுசித்ரா இப்படி ஏமாந்து விட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இரண்டு வருடமாக ஒருவருடன் வாழ்ந்த பிறகு அவன் எப்படிப்பட்டவன் என்று யூகிக்க முடியவில்லை என்று சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை. அதுமட்டுமல்லாமல் 45 நிமிடமாக அடித்து உதைத்ததாக சொல்லி இருக்கிறார். அப்படி அடித்து இருந்தால், போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும் அதை ஏன் செய்யவில்லை.

ஏழரை சனி: சுசித்ரா பேசாமல் அமைதியாக இருந்தால், சிலர் பாடுவதற்கும், டப்பிங்கிற்கும் கூப்பிடுவார்கள். ஆனால், தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள், வனிதா விஜயகுமார் போல, அனைவரிடத்திலும் கெட்ட பெயர் எடுத்து வருகிறார். அதே போல சுசித்ராவும் அனைவரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். அவரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. மனம் பேதலித்து போன ஒரு அபலையின் குரல், சுசித்ரா போட்ட வழக்கு எடுத்துக்கொள்வார்களா என்று கூட தெரியாது. சுசித்ராவை தற்போது ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது என பயில்வான் ரங்க நாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X